இலங்கை கடல்பகுதியில் ஈரான் போர்க் கப்பல் மீது அமரிக்கா தாக்கியதில் பலர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இலங்கை கடற்பகுதியில் ஈரான் நாட்டை சேர்ந்த போர்க் கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பிறது கப்பல் மூழ்கியதாகவும், அதில் இருந்த பலர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இலங்கை கடற்கரையில் இருந்து 40 கடல் மைல் தொலைவில் பயணித்து கொண்டிருந்த IRIS DENA என்ற ஈரான் போர்க் திடீரென தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலின் தாக்கத்தில் கப்பல் கடலில் மூழ்கியதாகவும், அதில் இருந்த சுமார் 100 வீரர்களை காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்குப் பின்னர் உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. மூழ்கிய கப்பலில் இருந்து ஆரம்ப கட்டத்தில் 30 பேர் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கடலில் தத்தளித்த 78 வீரர்களை இலங்கை கடற்படை உயிருடன் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட வீரர்கள் காலே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காணாமல் போன மற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முற்றும் ஈரான்- இஸ்ரேல் போர்…இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுமா?


