உலகின் மிக விலை உயா்ந்த அாிசியின் விலையை கேட்டால் நமக்கு ஹார்ட் அட்டாகே வந்துவிடும் போலிருக்கு.
இது ஜப்பானில் தான் விளைவிக்கப்படுகிறது. இதன் விலை எவ்வளவு தொியுமா? ஒரு கிலோ ரூ.12,500. இந்த அரிசி அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அரிசி பஃபிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, புதிய ரக அரிசியாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கின்மோமாய் பிரீமியம் என இந்த ரக அாிசியை அழைக்கின்றனா். இந்த அரிசி தான் உலகில் மிகவும் ஆடம்பரமான விலை உயர்ந்த அரிசியாக பார்க்கப்படுகிறது. அரிசியின் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 2016 ஆம் ஆண்டு கின்மோமாய் பிரீமியம் ரக அரிசி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதே இந்த அரிசி 840 கிராம் அரிசி ரூ.5490க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக அதிக விலையுள்ள அரிசி என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடமும் பிடித்தது.
மேலும், இப்போது இந்த அரிசி மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை ஒரு கிலோ ரூ.12,500 ஆக நிா்ணயிக்கப்படுகிறது. ஜப்பானிய கின்மோமாய் பிரீமியம் அரிசி மேம்படுத்தப்பட்ட மில் மூலம் தவிடு நீக்கப்படுகிறது. இந்த அரிசியின் சிறப்பம்சமே சமைப்பதற்கு முன் இதனை கழுவ வேண்டிய அவசியமில்லை. வழக்கமான அரிசியில் நோய் எதிா்ப்பு தன்மையை கொடுக்கக்கூடிய lipopoly Saccharides புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கின்மோமாய் பிரீமியம் ரகத்தில் ஆறு மடங்கு அதிகமாக இருக்கிறது. அதோடு கின்மோமாய் பிரீமியம் ரக அரிசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடலில் உள்ள நோய்களை எதிர்த்து போராட பெரிதும் உதவுகிறது.
Reusable Rocket ராக்கெட் தொழில்நுட்பத்தில் Blue Origin-ன் புதிய வரலாறு…



