Homeசெய்திகள்உலகம்இந்திய பொருட்களுக்கு 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாய்ந்த அதிரடி மசோதா.. கச்சா எண்ணெய் அரசியலால்...

இந்திய பொருட்களுக்கு 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாய்ந்த அதிரடி மசோதா.. கச்சா எண்ணெய் அரசியலால் அதிரும் உலக நாடுகள்!

-

- Advertisement -

உக்ரைன் மீதான போருக்குப் பிறகும் ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகள் மீது கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் (Congress) புதிய அதிரடி மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் கீழ் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை அபராத வரி விதிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது சர்வதேச அரசியல் மற்றும் வர்த்தக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்திய பொருட்களுக்கு 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாய்ந்த அதிரடி மசோதா.. கச்சா எண்ணெய் அரசியலால் அதிரும் உலக நாடுகள்!இருதரப்பு எம்பிக்கள் கூட்டு நடவடிக்கை: ட்ரம்ப் ஆதரவு?
ரஷ்யாவின் வருவாய் ஆதாரங்களை முடக்குவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும். அமெரிக்காவின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) இணைந்து இந்த கூட்டு மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது முழு ஆதரவை வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இம்மசோதாவால் பாதிக்கப்படும் முக்கிய நாடுகள்

we-r-hiring
  • இந்தியா
  • சீனா
  • ஹங்கேரி
  • ஸ்லோவேக்கியா
  • அஜர்பைஜான்

இந்த நாடுகள் மீது முதற்கட்டமாக 100 சதவீத வரி விதிக்கவும், அதையும் மீறி ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைத் தொடர்ந்தால் கூடுதலாக 10 சதவீதம் அபராத வரி விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.

ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டும் ‘ஸ்பெஷல்’ விலக்கு: அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு
இந்த மசோதாவில் ஆசிய நாடுகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள அதே வேளையில், ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா இரட்டை நிலப்பாட்டைக் கையாண்டுள்ளது அம்பலமாகியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து இயற்கை எரிவாயுவை (Natural Gas) இறக்குமதி செய்யும் 15 ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த கடுமையான வரி விதிப்பு கட்டுப்பாடுகளில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க இந்த மசோதாவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்களின் சொந்தத் தேவை மற்றும் குளிர்காலச் சூழலைக் கருத்தில் கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டும் இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சர்வதேச வர்த்தகத்தில் கடும் தாக்கம்
அமெரிக்காவின் இந்த ஒருதலைப்பட்சமான மசோதா நிறைவேறினால், அமெரிக்காவிற்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்யும் இந்திய மற்றும் சீன நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உறவைக் கொண்டுள்ள இந்தியா போன்ற நாடுகள், தங்களின் இறக்குமதி உரிமைகளில் அமெரிக்கா தலையிடுவதை எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு உலக அரங்கில் எழுந்துள்ளது.

மேற்கு ஆசியாவில் கோரப் போர்! ஈரான் முகாம்களை தவிடுபொடியாக்கிய அமெரிக்கா.. 7 பேர் பலி, 260 பேர் காயம்.. வளைகுடாவில் பாயும் ஏவுகணைகள்!

MUST READ