Homeசெய்திகள்இந்தியாமீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டங்களை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் சட்டமன்ற முற்றுகைப் பேரணி –...

மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டங்களை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் சட்டமன்ற முற்றுகைப் பேரணி – ஆயிரக்கணக்கான மீனவர்கள் பங்கேற்பு!

-

- Advertisement -

உலக மீனவர் தினத்தையொட்டி, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவ கிராமப் பஞ்சாயத்தார்கள் இணைந்து புதுச்சேரியில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டங்களை ரத்து செய்யக் கோரி புதுச்சேரியில் சட்டமன்ற முற்றுகைப் பேரணி – ஆயிரக்கணக்கான மீனவர்கள் பங்கேற்பு!

இதற்காக கடலூர் சாலையில் அமைந்துள்ள சிங்காரவேலர் சிலைக்கு மீனவப் பஞ்சாயத்தார்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அங்கிருந்து சட்டமன்றத்தை நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டனர். மீனவப் பஞ்சாயத்து நிர்வாகிகள் ஊர்வலத்திற்குத் தலைமை வகித்தனர்.

நேரு வீதி, மாதா கோவில் வீதி வழியாகச் சென்ற ஊர்வலம் சட்டமன்றத்தை நோக்கி வந்தது. சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற மீனவர்களை ஆம்பூர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, மீனவப் பஞ்சாயத்தாரும் மீனவர்களும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் கடற்கரையையும் கடலையும் தனியாருக்குத் தாரைவார்க்கும் திட்டங்களை முழுமையாகக் கைவிட வேண்டும் என்றும் போராட்டத்தில் வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களையும் எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தில் புதுவை மாநில விசைப்படகு மற்றும் பைபர் படகு உரிமையாளர்கள் சங்கத்தினர், மீன் வியாபாரிகள் சங்கத்தினர், அனைத்து மீன் அங்காடிகளைச் சேர்ந்த மீனவப் பெண்கள், பல்வேறு மீனவ சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

“கர்நாடகாவில் தண்ணீர் இருந்தால் நிச்சயம் தமிழகத்துக்கு வழங்குவோம்!” – உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு டி.கே.சிவகுமார் கருத்து!

MUST READ