Homeசெய்திகள்உலகம்காங்கோவில் வேகமாக பரவும் எபோலா – பலி எண்ணிக்கை 4,018 ஆக உயர்வு!

காங்கோவில் வேகமாக பரவும் எபோலா – பலி எண்ணிக்கை 4,018 ஆக உயர்வு!

-

- Advertisement -

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை 4,018 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், 8,300 பேருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

கடந்த மே மாதம் கிழக்கு காங்கோவில் தொடங்கிய இந்த பரவல் தற்போது 7 மாகாணங்களுக்கு விரிவடைந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எபோலா பரவலுக்கு ‘பண்டிபக்யோ’ (Bundibugyo) வகை வைரஸ் காரணமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 23-ம் தேதி நிலவரப்படி 7 மாகாணங்களில் 7,890 உறுதி செய்யப்பட்ட பாதிப்புகளும், 3,799 உயிரிழப்புகளும் பதிவாகியிருந்த நிலையில், அதன்பின்னர் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

கிழக்கு காங்கோவில் தொடர்ந்து வேகமாக பரவி வரும் நிலையில், அண்டை நாடுகளான உகாண்டா மற்றும் தெற்கு சூடானுக்கும் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அச்சம் நிலவுகிறது. இதனால் நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச மருத்துவ அமைப்புகள் இணைந்து நோயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதேநேரத்தில், சில பகுதிகளில் மருத்துவ வசதிகள், சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு போன்ற சவால்கள் தடுப்பு நடவடிக்கைகளை பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 முதல் 2016 வரை மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட எபோலா பரவலில் 28,600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர். தற்போது காங்கோவில் ஏற்பட்டுள்ள பரவல், அந்நாட்டின் வரலாற்றிலேயே மிகப் பெரிய எபோலா பரவலாக மாறியுள்ளது.

MUST READ