ஜப்பானில் 12-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர், சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த இளம் பெண் மீது விழுந்ததில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக இந்த அசம்பாவிதத்தில் 12-வது மாடியில் இருந்து குதித்த இளைஞர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
ஜப்பானில் நள்ளிரவு நேரத்தில் 29 வயதான சின்செய் என்ற இளைஞர், திடீரென தான் இருந்த கட்டிடத்தின் 12-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அதே நேரத்தில், அப்பகுதியில் உள்ள சாலையில் இனாயா (23) என்ற இளம் பெண் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். எதிர்பாராத விதமாக, 12-வது மாடியில் இருந்து வேகமாகப் பாய்ந்து வந்த சின்செய், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இனாயா மீது பயங்கர வேகத்தில் விழுந்தார்.

ரத்த வெள்ளத்தில் இருவர்: பெண் பரிதாபப் பலி
இந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருவரும் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், பலத்த காயமடைந்த 23 வயது பெண் இனாயா சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதேவேளையில், 12-வது மாடியில் இருந்து கீழே விழுந்த சின்செய் (29) தீவிர காயங்களுடன் உயிர் தப்பி, மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
காரணம் குறித்து தீவிர விசாரணை
சின்செய் எதற்காக 12-வது மாடியில் இருந்து குதித்து இந்த விபரீத முடிவை எடுத்தார் என்பது குறித்து ஜப்பான் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவரின் விபரீத முயற்சியால், பாதசாரியாகச் சென்ற அப்பாவி இளம் பெண் உயிரிழந்த சம்பவம் ஜப்பானில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாடாளுமன்றம் அதிரடி: 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை!
