Homeசெய்திகள்உலகம்எவரெஸ்ட் பனிப்பாறைகள் உருக மனிதச் சிறுநீரும் முக்கிய காரணம்! — புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சித்...

எவரெஸ்ட் பனிப்பாறைகள் உருக மனிதச் சிறுநீரும் முக்கிய காரணம்! — புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

-

- Advertisement -

உலகிலேயே மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதற்குப் புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் மட்டுமே காரணமில்லை,எவரெஸ்ட் பனிப்பாறைகள் உருக மனிதச் சிறுநீரும் முக்கிய காரணம்! — புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

மலையேற்ற வீரா்கள் கழிக்கும் மனிதச் சிறுநீரும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது என நேபாளம் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்த நடத்திய புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

அடிவார முகாமில் சேரும் 6,000 லிட்டர் சிறுநீர் எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்காக உலகெங்கிலும் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மலையேற்ற வீரர்களும் அவர்களுக்கு வழிகாட்டும் ஷெர்பாக்களும் (Sherpas) வருகின்றனர்.

மலையேற்றத்தின் போது அவர்கள் தங்கும் எவரெஸ்ட் அடிவார முகாமில் (Base Camp) இந்த விசேஷ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் முடிவில், அடிவார முகாமில் தங்கும் வீரா்களும் வழிகாட்டிகளும் தினமும் சராசரியாக 6,000 லிட்டர் சிறுநீரைப் பனியில் கழிக்கின்றனர் என்ற அதிர்ச்சி செய்தி தெரியவந்துள்ளது.

ஒரு சீசனில் 154 டன் பனி உருகும் அபாயம் மனிதச் சிறுநீரில் உள்ள இயல்பான வெப்பம் மற்றும் அதில் அடங்கியுள்ள சோடியம் போன்ற தாது உப்புகள், யூரியா உள்ளிட்ட வேதிப்பொருள்கள் பனியின் உறைநிலையைக் கணிசமாகக் குறைக்கின்றன.

பனியின் மீது சிறுநீர் விழும்போது, வேதிவினைகள் காரணமாக அப்பகுதியில் உள்ள பனி விரைவாக உருகத் தொடங்குகிறது. இதன்காரணமாக, ஒரு மலையேற்ற சீசனில் மட்டும் தோராயமாக 154 டன் பனிப்பாறைகள் உருகுவது இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை
எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கும்பு பனிப்பாறை (Khumbu Glacier) ஏற்கனவே புவி வெப்பமயமாதல் காரணமாக வேகமாக உருகி வருகிறது.

இந்நிலையில், மனிதக் கழிவுகளால் பனி உருகுவது மேலும் தீவிரமடைவதுடன், மலையடிவாரத்தில் உள்ள நன்னீர் ஆதாரங்களையும் மாசுபடுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, எவரெஸ்ட் மலையேற்றப் பாதையில் மனிதக் கழிவுகளை அகற்றக் கடுமையான கழிவு மேலாண்மை விதிகளைக் கொண்டுவர வேண்டும் என்றும், சிறுநீரைச் சேமித்து பாதுகாப்பாக மறுசுழற்சி செய்யும் நுட்பங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் நேபாள அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

பாகிஸ்தானில் வரலாற்றுச் சீர்திருத்தம்: முப்படைகளின் உச்ச அதிகார அமைப்பாக அசிம் முனீர் நியமனம்!

MUST READ