Homeசெய்திகள்இந்தியா"காமராஜருடன் ரங்கசாமியை ஒப்பிடுவதா?" - துணைநிலை ஆளுநரை வறுத்தெடுத்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி!

“காமராஜருடன் ரங்கசாமியை ஒப்பிடுவதா?” – துணைநிலை ஆளுநரை வறுத்தெடுத்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி!

-

- Advertisement -

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைப் பெருந்தலைவர் காமராஜருடன் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்பிட்டுப் பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது என்றும், இந்த விவகாரத்தில் ஆளுநரின் கண்ணாடியில்தான் கோளாறு உள்ளது என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசிய முக்கிய விவரங்கள் வருமாறு:

நாராயணசாமி

we-r-hiring

அதிகாரமற்ற அமைச்சரவையும் பாஜகவின் மௌனமும்:

“புதுச்சேரியில் துறைகள் ஒதுக்கப்படாமல் பதவிக்காலத்தை முடித்த ஜான்குமாரைப் போல், தற்போதுள்ள ஐந்து அமைச்சர்களின் காலமும் முடிந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. முதல்வர் ரங்கசாமியின் செயல்பாடுகளால் புதுச்சேரிக்கு ஏன் ஓர் அமைச்சரவை என்ற கேள்வியே எழுகிறது. வாக்களித்த மக்களுக்கு என்.டி.ஏ கூட்டணியும், முதல்வரும் துரோகம் செய்கின்றனர். கோப்புகளை வைத்துக் கொண்டு அதிகாரிகள் தூங்குகிறார்கள்; முதல்வரைத் தவிர இங்கு வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை.

கூட்டணி ஆட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்குக் கூட்டுப் பொறுப்பு உண்டு. ரங்கசாமி செயல்படாவிட்டால் அதற்கு பாஜகவும் பொறுப்பேற்க வேண்டும். புதுச்சேரியில் நிர்வாகம் குட்டிச்சுவராகிவிட்ட நிலையிலும் பாஜக வாய்மூடி மௌனமாக இருக்கக் காரணம் என்ன? என்.ஆர்.காங்கிரஸ் என்பது அடிமைகளின் கட்சி, அங்கு முதல்வரைத் தவிர வேறு யாரும் பேச மாட்டார்கள்.”

வெளிநாடுகளுக்குப் போலி மருந்து கடத்தல் – சிபிஐ மீது குற்றச்சாட்டு:

“புதுச்சேரியில் போலி மருந்து விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கைச் சிபிஐ கிடப்பில் போட்டுள்ளது. இதில் பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதுதான் அதற்குக் காரணம். தற்போது மீண்டும் ஒரு போலி மருந்து கம்பெனி கண்டறியப்பட்டுள்ளது. மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் இந்தத் தொழிற்சாலைகளுக்குச் சென்று முறையாகப் பார்வையிடுவதில்லை.

இது ஒரு கூட்டுச்சதி. மருந்து தயாரித்தல், விநியோகம், வெளிநாடு கடத்தல் என இதன் பின்னணியில் மிகப்பெரிய ராக்கெட் நெட்வொர்க் இயங்குகிறது. வெளிநாடுகளுக்குப் போலி மருந்து கடத்தப்படுவதால் இதில் முறையான சிபிஐ விசாரணை தேவை. ஆனால், சிபிஐ பாரபட்சமாகச் செயல்படுவது தெளிவாகத் தெரிகிறது. மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் புதுச்சேரி அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.”

ஆளுநருக்குக் கண்டனம் & தமிழக முதல்வர் விஜய்க்குப் பாராட்டு:

“துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், காமராஜர் பிறந்தநாள் விழாவில் முதல்வர் ரங்கசாமியை காமராஜருடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். காமராஜர் என்ன ரெஸ்டோ பாருக்கு ரூ. 40 லட்சம் லஞ்சம் வாங்கினாரா? அல்லது பள்ளி, கோயில், குடியிருப்பு பகுதிகளில் ரெஸ்டோ பார்களைக் கொண்டு வந்தாரா? கைலாஷ்நாதன் தனது கண்ணாடியைக் கழற்றி விட்டுப் பார்க்க வேண்டும், அவரது கண்ணாடியில்தான் கோளாறு உள்ளது. கறைபடாத கரத்துக்குச் சொந்தக்காரரான காமராஜரின் நற்பெயருக்கு ஆளுநர் களங்கம் விளைவிக்கக் கூடாது; மக்கள் மத்தியில் பொய் தகவலைத் தரக் கூடாது.

‘ஊழல் செய்தால் பதவி பறிப்பேன்’ எனத் தமிழக முதல்வர் விஜய் அதிரடியாகப் பேசுவது போல், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சொல்லத் தயாரா? தமிழகத்தில் தற்போது படிப்படியாக ஊழல் குறைக்கப்படுகிறது” என்று நாராயணசாமி பாராட்டுத் தெரிவித்ததுடன், புதுச்சேரி அரசைச் சாடியுள்ளார்.

MUST READ