காதல் ஜோடிகளுக்கு ஒரு செம்ம ஜாக்பாட் செய்தி வெளியாகியுள்ளது. உலக அளவில் காதலர்கள் தங்களது இணையாருடன் வெளியில் சென்று பொழுதைக் கழிப்பதற்கு (Dating) மிகக் குறைந்த செலவாகும் நகரங்களின் பட்டியலில், இந்தியத் தலைநகர் டெல்லி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அதே நேரத்தில் உலகின் மிகக் காஸ்ட்லியான நகரத்தில் ஒரு முறை டேட்டிங் செல்ல ஆகும் செலவைக் கேட்டால் உங்களுக்குத் தலைசுற்றிவிடும்!
டெல்லியில் டேட்டிங் போக இவ்வளவு தான் ஆகுமா?
பிரபல சர்வதேச நிதி நிறுவனமான டாஷ் பேங்க் (Deutsche Bank), உலக நாடுகளின் வாழ்க்கை முறை மற்றும் செலவினங்கள் குறித்து ‘மேப்பிங் தி வேர்ல்ட்ஸ் பிரைசஸ் 2026’ (Mapping the World’s Prices 2026) என்ற தலைப்பில் அதிரடி ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த ஆய்வின் முடிவில், உலகிலுள்ள முக்கியப் பெருநகரங்களோடு ஒப்பிடுகையில், டெல்லியில் ஒரு காதல் ஜோடி தங்களது டேட்டிங்கை மிகக் குறைந்த செலவில் என்ஜாய் செய்ய முடியும் எனத் தெரியவந்துள்ளது. டெல்லியில் ஒரு ஜோடி சினிமா, டாக்ஸி பயணம், ஹோட்டல் சாப்பாடு, காபி உள்ளிட்ட பலவற்றுடன் ஒரு நாள் முழுவதும் டேட்டிங் செய்ய சராசரியாக வெறும் ரூ.9,920 மட்டுமே செலவாகிறது என அந்த ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் எகிறும் பட்ஜெட்.. மயங்கி விழுந்த காதலர்கள்!
டெல்லி காதலர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ள நிலையில், உலகின் மற்றொரு முனையில் உள்ள காதலர்களுக்கு இந்த ஆய்வு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
உலகிலேயே மிகக் காஸ்ட்லி டேட்டிங்!
இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா (Geneva) நகரம் உலகின் மிக விலையுயர்ந்த நகரமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜெனீவாவில் ஒரு முறை ஒரு ஜோடி டேட்டிங் செல்ல வேண்டும் என்றால், இந்திய மதிப்பில் சுமார் ரூ.45,750 வரை கையை கடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டெல்லியை விட கிட்டத்தட்ட 5 மடங்கு கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். இருப்பினும், டெல்லியில் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் டேட்டிங் செலவு மிகக் குறைவாக இருந்தாலும், அங்குள்ள மக்களின் சராசரி மாதச் சம்பளமும் உலக அளவில் ஒப்பிடும் போது மிகவும் குறைவாகவே உள்ளது என்பதும் இந்த ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எது எப்படியோ, பட்ஜெட்டுக்குள் காதலை வளர்க்க நினைக்கும் ஜோடிகளுக்கு டெல்லி தான் இப்போதைக்கு ‘சொர்க்கம்’!
