கம்போடியா ராணுவக் கிடங்கில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில் தாய்லாந்தில் உள்ள 7 மாகாணங்களில் சுற்றுலா செல்லவேண்டாம் என இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை பிரச்சனை காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இருநாடுகளும் எல்லை பகுதியில் ஒருவர் மீது ஒருவர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் இந்திய பயணிகளுக்கு தூதரகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் இரண்டு நாடுகளும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியர்கள் அங்கு செல்வதற்கு முன்பாக அந்நாடு அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் அந்த அறிவுறுத்தல்களை பின்பற்றவும். அதே போல் தாய்லாந்தில் சுற்றுலா ஆணையம் குறிப்பிட்டுள்ள இடங்களில் பயணிக்க பரிந்துரைக்கபடவில்லை என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே இந்த பிரச்சனை காரணமாக தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் தொடர்ந்து அமைதியின்மை நீடித்து வருவதன் காரணமாக 7 மாகாணங்களில் சுற்றுலா தளங்கள் செல்ல வேண்டாம் என தாய்லாந்து சுற்றுலா ஆணையம் அறிவித்து இருக்க கூடிய நிலையில், இந்திய தூதகரகமும் அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. தற்போது இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.பிக்களுக்கு முதல்வர் வாழ்த்து…
