Homeசெய்திகள்உலகம்வெள்ளை மாளிகையில் அரங்கேறிய ரகசியச் சந்திப்புகள்: உக்ரைனுக்கு ‘பேட்ரியாட்’ களம்; இஸ்ரேல் தேர்தலை நோக்கிய நெதன்யாகுவின்...

வெள்ளை மாளிகையில் அரங்கேறிய ரகசியச் சந்திப்புகள்: உக்ரைனுக்கு ‘பேட்ரியாட்’ களம்; இஸ்ரேல் தேர்தலை நோக்கிய நெதன்யாகுவின் வியூகம்!

-

- Advertisement -

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இரண்டு முக்கியமான சந்திப்புகள் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் உக்ரைன் அதிபர்  ஜெலன்ஸ்கி ஆகியோர் தனித்தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சந்திப்புகள் சர்வதேச அரசியல் மற்றும் போர்க்கள வியூகங்களில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.

சந்திப்புகள்

we-r-hiring

நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலமும், அமெரிக்கச் சந்திப்பும்:

இஸ்ரேலில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு மிகவும் நிர்ணயமானதாகக் கருதப்படுகிறது. இஸ்ரேல் தேர்தல் வரலாற்றில் அமெரிக்க அதிபரின் ஆதரவு எப்போதும் முக்கியப் பங்கு வகித்துள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்புடனான தனது உறவு பலமாக உள்ளது என்பதை வெளிப்படுத்தவே நெதன்யாகு இந்தச் சந்திப்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் நேரடித் தலையீடு இஸ்ரேலுக்குச் சாதகமாக இருந்தபோதிலும், அமெரிக்க மக்களிடையே இந்தப் போர் குறித்த அதிருப்தி அதிகரித்து வருவது நெதன்யாகுவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் துருக்கிக்கு F-35 போர் விமானங்களை விற்பனை செய்வது தொடர்பாக இஸ்ரேலின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் டிரம்ப் காட்டமாகப் பதிலளித்திருந்தாலும், உள்நாட்டுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ட்ரம்புடன் சுமூகமான உறவைப் பேண நெதன்யாகு முயன்று வருவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் கோரிக்கையும், ‘பேட்ரியாட்’ தயாரிப்பு அனுமதியும்:

மறுபுறம், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ட்ரம்பைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷ்யாவின் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ள உக்ரைனுக்குத் தேவையான அதிநவீன ‘பேட்ரியாட்’ (Patriot) வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

அமெரிக்கா நேரடியாக ஆயுதங்களை வழங்குவதற்குப் பதிலாக, உக்ரைன் நாட்டிலேயே ‘பேட்ரியாட்’ பாதுகாப்பு அமைப்புகளைத் தயாரித்துக் கொள்ளத் தேவையான அனுமதியை டிரம்ப் வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், ரஷ்யாவின் தீவிரமான உளவு மற்றும் வான்வழித் தாக்குதல்களை மீறி, உக்ரைனுக்குள் இந்த ஆயுதங்களைத் தயாரித்து நிலைநிறுத்துவது எளிதான காரியமல்ல என்ற சவாலும் எழுந்துள்ளது.

ஈரான் விவகாரமும், தொடரும் பதற்றமும்:

இந்த உயர்மட்டச் சந்திப்புகளுக்கு நடுவிலும், மத்திய கிழக்கில் பதற்றமான சூழலே தொடர்கிறது. ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மற்றும் சவுதி அரேபியாவின் எண்ணெய் வயல்கள் மீது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதுடன், இதற்குப் பதிலடியாக ஈராக் எல்லையில் உள்ள ஈரான் ஆதரவுக் குழுக்கள் மீது அமெரிக்க – சவுதி கூட்டுப்படை தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஈரான் போர் நிறுத்தம் குறித்த எந்தவித உறுதியான முடிவுகளும் எட்டப்படாத நிலையில், இந்தச் சந்திப்புகள் உக்ரைனின் பாதுகாப்புக்கும், இஸ்ரேலின் உள்நாட்டு அரசியலுக்கும் எந்தளவுக்கு கைகொடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ