spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதீபாவளி பண்டிகை: ரயில் நிலையத்தில் குவிந்த புலம் பெயர் தொழிலாளர்கள்…

தீபாவளி பண்டிகை: ரயில் நிலையத்தில் குவிந்த புலம் பெயர் தொழிலாளர்கள்…

-

- Advertisement -

தீபாவளி, சட்பூஜா பண்டிகை மற்றும் பீகார் தேர்தலுக்காக  செல்ல ரயில் நிலையத்தில் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் குவிந்ததால் திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகரித்துள்ளது.தீபாவளி பண்டிகை: ரயில் நிலையத்தில் குவிந்த புலம் பெயர் தொழிலாளர்கள்…பின்னலாடை நகரமான திருப்பூர் மாநகரில் அதிகளவிலான வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலத்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  தீபாவளி மற்றும் சட் பூஜா உள்ளிட்ட பண்டிகைகளுக்கு தங்களது சொந்த ஊருக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்களில் அனைவருக்கும் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் பண்டிகை மற்றும் அடுத்த மாத துவக்கத்தில் வர உள்ள பீகார் தேர்தலுக்காக  சொந்த ஊருக்கு செல்ல தொழிலாளர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் திருப்பூர் ரயில் நிலையத்தில் ஏராளமான புலம் பெயர் தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக பீகார் ஒரிசா ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் வரை செல்லும் டாடா நகர்  ரயிலில் செல்வதற்காக  திருப்பூர் ரயில் நிலையத்தில் அதிக அளவில் வட மாநில தொழிலாளர்கள் குவிந்தனர். திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் 50-க்கும் மேற்பட்ட ரயில்வே இருப்பு குறித்து பாதை காவல் ஆய்வாளர் ருவந்திகா தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.தீபாவளி பண்டிகை: ரயில் நிலையத்தில் குவிந்த புலம் பெயர் தொழிலாளர்கள்…மேலும் ரயில் நிலையத்துக்கு வந்த அனைத்து பயணிகளையும் முறையாக சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். ரயிலில் செல்பவர்கள் ஆபத்தான பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்கின்றார்களா என்பது குறித்தும் சோதனை மேற்கொண்டனர். பின்னர் வட மாநில தொழிலாளர்களிடம் ரயிலில் வண்டி அடித்துக் கொண்டு மீறாமல் எப்படியும் செல்ல வேண்டும் தங்களது பொருட்களை பாதுகாப்பாக எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இருட்டுப்பாதை போலீசார் அறிவுறுத்தினர்.

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் தலை முடி…. உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…

we-r-hiring

MUST READ