அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர்ச் சூழலில், நேரடி வான்வழித் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள போதிலும், ஈரானிய துறைமுகங்களை இலக்காகக் கொண்ட அமெரிக்க கடற்படையின் முடக்க நடவடிக்கை (Naval Blockade) தொடர்ந்து தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


தீவிரமடையும் கடல்சார் கண்காணிப்பு:
ஈரான் கடற்பரப்பு மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் அமெரிக்கப் படைகள் தங்களது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன.
முடக்கப்பட்ட கடல் எல்லைகளை மீறி நுழைய முயலும் வணிகக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்களை அமெரிக்கக் கடற்படை இடைமறித்துத் தடுத்து வருகிறது.
தொடர் எச்சரிக்கைகளையும் மீறிப் பயணிக்க முயலும் கப்பல்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க மத்திய கட்டளைக் குழு (CENTCOM) தெரிவித்துள்ளது.
ராஜதந்திர பேச்சுவார்த்தையும் பதற்றமும்:
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் முறுகல் நிலையைத் தணிக்க ஓமன் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தூதரகப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், கடந்த சில நாட்களாக வான்வழித் தாக்குதல்களில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், பொருளாதார ரீதியாக ஈரானைக் முடக்கும் நோக்கில் அமெரிக்காவின் இந்தக் கடற்படை முற்றுகை தொடர்வதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் தற்போதும் நீடித்து வருகிறது.
