Homeசெய்திகள்இந்தியாடெல்லியை உலுக்கும் சிஜேபி போராட்டம்.. "அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகணும்".. காங்கிரஸ் பேச்சாளர் சந்திரசேகரன்...

டெல்லியை உலுக்கும் சிஜேபி போராட்டம்.. “அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகணும்”.. காங்கிரஸ் பேச்சாளர் சந்திரசேகரன் அதிரடி!

-

- Advertisement -

மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், நீட், நெட் உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளில் நடைபெறும் தொடர் வினாத்தாள் கசிவுகளைக் கண்டித்து ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ (CJP) அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களும் மாணவர்களும் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற சம்பவம் தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை உலுக்கும் சிஜேபி போராட்டம்.. "அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகணும்".. காங்கிரஸ் பேச்சாளர் சந்திரசேகரன் அதிரடி!

​டெல்லியில் நடைபெற்று வரும் ‘சிஜேபி’ மாணவர் போராட்டம் மற்றும் நாடாளுமன்ற முற்றுகை முயற்சி தொடர்பாக, “தொடர் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சந்திரசேகரன் தனது கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது,

we-r-hiring

​பொறுப்பற்ற முறையில் செயல்படும் மத்திய அரசு
​”பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சாதனைகளுக்குத் தானே உரிமை கொண்டாடுவதும், தொடர் ரயில் விபத்துகள், விவசாயிகள் போராட்டம் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற பெரிய பாதிப்புகள் நிகழும்போது அதற்குப் பொறுப்பேற்காமல் மறுப்பதையுமே வழக்கமாகக் கொண்டுள்ளது. ​சிபிஎஸ்இ, நீட், நெட் என நூற்றுக்கணக்கான முறை வினாத்தாள்கள் கசிந்து லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம், தன்னம்பிக்கை மற்றும் மனநலனைப் பாதித்துள்ளது. ஆனால், இதுவரை இதில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகள் மீது எவ்விதக் கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.”

​தன்னெழுச்சியான மாணவர் புரட்சி
​”19 நாட்களாக ஜந்தர் மந்தரில் தொடர்ந்து போராட்டம் மற்றும் உண்ணாவிரதங்கள் நடைபெற்றும் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால், வேறு வழியின்றி மாணவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இது எந்தவொரு அரசியல் கட்சியின் தூண்டுதலும் இல்லாமல், பாதிக்கப்பட்ட இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டமாகும்.

​பாரதிய ஜனதா கட்சி இப்போ போராட்டத்தைக் கௌரவப் பிரச்சினையாகப் பார்க்காமல், மாணவர்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும். ரயில் விபத்துக்குத் தார்மீகப் பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்ததை முன்மாதிரியாகக் கொண்டு, தொடர் வினாத்தாள் கசிவுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.”

​எதிர்க்கட்சிகள் மீது தவறான குற்றச்சாட்டு
​”மத்திய அரசை அல்லது பிரதமரை விமர்சித்தாலே ‘தேச விரோதிகள்’ அல்லது ‘அந்நிய நாட்டின் கைக்கூலிகள்’ எனக் முத்திரை குத்துவது பாஜகவின் வாடிக்கையாகிவிட்டது. விவசாயிகள் போராட்டத்தின் போதும் இதேபோல குற்றஞ்சாட்டினார்கள். ​ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு மக்கள் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டறிந்த தலைவராவார். நாட்டின் முக்கியப் பிரச்சினைகளைப் நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுவதால், மக்கள் மன்றத்திலும் சமூக வலைத்தளங்களிலும் எதிர்க்கட்சித் தலைவராக அவர் தனது கடமையைச் செய்து வருகிறார்.”

​அரசுக்கு எச்சரிக்கை
​”இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் உணர்ச்சிப்பூர்வமான இந்தப் போராட்டத்தை ராணுவம் அல்லது காவல்துறையைக் கொண்டு அடக்க அரசு முயன்றால், அதன் விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும். எனவே, அடக்குமுறையைக் கைவிட்டு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும்” என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

“தவெக பக்கம் தலைவைத்தும் படுக்காதீர்கள்!” – அதிமுக நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் முன்னாள் நிர்வாகிகள் எச்சரிக்கை!

MUST READ