spot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்அண்டை நாடுகள் மீது நடந்த தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்!!

அண்டை நாடுகள் மீது நடந்த தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்!!

-

- Advertisement -

அண்டை நாடுகள் மீது நடந்த தாக்குதல்களுக்கு வருத்தம் தெரிவித்து ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார்.அண்டை நாடுகள் மீது நடந்த தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்!!வளைகுடா பகுதி நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளின் நிலப்பரப்பை பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாதவரை, அவர்களுக்கு எதிராக இனி தாக்குதல் நடைபெறாது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் தற்போது எட்டாவது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் முயற்சியாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

we-r-hiring

இந்த தாக்குதல்களின் போது , சவுதி அரேபியா, யுஏஇ. கத்தார். ஓமன் மற்றம் பஹ்ரைன் ஆகிய நாடுகளின் பகுதிகளும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே இன்று காலை ட்ரோன் தாக்குதல் நடந்ததாக கூறப்பட்டாலும், இதில் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்டை நாடுகள் மீது நடந்த தாக்குதல்களுக்கு வருத்தம் தெரிவித்து ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அண்டை நாடுகளின் நிலப்பரப்பை பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் சூழ்நிலையில் மட்டுமே பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், இல்லையெனில் அத்தகைய தாக்குதல்கள் தொடராது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை நடைபெற்ற தாக்குதல்களுக்கு மன்னிப்பு கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா தாக்குதிலில் ஈரான் போர்க் கப்பல் மூழ்கியது… 100 வீரர்கள் கதி என்ன?

MUST READ