HomeBreaking Newsசீனாவுடன் நெருங்கும் இந்தியா! பொருளாதார உறவை வலுப்படுத்தப் போகும் 'மாஸ்டர் பிளான்' என்ன?

சீனாவுடன் நெருங்கும் இந்தியா! பொருளாதார உறவை வலுப்படுத்தப் போகும் ‘மாஸ்டர் பிளான்’ என்ன?

-

- Advertisement -

இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்த சீனாவுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்றும், சீன முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கொள்கைகளைத் தளர்த்த வேண்டும் என்றும் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (PMEAC) உறுப்பினர் ராகேஷ் மோகன் வலியுறுத்தியுள்ளார். தொழில்துறை வட்டாரங்களில் இவரது இந்த கருத்து தற்சமயம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.சீனாவுடன் நெருங்கும் இந்தியா! பொருளாதார உறவை வலுப்படுத்தப் போகும் 'மாஸ்டர் பிளான்' என்ன?

உற்பத்தித் துறையில் சீன முதலீடுகள்
உலகளாவிய உற்பத்திச் சந்தையில் இந்தியா முன்னணி இடத்தைப் பிடிக்க வேண்டுமானால், அதிக மனிதவளம் தேவைப்படும் (Labor-intensive) உற்பத்தித் துறைகளில் சீன நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என்று ராகேஷ் மோகன் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தித் திறன் அதிகரிப்பதோடு, லட்சக்கணக்கான இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

கொள்கை மாற்றத்திற்கான தேவை
கடந்த சில ஆண்டுகளாக இரு நாட்டு எல்லைப் பகுதிகளில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக, சீன முதலீடுகள் மற்றும் செயலிகளுக்கு இந்தியா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்தச் சூழலில், நாட்டின் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு, சீன முதலீடுகளை முறைப்படுத்தி அனுமதிக்கும் வகையிலான சாதகமான கொள்கைகளை இந்தியா உருவாக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

சீனாவுடன் நெருங்கும் இந்தியா! பொருளாதார உறவை வலுப்படுத்தப் போகும் 'மாஸ்டர் பிளான்' என்ன?

கிளம்பும் விவாதங்கள்
பிரதமரின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரே சீனாவுக்கு ஆதரவான இத்தகைய பொருளாதாரப் பார்வையை முன்வைத்துள்ளது அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுத் தொழில்முனைவோரின் நலனைக் காப்பதோடு, சீன முதலீடுகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. அண்மைக் காலமாகவே, இந்தியாவின் மின்னணு மற்றும் உள்கட்டமைப்பு உற்பத்தித் துறைகளை மேம்படுத்த சீன உதிரிபாகங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் வருகை அவசியம் என்று சில பொருளாதார நிபுணர்கள் குரல் எழுப்பி வரும் நிலையில், ராகேஷ் மோகனின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய பொருட்களுக்கு 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாய்ந்த அதிரடி மசோதா.. கச்சா எண்ணெய் அரசியலால் அதிரும் உலக நாடுகள்!

MUST READ