Homeசெய்திகள்உலகம்‘பின்வாசல் வழியாக’ உலகக்கோப்பையில் நுழைவது தவறானது – இத்தாலி உறுதி

‘பின்வாசல் வழியாக’ உலகக்கோப்பையில் நுழைவது தவறானது – இத்தாலி உறுதி

-

- Advertisement -

ஃபிஃபா கால்பந்து உலககோப்பையில், ஈரானுக்கு பதிலாக பங்கேற்க, இத்தாலி மறுப்பு தெரிவித்துள்ளது. 4 முறை உலகக்கோப்பையை வென்ற இத்தாலி, இத்தகைய சலுகையை ‘பின்வாசல் வழியாக’ உலகக்கோப்பையில் நுழைவது தவறானது என விளக்கமளித்துள்ளது.‘பின்வாசல் வழியாக’ உலகக்கோப்பையில் நுழைவது தவறானது – இத்தாலி உறுதி2026 ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையை முன்னிட்டு சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை காரணமாகக் கொண்டு, ஈரான் அணி கடைசி நேரத்தில் விலகும் சூழல் ஏற்பட்டால், அதற்குப் பதிலாக இத்தாலி அணியை சேர்க்கும் யோசனை முன்வைக்கப்பட்டது. இந்த அழைப்பை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தரப்பில் இருந்து பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

ஆனால், இந்த வாய்ப்பை இத்தாலி திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ஆண்ட்ரியா அபோடி, “இது நல்ல யோசனை அல்ல, மேலும் இத்தகைய வாய்ப்பை ஏற்க முடியாது” என்று தெளிவுபடுத்தினார். தகுதிச் சுற்றில் தோல்வியடைந்த நிலையில், மைதானத்தில் தகுதி பெறாமல் ‘பின்வாசல் வழியாக’ உலகக்கோப்பையில் நுழைவது தவறானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

we-r-hiring

நான்கு முறை உலகக்கோப்பையை வென்ற பெருமை கொண்ட இத்தாலி அணி, தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக உலகக்கோப்பைக்குத் தகுதி பெறாத நிலையில் இருந்தாலும், இந்த சலுகையை “அவமானகரமானது” எனக் கருதி மறுத்துள்ளது. தகுதி என்பது மைதானத்தில் மட்டுமே நிரூபிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

இதற்கிடையில், ஈரான் அணி உலகக்கோப்பையில் நிச்சயமாக பங்கேற்கும் என்று ஃபிஃபா தலைவர் ஜியானி இன்பான்டினோ உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், இத்தாலி அணியை மாற்றாக சேர்ப்பது குறித்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – ஈரான் போர்: ஈரானின் உயர்மட்டத் தலைவர் மோஜ்தபா காமேனி ‘கடுமையான காயம்’

MUST READ