spot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்”ஈரான் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது”– வெளியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு…

”ஈரான் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது”– வெளியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு…

-

- Advertisement -

”ஈரான் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது” என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.”ஈரான் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது”– வெளியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு…மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், “ஈரான் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது” என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்டை நாடுகளின் நிலப்பரப்பை அமெரிக்கா தாக்குதல் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

ஈரான் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தங்களின் நடவடிக்கை அண்டை நாடுகளுக்கு எதிரானது அல்ல. அமெரிக்க படைகளுக்கு எதிரானது மட்டுமே என எனத் தெளிவுபடுத்தியுள்ளது. அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணுவதே ஈரானின் கொள்கை என்று தெரிவித்துள்ளது.

we-r-hiring

தற்பாப்புக்காக பதிலடி கொடுப்பது ஐ.நா.சாசனத்தின் கீழ் ஈரானுக்கு முழு உரிமை உள்ளது என்றும், அந்த உரிமையின் அடிப்படையிலேயே ஈரான் செயல்படுகிறது எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

ஈரான் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு பாலமாகவே இருந்துள்ளது. மத்திய கிழக்கில் நிலையான பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கின் பாதுகாப்புக்காக ஈரான் அளவுக்கு எந்த நாடும் உழைத்தது இல்லை  என்றும், தற்போதைய இந்த சோதனையான கட்டத்தை வெற்றிகரமாக கடப்போம் என்றம் தெரிவித்துள்ளது.

காமெனி படுகொலையில் நடந்தது இதுதான்! களமிறங்கும் சீனா – ரஷ்யா! பொன்ராஜ் நேர்காணல்!

MUST READ