தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் அவசர தேவைகளை சமாளிக்க, மாநிலம் முழுவதும் 1,353 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் அவசர தேவைகளை சமாளிக்க, மாநிலம் முழுவதும் 1,353 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த ஆம்புலன்ஸ்கள் தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டத்தின் கீழ் செயல்படும் 108 சேவைக்கானவை. அனைத்து 108 ஆம்புலன்ஸ்களிலும் தீக்காயத்துக்கான சிறப்பு சிகிச்சை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மாநில, தேசிய நெடுஞ்சாலை என போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் 120 ஆம்புலன்ஸ்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ உதவிகள் தேவைப்படுவோருக்கு விரைந்து சேவை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல், குறுகிய சாலைகள் மற்றும் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் விரைவாகச் செல்ல, இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்களும் பயன்படுத்தப்பட உள்ளன. பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும், உடனடியாக சிகிச்சை அளிக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
