spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரிட்டன் இளவரசர்… அரச பட்டங்கள் பறிக்கப்படுவதாக தகவல்…

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரிட்டன் இளவரசர்… அரச பட்டங்கள் பறிக்கப்படுவதாக தகவல்…

-

- Advertisement -

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூவின் அனைத்து அரச பட்டங்களும் பறிக்கப்படுவதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.https://www.apcnewstamil.com/news/article-news/pana-vasam-value-added-money-guru-mitreshiva/183029வர்ஜீனியா கியூப்ரே என்ற பெண் அமெரிக்காவை சேர்ந்தவா், இவா் பிரபல தொழிலதிபரான ஜெப்ரி எப்ஸ்டீன், மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத்தின் இரண்டாவது மகனும், இளவரசருமான ஆண்ட்ரூ மீது பாலியல் புகார் அளித்தாா். இதனால் பெரும் பரபரப்ப ஏற்பட்டது. மேலும் பாலியல் கடத்தல்காரர்களுடன் தொடர்பில் இருந்தது உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளால் இளவரசர் ஆண்ட்ரூ நெருக்கடியில் உள்ளார்.

இதனையடுத்து, பிரிட்டனின் மன்னர் சார்லஸ் தனது தம்பி இளவரசர் ஆண்ட்ரூவின் அரச பட்டங்களை பறிப்பதற்கான முறையான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளார். மேலும் இளவரசர் ஆண்ட்ரூவை வின்ட்சர் இல்லத்தை காலி செய்யவும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இளவரசர் ஆண்ட்ரூவின் உடை, பட்டங்கள் மற்றும் கவுரவங்களை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. இளவரசர் ஆண்ட்ரூ இப்போது ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்று அழைக்கப்படுவார். அவரது வின்ட்சர் இல்லத்தை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் மாற்று தனியார் தங்குமிடத்திற்கு செல்வார்,” என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜக – கனிமொழி எம்.பி. கண்டனம்

we-r-hiring

MUST READ