Dubai-யில் இருந்து Tel Aviv நோக்கி சென்ற Flydubai FZ1073 விமானத்தில் துணை விமானி Hamam al-Hammami, விமானியின் மீது தாக்குதல் நடத்தி விமானத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு தரப்பு அதிகாரிகள் பயங்கரவாதச் செயலாக வகைப்படுத்தியுள்ளனர்.


இந்திய விமானி மீது தாக்குதல்
விமானத்தின் காக்பிட்டில் இருந்த இந்திய விமானி கேப்டன் Smit Machchhar மீது துணை விமானி அவசரகால கோடாரியால் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் காயம் அடைந்தபோதிலும் கேப்டன் ஸ்மித் மச்சார் காக்பிட் கதவை திறக்க முடிந்ததால், பயணிகளும் மற்றொரு விமானியும் உள்ளே சென்று துணை விமானியை கட்டுப்படுத்தினர்.
சவுதி அரேபியாவில் அவசர தரையிறக்கம்
விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பின் போது அது சுமார் 14,000 அடி வரை வேகமாக கீழிறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் Tabuk நகரில் பாதுகாப்பாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் 170-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.
மரண தண்டனை கோரப்படலாம்
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஓமன் நாட்டைச் சேர்ந்த 29 வயதான Hamam al-Hammami-க்கு எதிராக கடுமையான தண்டனை கோர ஐக்கிய அரபு அமீரகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மரண தண்டனையும் இடம்பெறலாம் என Ynet செய்தியை மேற்கோள் காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
விசாரணையின்போது விமானத்தை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்க நினைத்ததாக துணை விமானி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், Flydubai நிறுவனத்தில் சேருவதற்கு முன்பே இந்த தாக்குதலை திட்டமிட்டிருந்ததாக விசாரணை தொடர்பான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமான நிறுவனத்தில் பணியில் சேருவதற்கு முன் அவரது பின்னணி தொடர்பாக எழுந்திருந்த சந்தேகங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது
இந்த சம்பவத்தின் முழுமையான பின்னணி, தாக்குதலுக்கான நோக்கம் மற்றும் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள மரண தண்டனை தொடர்பான தகவல்கள் இறுதி நீதிமன்ற தீர்ப்பு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
SpaceXAI பெயர் மாறுகிறது: எலான் மஸ்க் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
