spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜய் தனித்து போட்டியிட்டால் 23 சதவீதம் வாக்குகளை வாங்குவார்! திமுக கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்!

விஜய் தனித்து போட்டியிட்டால் 23 சதவீதம் வாக்குகளை வாங்குவார்! திமுக கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்!

-

- Advertisement -

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி தமிழக தேர்தல்களில் தனித்து போட்டியிட்டால் 23 சதவீதம் வாக்குகளைப் பெறலாம் என்று திமுக நடத்திய ரகசிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

we-r-hiring

இது தொடர்பாக தி பிரிண்ட் ஆங்கில இணைதயளம் வெளியிட்டிருக்கும் சிறப்பு கட்டுரையில் கூறியிருப்பதாவது:- கரூரில் நடிகரும், தவெக தலைவருமான விஜயின் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி  41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை திமுக சார்பில் ரகசிய கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பாக தி பிரிண்ட் இதழுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், விஜயின் தவெக இன்னும் தமிழ்நாடு முழுவதும் வலுவான செல்வாக்கை பெற்றுள்ளது என்றும், திமுகவுக்கு வலிமையான போட்டியாளராக வெளிப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக - அண்ணா அறிவாலயம்

திமுகவின் இந்த ரகசிய கருத்துக்கணிப்பு சுமார் 2.91 லட்சம் பேரிடம் நடத்தப்பட்டது. சராசரியாக ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 1,245 மாதிரிகள் எடுத்துக்கொள்ளப் பட்டன. த.வெ.க, பாஜக மற்றும் அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதும் குறித்தும், த.வெ.க. தனித்து போட்டியிட்டால் வாக்காளர்கள் விஜயை ஆதரிப்பார்களா? என்றும் வாக்காளர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவ்வாறு அதிமுக, பாஜக மற்றும் விஜயின் தவெக ஆகிய மூன்று கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் இணைந்து தேர்தலில் போட்டியிடும் சூழ்நிலையில், திமுகவுக்கு 50 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும், தே.ஜ.கூ-க்கு 35 சதவீத வாக்குகளும், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு 12 சதவீத வாக்குகளும், பிற கட்சிகளுக்கு 3 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

பாஜக, அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் இணைந்து சுமார் 35 சதவீத வாக்குகளை கைப்பற்ற முடியும் என்றாலும், அதிமுகவுக்குள் இருக்கும் உட்கட்சி பிரச்சினைகள் மற்றும் பாஜகவின் சித்தாந்த சார்புகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள எதிர்ப்பு ஆகியவை அத்தகைய கூட்டணியின் வாக்கு சதவீதத்தை கட்டுப்படுத்தக் கூடும் என்றும் கருத்துக்கணிப்பு கணித்துள்ளது. அதேநேரத்தில் த.வெ.க தனித்து தேர்தலில் போட்டியிட்டால், திமுகவின் வாக்குவங்கி 45 சதவீதமாகக் குறையும் என்றும், அதிமுக – பாஜக கூட்டணியின் வாக்கு சதவீதம் 22 சதவீதமாகக் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விஜயின் தவெக 23 சதவீதம் வாக்குகளை பெறும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டிருக்கிறது. விஜய் தனித்து போட்டியிடும் சூழ்நிலையில், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கான ஆதரவு 5 சதவீதமாகக் குறையக் கூடும் என்று இந்த கருத்துக்கணிப்பு கண்டறிந்துள்ளது.

விஜய் தனித்து தேர்தலில் போட்டியிடும் நிலையில், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியின் வாக்கு வங்கியையும் அவர் கரைத்து வருவதைக் காண முடிந்ததாக கருத்துக் கணிப்பில் ஈடுபட்ட ஒரு பெயர் வெளியிட விரும்பாத தேர்தல் வியூக வகுப்பாளர் தி பிரிண்ட் இதழிடம் தெரிவித்தார். இந்த கணக்கெடுப்பு திமுகவுக்கு சாதகமான போக்கை சுட்டிக்காட்டினாலும், விஜய் நீண்ட காலத்திற்கு ஒரு சவாலாக இருக்கக் கூடும் என்பதையும் இது வெளிப்படுத்துகிறது. 2029 மக்களவை தேர்தல் மற்றும் 2031 சட்டமன்றத் தேர்தல்களில் விஜய், திமுகவுக்கு கடுமையான சவாலாக உருவெடுக்கக் கூடும் என்பதை பொதுமக்களின் உணர்வு காட்டுவதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. அதேவேளையில், தவெக – அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, பாஜக தனித்து தேர்தலில் போட்டியிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து இந்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட வில்லை.

வரலாற்று சிறப்புமிக்க திட்டம் புதுமைப் பெண் திட்டம் - தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்

இது குறித்து பேசிய தேர்தல் வியூக வகுப்பாளர், கருத்துக்கணிப்பு குழுவிற்குள் அந்த விவகாரம் குறித்து விவாதித்தாகவும், அது தொடர்பாக பின்னர் விரிவாக கருத்துக்கணிப்பு நடத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எனினும் கள நிலவரம் பெரும்பாலும் மாநில சுயாட்சி vs மத்திய அரசு இடையேயான போராட்டமாகத் தென்படுவதாகவும் அவர் கூறினார். இந்த கருத்துக்கணிப்பின் மற்றொரு வியூக வகுப்பாளர் கூறுகையில், விஜயின் புகழ் ஓரளவுக்கு அரசியல் நம்பகத்தன்மையாக மாறுவது போல் தெரிகிறது என்று கூறினார். தவெக-வுக்கு தற்போது ஒழுங்கமைக்கப்பட்ட கட்சி கட்டமைப்பு இல்லை என்று தாங்கள் நம்புவதாகவும்  இருந்தபோதும், விஜயின் புகழ் வாக்கு வங்கியாக மாறி வருவதாகவும், இந்தப் போக்கு வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அரசியல் ஒழுங்கை மறுவரையறை செய்யக்கூடும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

MUST READ