- Advertisement -
பெருவில் சுற்றுலா ரயிலில் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தாா். 40 பேர் காயமடைந்தனர்.
தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பெரு நாட்டில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 40 பேர் காயமடைந்தனர். மச்சு பிச்சு பகுதிக்கு செல்லும் ரயில் பாதையில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ரயில் விபத்தில் காயமடைந்த பெரும்பாலான பயணிகள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ரயில் தடம் புரண்டதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.



