spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் – டாக்டர்.அம்பேத்கர் – பாகம் 3

அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் – டாக்டர்.அம்பேத்கர் – பாகம் 3

-

- Advertisement -

அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும்  என்று டாக்டர்.அம்பேத்கர் எழுதிய கட்டுரையின் தொடா்ச்சிஅரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் – டாக்டர்.அம்பேத்கர் – பாகம் 3சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் குறித்தும் வரைவு அரசியல் சாசனம் விமர்சிக்கப்படுகிறது. இதற்கு வரைவுக் குழுவைப் பொறுப்பாக்க முடியாது. அரசிய நிர்ணய சபையின் முடிவுகளை அது பின்பற்றியுள்ளது சிறுபான்மையினருக்கு இவ்வகை பாதுகாப்பை அரசியல் நிா்ணயசபை அளித்துள்ளது. மிகவும் விவேகமான செயல் இது என்று கருதுகிறேன். இந் நாட்டில் சிறுபான்மையினர் மற்றும் பெரும்பான்மையினர் இருவரும் தவறான ஒரு பாதையைப் பின்பற்றுகின்றனா். சமூகத்தில் சிறுபான்மைனயினா் இருப்பதைப் பெரும்பான்மையினர் காண மறுப்பது தவறான போக்காகும். சிறுபான்மையினா் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதும் அதேபோன்று தவறான போக்காகும் இரண்டு பிரச்சினைகளுக்கும் முடிவு காண தீர்வு ஒன்று அவசியம். சிறுபான்மையினர் இருப்பதை அங்கீகரிப்பதிலிருந்துதான் இதை ஆரம்பிக்க வேண்டும். பெரும்பான்மையினரும், சிறுபான்மையினரும் ஒரு நாள், ஒன்றாக இணைந்து ஒன் நிலையை எட்டுவதற்கு வகை செய்வதாக அது இருக்க வேண்டும். இந்த இருவகை நோக்கங்களுக்கு இது தீர்வாக இருப்பதால் அரசியல் நிர்ணயசபையின் தீர்மானம் வரவேற்கத்தக்கதாகும். சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கு எதிராக ஒருவகை மதவெறியை வளர்த்துவரும் தீவிரவாதிகளுக்கு இரண்டு விஷயங்களைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். சிறுபான்மையினர் எரிமலை சக்தியைப் போன்றவர்கள். வெடிக்க ஆரம்பித்தால் நாட்டின் முழுக் கட்டுமானமும் உடைந்து சுக்கலாகிவிடும். இந்த உண்மையை நிரூபிக்க ஐரோப்பிய வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. இந்திய சிறுபான்மையினர், தங்கள் வாழ்வைப் பெரும்பான்மையினரின் கையில் ஒப்படைக்கச் சம்மதித்துள்ளனர். அயர்லாந்து பிளவு படக்கூடாது என்பதற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது கர்சனிடம் திரு.ரெட்மண்ட் இவ்வாறு கூறினார்:  “பிராட்டெஸ்டன்ட் சிறுபான்மையினருக்கு எந்தவிதப் பாதுகாப்பை வேண்டுமென்றாலும் கேளுங்கள். ஆனால் நமக்கு ஒன்றுபட்ட அயர்லாந்து இருக்க வேண்டும்.” அதற்குக் கர்சன் அளித்த பதில் இதுதான்: “உங்கள் பாதுகாப்புகள் நாசமாய்ப் போகட்டும். அந்தப் பாதுகாப்பு யாருக்கு வேண்டும்? உங்களால் ஆளப்படுவதை நாங்கள் விரும்பவில்லை” இங்கு எந்தச் சிறுபான்மையினரும் இந்த நிலையை எடுக்கவில்லை. பெரும்பான்மையினரின் ஆட்சியை அவர்கள் விசுவாசத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். அந்தப் பெரும்பான்மையும்கூட அடிப்படையில் வகுப்புவாதப் பெரும்பான்மையே தவிர அரசியல் பெரும்பான்மையல்ல. சிறுபான்மையினரைப் பாகுபாடுடன் நடத்தக் கூடாது என்ற கடமையைப் பெரும்பான்மையினர் உணர வேண்டும். பெரும்பான்மையினர் நடந்துகொள்ளும் விதத்தைப் பொறுத்தே சிறுபான்மையினர் சிறுபான்மையினராகத் தொடர்ந்து இருப்பார்களா அல்லது பெரும்பான்மையினருடன் இணைந்து விடுவார்களா என்பது இருக்கிறது. சிறுபான்மையினரைப் பாகுபடுத்தி நடத்தும் வழக்கத்தைப் பெரும்பான்மையினர் கைவிட்டவுடன் சிறுபான்மையினர் சிறுபான்மையினராகத் தொடர்ந்து நீடிப்பதற்கான நியாயங்கள் மறைந்துவிடும். அதன் பின் சிறுபான்மை என்பதும் இல்லாமல் ஆகிவிடும்.

அடிப்படை உரிமைகள் பற்றிய பகுதியே அதிக விமர்சனத்துக்குள்ளாகியது. அடிப்படை உரிமைகளை வரையறுத்துக் கூறும் உறுப்பு எண் 13 பல விதிவிலக்குகளைக் கொண்டுள்ளது. விதிவிலக்குகள் உரிமைகளை முற்றிலுமாக ஜீரணித்துவிட்டன. ஒருவித ஏமாற்று வித்தையே இது என்று குற்றம் சாட்டப்படுகிறது. விமர்சகர்களின் கருத்துப்படி அடிப்படை உரிமைகள், வரம்பற்ற உரிமைகளாக இருக்கும்போதுதான் அடிப்படை உரிமைகளாகும். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அரசியல் சாசனத்தின் மற்றும் அதன் முதல் பத்துத் திருத்தங்களில் அடங்கியுள்ள உரிமைகள் பட்டியலைத் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்கள். அமெரிக்க உரிமைகள் பட்டியல் உண்மையான அடிப்படை உரிமைகள். ஏனெனில் அவை எந்தக் கட்டுப்பாட்டுக்கும் விதிவிலக்குக்கும் உட்பட்டவையல்ல என்று கூறப்படுகிறது.

we-r-hiring

இந்த விமர்சனங்கள் முழுவதும் அடிப்படை உரிமைகள் பற்றிய தவறான கருத்துகளின் விளைவாகத் தோன்றியவை என்பதை வருத்தத்துடன் கூறிக் கொள்கிறேன். முதலாவதாக அடிப்படை உரிமைகளை மற்ற உரிமைகளிலிருந்து அது வேறுபடுத்திக் காட்டுகிறது என்ற விமர்சனம் சரியல்ல. அடிப்படை உரிமைகள் வரம் பற்றது என்றும், அதே நேரத்தில் மற்ற உரிமைகள் வரம்பிற்குட்பட்டது என்றும் கூறுவது தவறு. அடிப்படை உரிமைகள் சட்டத்தின் பரிசு. ஆனால் அதேநேரத்தில் மற்ற உரிமைகள் தரப்புகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாகின்றன. அடிப்படை உரிமைகள் அரசின் பரிசாக இருப்பதால் அதற்குச் சில கட்டுப்பாடுகளை அரசு விதிக்க முடியாது என்று கொள்ள முடியாது.

அமெரிக்க அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமைகள் வரம்பற்றது என்று கூறுவது தவறு. அமெரிக்க அரசியல் சாசனத்தின் நிலைக்கும்,  நமது வரைவு அரசியல் சாசனத்தின் நிலைக்கும் இடையேயான வேறுபாடு, வடிவத்தில் மட்டும்தானே தவிர சாராம்சத்தில் அல்ல. அமெரிக்காவில் அடிப்படை உரிமைகள் வரம்பற்ற உரிமைகளல்ல என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டது. வரைவு அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விதிவிலக்குகள் ஒவ்வொன்றுக்கும் உதாரணமாக அமெரிக்க உச்சநீதி மன்றத்தின் தீரப்பொன்றையாவது எடுத்துக்காட்ட முடியும். வரைவு அரசியல் சாசனத்தின் 13 ஆவது விதியில் அடங்கியுள்ள பேச்சு சுதந்திரத்துக்கான கட்டுப்பாட்டை நியாயப்படுத்தும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பொன்றை எடுத்துக்கூறுவது பொருத்தமாக இருக்கும். கிட்லோ எதிர் நியூயார்க் என்ற வழக்கில் நியூயார்க்கின் “குற்றவியல் அராஜகம்” என்ற சட்டம் அரசியல் சாசனத்திற்குட்பட்டதா என்பது பிரச்சினையாக இருந்தது. பலாத்கார மாற்றங்களைக் கொண்டுவரத்தூண்டும் பேச்சுகளுக்குத் தண்டனை அளிக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் பின்வருமாறு அறிவித்தது: ” அரசியல் சாசனத்தால் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவை நீண்டகாலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள முக்கியக் கோட்பாடுகளாகும். பொறுப்பற்ற முறையில் பேசவோ, எழுதவோ அது வரம்பற்ற உரிமையை அளிக்கவில்லை. எந்தவித முறையிலும் உபயோகிக்க அது கட்டுப்பாடற்ற, தடையற்ற உரிமத்தை வழங்கவில்லை. அந்த சுதந்திரத்தைத் தவறுதலாக பயன்படுத்துபவர்களைத் தண்டிப்பதை தடுக்கவும் இல்லை. எனவே, அமெரிக்காவில் அடிப்படை உரிமைகள் வரம்பற்றதென்றும், வரைவு அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் அப்படியல்ல என்றும் கூறுவது தவறாகும்.”அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் – டாக்டர்.அம்பேத்கர் – பாகம் 3

அடிப்படை உரிமைக்கு ஏதேனும் வரையறை தேவைப்பட்டால், அமெரிக்காவில் உள்ளது போல் அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட வேண்டும். அப்படியில்லையென்றால் சம்பந்தப்பட்ட எல்லா நிலைமைகளையும் சீர்தூக்கி நீதித்துறையால் தீர்மானிக்கப்படுவதற்கு விட்டுவிட வேண்டும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க அரசியல் சாசனத்தைப் பற்றிய தவறான விளக்கமாகும் இது. இல்லையெனில் தவறாகப் புரிந்து கொண்டிருக்கக்கூடும் என்று வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன். இதைப் போன்ற எதையும் அமெரிக்க அரசியல் சாசனம் கூறவில்லை. கூட்டம் கூடும் உரிமை விஷயம் ஒன்றைத் தவிர வேறு எந்த அடிப்படை உரிமைகளிலும் அமெரிக்க அரசியல் சாசனம் அமெரிக்க மக்களுக்கு வரையறை எதையும் விதிக்கவில்லை. அடிப்படை உரிமைகளில், வரையறை விதிப்பது நீதித்துறைக்கு விடப்பட்டுள்ளது என்று கூறுவதும் தவறாகும். வரையறைகளை விதிக்கும் அதிகாரத்தை, அமெரிக்கக் காரங்கிரஸே பெற்றுள்ளது. விமர்சகர்களின் கற்பனைக்கு மாறாக உண்மை நிலை இருக்கிறது. அமெரிக்காவில் அரசியல் சாசன அடிப்படை உரிமைகள் ஐயத்துக்கிடமின்றி வரம்பற்றவை என்பது உண்மைதான். ஆனால் இதற்கு வரம்புகள் அவசியம் என்பதை காங்கிரஸ் வெகுவிரைவில் உணர்ந்துகொண்டது. அரசியல் சாசனப்படி இந்தக் கட்டுப்பாடுகள் செல்லுபடியாகுமா என்ற கேள்லி உச்ச நீதிமன்றத்தின் முன் எழுந்தபோது, அமெரிக்கக் காங்கிரசுக்கு இந்த வரையறைகளை விதிக்க அரசியல் சாசனம் எந்த அதிகாரத்தையும் கொடுக்கவில்லை என்று வாதிட்டபோது, உச்ச நீதிமன்றம் காவல் அதிகாரம் என்ற கோட்பாட்டை முன்வைத்தது. ஒவ்வொரு அரசுக்கும் இயற்கையாக உள்ள காவல் அதிகாரம், அரசியல் சாசனத்தால் வெளிப்படையாக அளிக்கப்படவேண்டிய அவசியமில்லை என்று வரம்பற்ற அடிப்படை உரிமை ஆதரவாளர்களுக்கு அது பதிலடி கொடுத்தது. நான் ஏற்கனவே குறிப்பிட்ட வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றத்தின் மொழியில் கூறுவதென்றால், பொதுப்பண்பாட்டைச் சீரழிக்கும், வன்முறையைத் தூண்டி அமைதியைச் சீர்குலைக்கும் பொதுநலன்களுக்கு எதிராக இயற்றப்படும் பேச்சுக்களின் மூலம் பேச்சுரிமையைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது தன் காவல் அதிகாரத்தை ஒரு நாடு பயன்படுத்துவதை எவரும் தட்டிக் கேட்க முடியாது.”

அடிப்படை உரிமைகளை வரம்பற்றதாக வடிவமைத்து விட்டு, காவல் அதிகாரம் மூலம் நாடாளுமன்றத்துக்கு உச்சநீதி மன்றம் உதவிக்கு வரும் வழிமுறைக்குப் பதிலாக, அரசே நேரடியாக அடிப்படை உரிமைகளுக்கு வரம்பு விதிக்க வரைவு அரசியல் சாசனம் வழிவகுத்துள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகளில் எந்த மாற்றமும் இல்லை. ஓர் இடத்தில் நேரிடையாக செய்யப்பட்டுள்ள வழிமுறைகள் மற்ற இடத்தில் மறைமுகமாக செய்யப்பட்டுள்ளன. இரண்டு இடங்களிலும் அடிப்படை உரிமைகள் வரம்பற்றவை அல்ல.

அடிப்படை உரிமைகளைத் தொடர்ந்து அரசியல் சாசனத்தில் “வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் (Directive Principles )” கொடுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அரசியல் சாசனத்தில் இது ஒரு புதுமையான அம்சம். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கான அரசியல் சாசனத்தில் இந்த மாதிரி நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ள ஒரே நாடு அயர்லாந்து ஆகும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளும் விமர்சனங்களுக்கு உள்ளாயின. ஆனால் இந்த விமர்சனங்கள் மேலெழுந்த வாரியாகவே உள்ளன. இதை அரசியல் சாசனமே விளக்கியுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைக்கோட்பாடுகளுக்குச் சட்ட ஆதரவு இல்லையென்று சொன்னால் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவை எதையும் கட்டுப்படுத்தாது என்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளமுடியாது. சட்ட அடிப்படையில் அவை எதையும் கட்டுப்படுத்தமுடியாது என்பதால் அவை பயனற்றவை என்று கூறுவதை யும் ஏற்றுக்கொள்ள முடியாது.

1935 ஆம் ஆண்டு அரசாங்கச் சட்டத்தின்படி பிரிட்டிஷ் அரசு, காலனி நாடுகள் மற்றும் இந்தியாவிலுள்ள கவர்னர் -ஜெனரல் மற்றும் ஆளுநர்களுக்கு அனுப்பிய செயல்துறைக் கட்டளை ஆவணங்களைப் போன்றவைதான் வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள். இம் மாதிரியான ஆவணங்களைக் குடியரசுத் தலைவருக்கும் ஆளுநர்களுக்கும் அனுப்ப வரைவு அரசியல் சாசனம் வழிவகுத்துள்ளது. செயல்துறைக் கட்டளை ஆவணங்களின் வாசகங்களை அரசியல் சாசனத்தில் VI ஆவது அட்டவணையில் காணலாம். வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் என்பவை செயல்துறைக் கட்டளை ஆவணங்களின் மறுபெயர் என்றுதான் கூறவேண்டும். ஒரே ஒரு வேறுபாடு என்ன வென்றால் அவை சட்டமன்றம் மற்றும் நிர்வாகத் துறைக்கான அறிவிப்புகளாகும். என்னைப் பொறுத்தவரையில் இந்த மாதிரியான விஷயங்கள் வரவேற்கப்பட வேண்டும். அமைதி, ஒழுங்கு, நல்லாட்சி ஆகியவைகளை செயல்படுத்தப் பொதுவான அதிகாரம் வழங்கப்படும் இடங்களில் அதன் செயல்பாடுகளை நெறிப்படுத்தக் கூடிய கட்டளைகள் அளிக்கப்படுவது அவசியமாகும்.அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் – டாக்டர்.அம்பேத்கர் – பாகம் 3வரைவு அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ள இவ்வகை அறிவுறுத்தல்கள் வேறு ஒரு காரணத்தினாலும் நியாயமாகிறது. வரைவு அரசியல் சாசனம் நாட்டின் அரசு எந்திரத்தை உருவாக்க மட்டும் வழிசெய்கிறது. வேறு சில நாடுகளில் உள்ளதுபோல் ஒரு குறிப்பிட்ட கட்சியைப் பதவிக்குக் கொண்டுவரும் உபாயமல்ல இது. யார் பதவியில் இருக்க வேண்டுமென்பது மக்கள் தீர்மானத்துக்கு விடப்பட்டுள்ளது. ஜனநாயகச் சோதனையில் இந்த முறை வெற்றிபெற வேண்டுமென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். யார் அதிகாரத்துக்கு வந்தாலும் அதைத் தன் இஷ்ட்ப்படி உபயோகிக்கும் சுதந்திரம் இருக்கக்கூடாது. இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துகையில் நெறிமுறைக் கோட்பாடுகள் என அழைக்கப்படும் செயல்துறைக் கட்டளை ஆவண நெறிகளைப் பின்பற்றியாக வேண்டும். யாரும் உதாசீனப்படுத்த முடியாது. அதை மீறியதற்கான நீதிமன்றத்தில் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் மக்கள் மன்றத்தில் தேர்தல் நேரத்தில் நிச்சயமாகப் பதிலளிக்க வேண்டியிருக்கும். நியாயமான சக்திகள் அரசு அதிகாரத்தைப் பிடிக்க முயற்சிகள் செய்யும்போது, இந்த நெறிமுறைக் கோட்பாடுகளின் பலம் நன்றாக உணரப்படும்.

எதையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் அதற்கு இல்லை என்பது அதை அரசியல் சாசனத்தில் சேர்ப்பதற்கு எதிரான வாதமாக இருக்க முடியாது. அரசியல் சாசனத்தில் அதற்கு எந்த இடம் கொடுக்கப்பட்ட வேண்டுமென்பதில் கருத்து வேற்றுமை இருக்கலாம். கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டிய விதிகளுக்கிடையே அது போன்றில்லாத அவசியமானால் நிறைவேற்றப்பட வேண்டிய விதிகளை சேர்த்துக் கொள்வது சற்று விசித்திரமாகத்தான் தெரிகிறது. என் கருத்துப்படி அதற்குப் பொருத்தமான இடம் IIIA, IV அட்டவணை ஆகும். அதில்தான் குடியரசுத் தலைவருக்கும் மற்றும் ஆளுநர்களுக்குமான செயல்துறை கட்டளை ஆவணம் உள்ளது. நான் ஏற்கனவே கூறியபடி நிர்வாகம், அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஆட்சித்துறை மற்றும் சட்டமன்றங்களுக்கு அறிவுறுத்தும் ஆவணங்களாகும் இவை. ஆனால் இது விஷயங்களை ஒழுங்காகத் தொகுத்தளிக்கும் விஷயமே தவிர வேறன்று.

மத்திய ஒன்றிய அரசுக்கு அதிக அதிகாரம் உள்ளது என்பது சில விமர்சகர்களின் வாதம். வேறு சிலர் மேலும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டுமென்கின்றனர். இரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட நிலையை வரைவு அரசியல் சாசனம் எடுத்துள்ளது. மத்திய ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்க என்னதான் விரும்பவில்லையென்றாலும் மத்திய ஒன்றிய அரசு அதிக பலம் பெறுவதைத் தடுக்க முடியாது. இந்த நவீன உலகில், மத்தியில் அதிகாரக் குவியல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இதைப் புரிந்துகொள்ள ஒருவர் அமெரிக்கக் கூட்டரசின் வளர்ச்சியைக் கவனித்தாலே போதும். அரசியல் சாசனப்படி குறைந்த அளவு அதிகாரமே அதற்கு அளிக்கப்பட்டிருந்தாலும் அதன் ஆரம்ப நிலையிலிருந்து அது பூதாகரமாக வளர்ந்து மாகாண அரசுகளையே ஓரங்கட்டிவிட்டது. இது நவீன காலகட்டத்தின் விளைவாகும். இந்தச் சூழ்நிலைகளின் தாக்கத்திலிருந்து இந்திய அரசும் தப்ப முடியாது. யார் என்ன செய்தாலும், அது மேலும் பலம் பெறுவதைத் தடுக்க முடியாது. அதே வேளையில் அது அதிக பலம்பெறும் போக்கை நாம் தடுக்க வேண்டும். அதன் ஜீரணிக்கும் திறனுக்கு அதிகமாக அதற்கு ஊட்டிவிடக்கூடாது. அதன் பளுவுக்குத் தக்கபடி அதன் பலம் இருக்க வேண்டும். தன் பளுவைத் தாங்க முடியாமல் விழுந்துவிடும் அளவிற்கு அதன் பலத்தை அதிகரிப்பது முட்டாள்தனமாகும்.,

“அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும்”- டாக்டர். அம்பேத்கர்

மத்திய ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையேயான அரசியல் சாசனப்படியான உறவுகள் ஒரு வகையாகவும், மத்திய ஒன்றிய அரசுக்கும் இந்திய சமஸ்தானங்களுக்கும் இடையேயான அரசியல் சாசனப்படியான உறவுகள் வேறு வகையாகவும் வரைவு சாசனத்தில் வகை செய்யப்பட்டுள்ளதும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. ஒன்றியப் பட்டியலில் உள்ள எல்லா விஷயங்களையும் இந்திய சமஸ்தானங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. பாதுகாப்பு, வெளியுறவு, செய்தித்துறை ஆகியவற்றையே அவை ஏற்றுக் கொள்ளக்கூடும். பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள விஷயங்களை அவை ஏற்றுக்கொள்ள மாட்டா. அதேபோல் வரைவு அரசியல் சாசனத்தில் உள்ள மாநிலப்பட்டியலையும் இந்திய சமஸ்தானங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவை தமது சொந்த அரசியல் நிர்ணயசபையை நிறுவி, தமக்கென அரசியல் சாசனத்தைத் தயாரிக்க உரிமை பெற்றுள்ளன. இது உண்மையிலேயே வருந்தத்தக்கதுதான். ஆனால் எந்த சமாதானமும் சொல்ல முடியாத நிலையில் உள்ளேன். உறவுநிலையில் உள்ள இந்த வேறுபாடுகள் நாட்டின் திறமையான நிருவாகத்துக்கு ஆபத்தாக முடியும். இந்த வேறுபாடுகள் நீடிக்கும் வரை அகில இந்திய விஷயங்களில் மத்திய அரசின் அதிகாரம் வலுவிழந்துவிடும். எல்லா தேர்வுகளிலும் எல்லா இடங்களிலும் செலுத்த முடியாத தோன்றும்போது முக்கிய அதிகாரங்களின் மீதான வரம்புகள் அதிகாரத்தை அதிகாரம் என்றே கூற முடியாது. ஒரு யுத்த நிலை தோன்றும் போது முக்கிய அதிகாரங்களின் மீதான வரம்புகள் நாட்டின் முழு வாழ்க்கையில் பெரும்சீர்கேடுகளை உருவாக்கலாம். வரைவு அரசியல் சாசனப்படி இந்திய சமஸ்தானங்கள் தங்கள் தான் இதைவிடக் கொடுமையானது. இது மிகவும் ஆபத்தான விதி சொந்தப்படைகளை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பது தான் இதைவிடக் கொடுமையானது. இது மிகவும் ஆபத்தான விதி என்பதுடன் நாட்டை பின்னுக்குத் தள்ளி விடக்கூடும். இதனால் இந்திய நாட்டின் ஒற்றுமை சின்னாபின்னப்படுவதுடன் மத்திய அரசே கவிழ்க்கப்படலாம். வரைவுக் குழுவின் சிந்தனையை நான் தவறாகப் புரிந்துகொள்ளவில்லையென்றால் அவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் அதிருப்தி கொண்டுள்ளனர். மாநிலங்கள் மற்றும் இந்திய சமஸ்தானங்கள் மத்திய அரசுடன் கொண்டுள்ள அரசியல் சாசன ரீதியான உறவுகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமென்பதே அவர்கள் விருப்பம். நிலைமையைச் சீர்படுத்த துரதிருஷ்டவசமாக அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. அரசியல் நிர்ணய சபையின் முடிவுக்கு அவர்கள் கட்டுப்பட்டிருந்தார்கள். இரண்டு ஒப்பந்தக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முடிவுக்கு அரசியல் நிர்ணயசபை இணங்க வேண்டியிருந்தது.

ஜெர்மனியில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் நமக்கு ஊக்கமளிக்கின்றன. 1870-ல் பிஸ்மார்க் நிறுவிய ஜெர்மன் பேரரசு ஒரு கூட்டரசாக விளங்கியது. அது 25 உறுப்புகளைக் கொண்டிருந்தது. இந்த 25 உறுப்புகளில் 22 முடியாட்சி நாடுகளாகவும் 3 நகரக் குடியரசுகளாகவும் இருந்தன. காலம் செல்லச் செல்ல இந்த வேறுபாடுகள் மறைந்தன. ஜெர்மனி ஒரே மக்களைக் கொண்ட ஒரே நாடாக ஒரே அரசியல் சாசனத்தின் கீழ் வந்தது. ஜெர்மனியைவிட இந்திய சமஸ்தானங்கள் ஒருங்கிணைவது விரைவாக இருக்கும். 1947 ஆகஸ்டு 15ல் 500 இந்திய சமஸ்தானங்கள் இருந்தன. இன்று இந்திய சமஸ்தானங்கள் மாகாணங்களுடனும் தம்முள்ளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து, மத்திய ஒன்றிய அரசின் நேரடி நிர்வாகத்திற்கு வந்த பகுதிகள் என்ற முறையில் 20-30 மாகாணங்களாக செயல்பட்டு வருகின்றன. இது ஒரு வேகமான மாற்றமாக, முன்னேற்றமாக உள்ளது. இந்திய மாநிலங்கள் எந்த உறவுகளின் அடிப்படையில் மத்திய ஒன்றிய அரசுடன் செயல்பட்டு வருகின்றனவோ, அதே அடிப்படையில் இந்த சமஸ்தானங்களும் ஒன்றியத்துடன் முழுமையாக இணைந்து செயல்படக் கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் இந்திய ஒன்றியத்துக்கு தேவைப்படும் வலிமையை அவற்றால் அளிக்க முடியும். தமக்கென ஓர் அரசியல் நிர்ணய சபையை நிறுவி, சொந்த அரசியல் சாசனத்தைத் தயாரிக்க வேண்டிய தொல்லை இருக்காது. அவை இழக்க வேண்டியது எதுவுமில்லை.

இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று வரைவு அரசியல் சாசன விதி 1 கூறுவதை சிலர் விமர்சிக்கின்றனர். சரியாகக் கூறவேண்டுமென்றால் மாநிலங்களின் கூட்டரசு என்று அழைக்கப்பட வேண்டுமென்கின்றனர். ஒற்றையரசாகத் திகழும் தென் ஆப்பிரிக்கா ஒன்றியம் என்று அழைக்கப்படுகிறது. கூட்டரசாக உள்ள கனடாவும் ஒன்றியம் என்று அழைக்கப்படுகிறது. எனவே இந்தியாவை ஒன்றியம் என்று அழைப்பதை அதன் அரசியல் சாசனம் கூட்டரசுத் தன்மை கொண்டதாக இருப்பினும் தவறாகக் கொள்ளமுடியாது. வேண்டுமென்றுதான் ஒன்றியம் என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பது முக்கியம். கனடா அர சியல் சாசனத்தில் ஏன் ஒன்றியம் என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. ஆனால் வரைவுக்குழு ஏன் இந்தச் சொல்லை உபயோகப்படுத்தியுள்ளது என்பதை நான் கூற முடியும். இந்தியா ஒரு கூட்டரசாக இருக்கப் போகிறதென்றாலும், இந்த மாநிலங்களுக்கிடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையிலான கூட்டரசல்ல இது. எனவே இந்தக் கூட்டரசிலிருந்து எந்த அரசும் பிரிந்து செல்ல முடியாது. இதைத் தெளிவாகத் தெரிவிக்க வரைவுக் குழு விரும்பியது. இந்தக் கூட்டரசு அழிக்க முடியாததாகையால் ஒன்றியம் என்றழைக்கப்படுகிறது. நிருவாக வசதிக்காக நாடும், மக்களும் பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டாலும், நாடு ஒன்றிணைந்த முழுமையாகும். ஒரே ஆதாரத்தில் உதயமான ஒரு பேரரசின் கீழ் வாழும் ஒரே மக்கள் ஆவர். தங்களுடைய கூட்டரசை அழிக்க முடியாது, மாகாணங்கள் பிரிந்து செல்ல முடியாது என்பதற்காக அமெரிக்கா ஓர் உள்நாட்டு போரில் ஈடுபட வேண்டியிருந்தது. விவாதத்திற்கும், குழப்பத்திற்கும் விட்டுவிடாமல் ஆரம்பத்திலேயே இதைத் தெளிவுபடுத்துவது சிறந்தது என்று வரைவுக்குடி முடிவு எடுத்தது.

அரசியல் சாசனத்தைத் திருத்துவது சம்பந்தமான உறுப்புகள், வரைவு அரசியல் சாசன விமர்சகர்களிடம் பெருத்த கண்டனத்திற்குள்ளாயின. வரைவு அரசியல் சாசனத்தில் உள்ள வழிவகைகள் அரசியல் சாசனத்தைத் திருத்தம் செய்வதைக் கடினமாக்குகின்றன என்று அவர்கள் கூறுகின்றனர். சாதாரணப் பெரும்பான்மை மூலம் அரசியல் சாசனத்தைத் திருத்த சில ஆண்டுகளுக்காவது வழிவகைகள் செய்யவேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த வாதம் நுணுக்கமானதும் சாமர்த்தியமானதுமாகும். அரசியல் நிர்ணயசபை வயது வந்தோர் வாக்களிப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் எதிர்கால நாடாளுமன்றம் வயதுவந்தோர் வாக்களிப்பின் அடிப்படையில் தேர்தெடுக்கப்படும். இருப்பினும் அரசியல் நிர்ணய சபை சாதாரணப் பெரும்பான்மை மூலம் அரசியல் சாசனத்தை நிறைவேற்றும் உரிமை பெற்றுள்ளது. ஆனால் எதிர்கால நாடாளுமன்றத்துக்கு அந்த உரிமை இல்லை. வரைவு அரசியல் சாசனத்தின் ஒரு விசித்திர நிலை இது என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு எந்த அடிப்படையும் இல்லாததால் இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். அரசியல் சாசனத்தைத் திருத்துவதற்கான வழி முறைகள் எவ்வளவு எளிமையானவை என்பதைத் தெரிந்துகொள்ள அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய அரசியல் சாசனங்களை ஒப்பு நோக்கவேண்டும். அவற்றுடன் ஒப்பிட்டால் வரைவு அரசியல் சாசனத்திலுள்ள வழிமுறைகள் மிகவும் எளிமையானவை என்பதைக் காணலாம். பொதுமக்கள் வாக்கெடுப்பு அல்லது கருத்துக் கணிப்பு போன்ற விரிவான, கஷ்டமான நடைமுறைகளைத் தவிர்த்துள்ளது. மத்திய, மற்றும் மாநிலச் சட்டசபைகளுக்கு இந்த அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட விஷயங்களில் மட்டுமே, மாநில சட்டசபைகளின் ஏற்பு அவசியமாக உள்ளது. இவை அதிக எண்ணிக்கையில் இல்லை. ஒவ்வொரு அவையிலும் ஆஜராகி உள்ள உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை, ஒவ்வொரு அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மை இருக்க வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தை திருத்துவதற்கு வேறு எளிய முறையை எண்ணிப் பார்ப்பது கடினமான விஷயம்.

அரசியல் நிர்ணயசபை மற்றும் எதிர்காலத்தில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் உருவாகவுள்ள நாடாளுமன்றத்தைக் குறித்த தவறான கருத்தின் அடிப்படையில்தான் திருத்தம் சம்பந்தமான வழிமுறைகள் விவேகமற்றவையாக உள்ளன என்று கூறப்படுகிறது.அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் அரசியல் நிர்ணய சபை எந்த ஒரு கட்சி சார்பாகவும் செயல்படவில்லை. நன்கு செயல்படக்கூடிய ஓர் அரசியல் சாசனத்தை உருவாக்குவதைத் தவிர அரசியல் நிர்ணயசபைக்கு வேறு எந்த அக்கறையும் இல்லை அரசியல் சாசன விதிகளைப் பரிசீலிக்கையில் ஒரு குறிப்பிட்ட நடை முறையை நிறைவேற்ற வேண்டுமென்று விசேஷ அக்கறை அதற்குக் கிடையாது. அரசியல் நிர்ணயசபை போன்று எதிர்கால நாடாளுமன்றும் தன் கூட்டத் தொடரை நடத்தினால் அதன் உறுப்பினர்கள் கட்சிச் சார்புடன் நடந்துகொள்வார்கள் அரசியல் சாசன விதிகளால் தடுக்கப்பட்ட சில கட்சி நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அரசியல் சாசனத்தைத் திருத்த முயல்வார்கள். நாடாளுமன்றத்துக்கு இந்தமாதிரி சில அக்கறைகள் உள்ளபோது, அரசியல் நிர்ணயசபைக்கு இவை எதுவும் கிடையாது. இதுதான் நாடாளுமன்றத்துக்கும் அரசியல் நிர்ணயசபைக்கும் இடையேயான வேறுபாடு வரம்புக்குட்பட்ட வாக்களிப்பின் மூலம் அரசியல் நிர்ணயசபை தேர்த்தெடுக்கப்பட்டாலும், சாதாரணப் பெரும்பான்மையின் மூலம் அரசியல் சாசனத்தை நிறைவேற்ற அது, அனுமதிக்கப்பட்டபோது, நாடாளுமன்றம் வயதுவந்தோர் வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் திருத்தத்துக்கு அது ஏன் அதே சாதாரணப் பெரும்பான்மையின் மூலம் அனுமதிக்கப்படவில்லை என்பதற்கு இதுவே காரணம்.

வரைவு குழுவால் அறுதி செய்யப்பட்ட வரைவு அரசியல் சாசனத்திற்கு எதிராக எழுத்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளேன் என நம்புகிறேன் கடந்த எட்டு மாதங்களாக மக்கள் முன் வரைவு அரசியல் சாசனம் வைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது எழுந்த முக்கிய விமர்சனங்கள் மற்றும் கருத்துகள் எதையும் கவனிக்காமல் விட்டுவிடவில்லை. வரைவுக்கு அளித்துள்ளபடி அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்ளும் முன் அதில் மாற்றங்கள் செய்வது, அரசியல் நிர்ணயசபையின் முடிவைப் பொறுத்து இருக்கிறது.

ஆனால் இதை நான் கூற விரும்புகிறேன்: இந்தியாவின் சில மாநிலச் சட்டமன்றங்களில் அரசியல் சாசனம் விவாதிக்கப் பட்டது. பம்பாய், மத்திய மாகாணங்கள், மேற்கு வங்காளம், விவாதிக்கப் பட்டது. அரசியல் சாசனத்தின் நிதி சம்பந்தமான பீஹார், மெட்ராஸ், கிழக்கு பஞ்சாப் சட்டமன்றங்களில்  விவாதிக்கப்பட்டது. அரசியல் சாசனத்தின் நிதி சம்பந்தமான விதிகளைக் குறித்து சில மாநிலச் சட்டமன்றங்கள் கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளன. 226 ஆம் உறுப்பை மெட்ராஸ் சட்டமன்றம் எதிர்த்துள்ளது. இதைத் தவிர அரசியல் சாசன விதிகளுக்கு எந்த மாநிலச் சட்டமன்றமும் முற்றிலும் குறையின்றி இருக்கும் என்று கூறமுடியாது. வரைவு அரசியல் சாசனத்தை மேலும் மேம்படுத்த வரைவுக்குழுவே சில திருத்தங்களை அளித்துள்ளது. மாநிலச் சட்டமன்றங்களில் நடைபெற்ற விவாதங்கள் வரைவுக் குழுவால் அறுதி செய்யப்பட்டுள்ள இந்த அரசியல் சாசனம் இந்த நாட்டின் தொடக்கத்திற்கு போதுமானது என்ற தைரியத்தை எனக்கு அளித்துள்ளது. அது நடைமுறைப்படுத்தக் கூடியது, வளைந்து கொடுக்கக் கூடியது என்பதுடன் சமாதான காலத்திலும் யுத்த காலத்திலும் நாட்டை ஒன்றுபடுத்தக்கூடியது என்று கருதுகிறேன். இந்தப் புதிய அரசியல் சாசனத்தால் நிலைமைகள் மோசமானால் அதற்குக் காரணம் அரசியல் சாசனம் மோசமானது என்பதால் அல்ல மாறாக மனிதன் மோசமானவன் என்றுதான் சொல்ல வேண்டும்.

Dr. B.R. Ambedkar’s speech introducing the Draft Constitution in the Constituent Assembly on Nov. 04, 1948  நன்றி: Constituent Assembly Debates, Loksabha Secretariat, New Delhi)

அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் – டாக்டர்.அம்பேத்கர் – பாகம் 2

 

MUST READ