spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்இந்தியா, ரஷ்யாவின் எதிர்காலம் வளமானதாக இருக்கட்டும் - டொனால்ட் டிரம்ப்

இந்தியா, ரஷ்யாவின் எதிர்காலம் வளமானதாக இருக்கட்டும் – டொனால்ட் டிரம்ப்

-

- Advertisement -

இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் பறிகொடுத்துவிட்டோம் என அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.இந்தியா, ரஷ்யாவின் எதிர்காலம் வளமானதாக இருக்கட்டும் - டொனால்ட் டிரம்ப் அரசியலில் தற்போது மிகப்பெரிய மாற்றங்கள் நடந்துக் கொண்டுத்தான் இருக்கின்றன. உலகளவில் இது அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்க அதிபரான டிரம்பின் நடவடிக்கையால் பல்வேறு நாடுகளும் அமெரிக்கா மீது அதிருப்தி அடைந்துள்ளனா். இதனிடையே சீனா பல நாட்டுத் தலைவா்களை சந்தித்து வருகிறது.

அண்மையில் ஷாங்காய் அமைப்பு ஒத்துழைப்பு மாநாடு சீனாவில் நடைபெற்றது. சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்றனர். அதே போல் சமீபத்தில் வடகொரிய அதிபரும் சந்தித்து பேசினார். இது உலக நாடுகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சீன அதிபர் ஸி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடி ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். இந்தியா, ரஷ்யாவின் எதிர்காலம் வளமானதாக இருக்கட்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டார்.

தொடர்ந்து 10 ஆண்டுகளாக சென்னை ஐஐடி முதலிடம் – காமக்கொடி பெருமிதம்

we-r-hiring

 

MUST READ