முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்றத்துக்கான நிர்வாகக் குழுவின் 3ஆவது கூட்டம் தொடங்கியது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக ஆலோசனை வழங்க தமிழக அரசு குழு அமைத்துள்ளது.
காலநிலை மாற்றத்துக்கான நிர்வாகக் குழுவின் 3ஆவது கூட்டம் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.
அக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வா் மு.க ஸ்டாலின், “அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் டிட்வா புயலால் ஏற்பட்ட பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். எப்போது வேண்டுமானாலும் புயல் தாக்கும் என்ற நிலையை நாம் தாண்டி விட்டோம். இந்தியாவிற்கே வழி காட்டும் நிலையில் தமிழ்நாடு உள்ளது. காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கண்கூடாக பார்க்கிறோம். டிட்வா புயலின் கோரத் தாண்டவத்தை பார்த்தோம். பேரிடர்களால் இலங்கை உள்ளிட்ட நாடுகள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளன என்பதையும் பார்த்தோம். மிக விரைவில் காலநிலை கல்வி அறிவு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. 297 பசுமை பள்ளிகளில் கூல் ரூஃப் திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் அலையாத்தி காடுகளில் பரப்பளவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. திராவிட மாடல் அரசு பெண்களுக்கான அரசாக எல்லா துறைகளிலும் பெயர் வாங்கியுள்ளது. பொது போக்குவரத்தை ஊக்கப்படுத்துதல், 120 மின்சார பேருந்து சேவை அறிமுகம், 600 மின்சார பேருந்துகள் உள்ளிட்டவைகளை பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். அரசுக்கு ஒரு கண் சுற்றுச்சூழல் என்றால் இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றொரு கண். மக்கள் அதிக எண்ணிக்கையில் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்க மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். தமிழ்நாட்டில் பொது போக்குவரத்தை ஊக்குவிக்க, 120 மின்சார பேருந்து சேவை அறிமுகம் செய்யப்படும். பேரிடர் நிதியாக 24,000 கோடிக்கு மேல் கேட்கப்பட்டிருந்த நிலையில், ஒன்றிய அரசு வரும் 17% மட்டுமே வழங்கியது” என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா்.
ஆண்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.10,000… பீகார் அரசு திரும்ப கேட்டு நோட்டீஸ்


