spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா180 கி.மீ. வேகத்தில் சீறிய வந்தே பாரத்…சோதனை ஓட்டம் வெற்றி…

180 கி.மீ. வேகத்தில் சீறிய வந்தே பாரத்…சோதனை ஓட்டம் வெற்றி…

-

- Advertisement -

படுக்கை வசதி கொண்ட மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது.180 கி.மீ. வேகத்தில் சீறிய வந்தே பாரத்…சோதனை ஓட்டம் வெற்றி…படுக்கை வசதிகளுடன் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் வெற்றியடைந்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், அதிவேகத்தில் பயணிக்கும் ரயிலுக்குள் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் நிரப்பிய டம்ளர்கள் அசையாமலும் ஆடாமலும் இருப்பது தெளிவாகக் காணப்படுகிறது. 180 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற போதும், ஒரு சொட்டு தண்ணீர் கூட சிந்தாமல் இருந்தது பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

we-r-hiring

இந்த சோதனை ஓட்டம் ராஜஸ்தானில் உள்ள கோட்டா – நாக்டா பிரிவுக்கு இடையில் நடத்தப்பட்டதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவில் லிஃப்ட் கேட்டு சென்ற இளம்பெண்… வேனை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர்… அடுத்து நடந்த கொடூரம்!

MUST READ