Homeசெய்திகள்உலகம்இஸ்ரேல் சென்ற விமானத்தை கடத்த முயற்சி ‘பயங்கரவாத செயல்’ – ஓமன் துணை விமானி குறித்து...

இஸ்ரேல் சென்ற விமானத்தை கடத்த முயற்சி ‘பயங்கரவாத செயல்’ – ஓமன் துணை விமானி குறித்து அதிர்ச்சி தகவல்கள்!

-

- Advertisement -

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி சென்ற ஃப்ளைதுபாய் பயணிகள் விமானத்தில், துணை விமானி விமானத்தை கடத்த முயன்ற சம்பவம் ‘பயங்கரவாத செயல்’ என ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துணை விமானி விமானியின் அறைக்குள் தாக்குதல் நடத்தி, விமானத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்ற முயன்றதாக கூறப்படுகிறது.

we-r-hiring

விமானத்தின் தலைமை கேப்டனாக பணியாற்றிய இந்திய விமானி சுமித் மச்சாரை துணை விமானி தாக்கியதாகவும், இதையடுத்து பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் இணைந்து அவரை கட்டுப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

விசாரணையில் துணை விமானி ஓமன் நாட்டைச் சேர்ந்த 29 வயதான ஹமாம் அல்-ஹமாமி என்பது தெரியவந்துள்ளது. ஓமன் ஏர் நிறுவனத்தில் விமானி பயிற்சியில் இருந்தபோது, கடந்த 2024-ம் ஆண்டு பயங்கரவாத சிந்தனையை தூண்டும் பொருட்கள் அவரிடம் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் விமானத்தை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டு, வேறு பணிக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் இணையத்தில் பயங்கரவாதம் தொடர்பான தகவல்களை தேடியதாகவும், அவரது சமூக வலைதள பக்கங்களில் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய நபர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததாகவும் விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல்களின் அடிப்படையில் அவரது பின்னணி மற்றும் தீவிரவாத தொடர்புகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓமன் ஏர் நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பின்னர் வேறு விமான நிறுவனங்களில் பணியாற்றி, சுமார் 8 மாதங்களுக்கு முன்பு ஃப்ளைதுபாய் நிறுவனத்தில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே விமானப் பணிக்கு தடை விதிக்கப்பட்ட ஒருவருக்கு ஃப்ளைதுபாய் நிறுவனத்தில் பணியாற்ற அனுமதி கிடைத்தது எப்படி என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

விமானத்தை இஸ்ரேலில் மோதி விபத்துக்குள்ளாக்கும் திட்டம் இருந்ததாகவும் விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தின் பின்னணி, துணை விமானியின் நோக்கம் மற்றும் அவருக்கு வேறு யாரேனும் வழிகாட்டினார்களா என்பது குறித்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரபு உலகில் புதிய வரலாறு.. மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எல் மன்சூரி நியமனம்!

MUST READ