spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெயர் சரிபார்ப்பது முதல் திருத்தம் வரை – விரிவான விளக்கம்

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெயர் சரிபார்ப்பது முதல் திருத்தம் வரை – விரிவான விளக்கம்

-

- Advertisement -

தமிழகத்தில் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை எப்படி பார்க்கவேண்டும்,  பெயர் இல்லாதவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெயர் சரிபார்ப்பது முதல் திருத்தம் வரை – விரிவான விளக்கம்

கேள்வி : வரைவு வாக்காளர் பட்டியில் பெயர் உள்ளதா என்பதை எப்படி பார்க்க முடியும்?

we-r-hiring

பதில்:வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் voters.eci.gov.in  மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளம் மூலமாக தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை (EPIC Number) உள்ளீடு செய்து பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி : வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரம் வெளியிடப்படுமா?

பதில் : வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், இறந்தவர்கள், கண்டறிய இயலாத/ முகவரியில் இல்லாத வாக்காளர்கள் (Absent), இடம் பெயர்ந்தவர்கள் (Shifted), இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் பட்டியலில்  (ASD பட்டியல்கள்) இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் விவரங்களை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் (DEO) இணையதளங்களில் வெளியிடப்பட்டும்.  பொதுமக்கள் தங்களது விவரங்களை இப்பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

கேள்வி: வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்?

பதில்: வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6 ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.

மேலும், இணையதளம் மூலமாகவும் படிவங்களை சமர்ப்பிக்கலாம். உங்கள் மொபைல் அல்லது கணினியில் NVSP (National Voters’ Service Portal) அல்லது வாக்காளர் உதவி மைய செயலி (Voter Helpline App) திறக்கவும். படிவம் எண் 6 (Form 6) தேர்ந்தெடுக்கவும். உங்கள் அடிப்படைத் தகவல்களையும் தேவையான ஆவணங்களையும் பதிவேற்றவும். விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின்பு, ஒரு விண்ணப்ப எண் கிடைக்கும். அதன் மூலம் உங்கள் விண்ணப்ப நிலையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்.

கேள்வி : பெயர் சேர்ப்பதற்கான படிவத்தை யாரிடம் பெற வேண்டும் யாரிடம் சமர்ப்பிக்க வேண்டும்?

பதில்: தேர்தல் ஆணைய அறிவுறுத்தல் படி ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் 50  படிவம் 6 உள்ளது. அவர்களிடமிருந்து படிவத்தை பெற்று பூர்த்தி செய்து அவர்களிடமே திருப்பி வழங்கலாம்.

கேள்வி : எத்தனை நாட்கள் வரை பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்?

பதில்: வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் டிச.19-ம் தேதி முதல் ஐனவரி 18ம் தேதி வரை ஆட்சேபங்கள் இருந்தால் தெரிவிக்கலாம். வாக்காளர் பெயர் சேர்த்தல், ஏற்கெனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்புகளை தெரிவிக்கலாம்

கேள்வி: வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றவர்கள் தொகுதி மாற விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமா?

பதில் : வரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றவர்கள் முகவரி மாற்றம் செய்ய மற்றும் தொகுதி மாற படிவம் 8 சமர்ப்பிக்கலாம்.

கேள்வி: புதிதாக விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் எப்போது வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்?

பதில்: புதிய விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்களின் பெயர்கள் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.

கேள்வி: உதவி / புகார் தெரிவிக்க எங்கு தொடர்பு கொள்ளலாம்?

பதில்: தேர்தல் ஆணையத்தின் 1950 (Toll Free Helpline), அல்லது மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தை தொடர்புகொள்ளாம்.

ஒவ்வொருவரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சரியாக உள்ளதா எனக் கண்டறிந்து, இல்லையெனில் உடனே திருத்தம் செய்வது அவசியம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சாதி வாரி கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்கான பிரச்சனை – அன்புமணி ராமதாஸ்

MUST READ