Homeசெய்திகள்இந்தியாWhatsApp-ல் இனி Bill கட்டுவது இன்னும் Easy! இந்திய பயனர்களுக்கு வந்த புதிய வசதி

WhatsApp-ல் இனி Bill கட்டுவது இன்னும் Easy! இந்திய பயனர்களுக்கு வந்த புதிய வசதி

-

- Advertisement -

இந்தியாவில் WhatsApp பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. இனி மின்சாரம், குடிநீர், கேஸ், FASTag உள்ளிட்ட பல்வேறு பில்களை WhatsApp செயலியில் இருந்தபடியே நேரடியாக செலுத்த முடியும்.

we-r-hiring

செப்டம்பர் 3 முதல் இந்த புதிய Bill Payments வசதியை WhatsApp இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக Bharat Connect எனப்படும் BBPS தளத்துடன் WhatsApp இணைந்துள்ளது.

என்னென்ன பில்களை WhatsApp-ல் செலுத்தலாம்?

புதிய வசதியின் மூலம் மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், சமையல் எரிவாயு, FASTag, காப்பீடு, கிரெடிட் கார்டு பில், கடன் தவணை உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை செலுத்த முடியும்.

மொத்தம் 30 வகையான பிரிவுகளில் 22,722 பில் நிறுவனங்களை இந்த வசதி ஆதரிக்கிறது. இதனால் வெவ்வேறு பில்களுக்காக தனித்தனி செயலிகளை பயன்படுத்த வேண்டிய தேவை குறையும்.

எப்படி Bill கட்டுவது?

WhatsApp-ஐ திறந்து Home Screen-ல் இருக்கும் ₹ Payments ஐகானை தேர்வு செய்ய வேண்டும்.

அதன் பிறகு தேவையான Bill Category-ஐ தேர்வு செய்து, அதற்கான சேவை நிறுவனத்தை குறிப்பிட வேண்டும். தொடர்ந்து Customer Number அல்லது Account Details-ஐ உள்ளிட்டு உறுதிப்படுத்த வேண்டும்.

பில் தொகை WhatsApp-ல் காட்டப்பட்டதும், விவரங்களை சரிபார்த்து UPI, Debit Card அல்லது Credit Card மூலம் பணம் செலுத்தலாம்.

மேலும் ஒரு முக்கிய வசதி

WhatsApp-ல் ஏற்கனவே செலுத்திய பில்களை மீண்டும் எளிதாக பார்க்க முடியும். ஒரே Bill Provider-ன் கீழ் வீடு, அலுவலகம் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கான பல கணக்குகளையும் நிர்வகிக்க முடியும்.

அதேபோல் வரவிருக்கும் பில்களையும் Payments பகுதியில் பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது.

எல்லோருக்கும் உடனடியாக கிடைக்குமா?

இந்த புதிய வசதி தற்போது இந்தியாவில் படிப்படியாக Android மற்றும் iOS பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மெசேஜிங் செயலியாக மட்டுமின்றி, அன்றாட பணப்பரிவர்த்தனைகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ளக்கூடிய செயலியாக WhatsApp தனது சேவைகளை விரிவுபடுத்தி வருகிறது.

RBI அதிரடி தலையீடு! ₹94-ஐ தாண்டிய ரூபாய் மதிப்பை காப்பாற்ற டாலர்களை விற்கும் மத்திய வங்கி

MUST READ