அமெரிக்க – ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தீவிரமாக ஈடுபட்டுட்டு வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டு வரவும், பிராந்திய ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநாட்டவும் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத் தூதரக ரீதியான வழிமுறைகள் மூலம் தகவல்தொடர்புகளை எளிதாக்கி வருவதாகவும், செய்திகள் வெளிப்படையாகக் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்து வருவதாகவும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்தராபி வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
”பாகிஸ்தானின் தூதரக வழிமுறைகள் வழியாகச் செல்லும் எந்தவொரு செய்தியும் மறுதரப்பிற்கு உண்மையாகவே தெரிவிக்கப்படுகிறது” என்று அவர் கூறினார். பதற்றங்கள் அதிகரித்திருந்தாலும், தூதரக ரீதியான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும், அவை முடங்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இரு தரப்புக்கும் இடையிலான மோதலைத் தணிப்பதற்கான முயற்சிகள் குறித்துக் குறிப்பிடுகையில், “இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரை, புதிய மற்றும் பழைய என இரு தரப்பு முன்மொழிவுகளும் பரிசீலனையில் உள்ளன. அமைதி நிலவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அந்தராபி கூறினார்.
ஈரானிடம் அணுஆயுதங்கள் இருந்தால் ஒட்டுமொத்த உலகமும் பணயகைதியாகி விடும் – டிரம்ப் எச்சரிக்கை
