பைலட் ஓய்வு விதிகள் முதல் விமான ரத்து வரை… நெருக்கடி வெடித்த பின்னணியின் முழுவிவரம். 
2025-க்கு முன்: அதானி விமானத் துறையில் ஏகபோகம் செலுத்த – இண்டிகோ சந்தை மேலாதிக்கம் செலுத்தியது.

2019-2020: ஆறு முக்கிய விமான நிலையங்கள் தனியார்மயமாக்கப்பட்டு அதானி வசம் ஒப்படைகக்ப்பட்டது. ரூ.2,440 கோடி மதிப்பிலான டெண்டரை அதானி குழுமம் பெற்றது. அவர்கள் நாடு முழுவதும் பயணிகளின் 25% போக்குவரத்தை கட்டுப்பாட்டில் கொண்டவந்தனர்.
2020-2024: இண்டிகோவின் மேலாதிக்கம். 1700 விமானங்களுடன் இந்தியாவிலிருந்து உலகம் முழுவதும் செல்லும் 30 % விமான வழித்தடங்களில் விமானங்களை இயக்குகிறது.
2023-ல் பா.ஜ.க.வுக்கு ரூ.31 கோடி தேர்தல் நிதி வழங்கியது. அதானி, Air Works India-வை வாங்கி பராமதிப்பு, பழுதுபார்ப்பு, இயக்கம் ஆகியவற்றை மேற்கொள்ளும் MRO துறையில் பெரும் ஆதிக்கம் பெற்றாா்.
2025 தொடக்கம்: DGCA புதிய பைலட் ஓய்வு விதிகளை அறிமுகம் செய்தது. இதில் பைலட்டுகளின் கட்டாய ஓய்வு நேரம் 36 மணி நேரமாக உயர்த்தப்பட்டது. இதனால் இண்டிகோ பைலட் தட்டுப்பாட்டை எதிர்கொண்டது.
நவம்பர் 2025: அதானி பைலட் பயிற்சியில் நுழைவு. FSTC பைலட் பயிற்சி மையத்தில் 73% பங்கை அவர் வாங்கினார். அதானி டிஃபென்ஸ் & ஏரொஸ்பேஸ், Flight Simulation Technique Centre நிறுவனத்தின் 73% பங்குகளை 820 கோடிக்கு வாங்கியது. இந்திய பைலட்டுகளின் 30% பயிற்சி இங்கு நடக்கிறது.
டிசம்பர் 2025 தொடக்கம்: இண்டிகோ நெருக்கடி வெடித்தது.
டிசம்பர் 1-5: வட இந்திய மூடுபனி, டெல்லியின் காற்று மாசுபாடு அளவு 400 AQI-க்கு மேலும் அதிகரிக்க, அதே சமயத்தில், பைலட்டுகளுக்கான புதிய ஓய்வு விதியை கடைப்பிடிக்க நெருக்குதல் தரப்பட்டதால் இண்டிகோவின் 1,200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் பாதிப்படைந்தனர்.
இதையடுத்து விமானப் போக்குவரத்து அமைச்சர் தேவைப்பட்டால் சி.இ.ஓ.வை பதவி நீக்குவோம் என்றாா். இண்டிகோவுக்கு டி.ஜ.சி.ஏ அபராதம் விதித்தகோடு தற்காலிக சலுகையும் வழங்கியது இதையடுத்து இண்டிகோ சி.இ.ஓ. மன்னிப்பு கோரியதோடு புதிகாக 500 பைலட்டுகளை நியமித்தாா்.
இந்நிலையில் டிசம்பர் 6 முதல் எதிர்க்கட்சிகள், அதானி தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. விமானத் துறையிலும், பைலட்டுகளுக்கான பயிற்சியிலும் அதானி மேலாதிக்கம் செலுத்த அனுமதிக்கப்ட்டாதாகவும், FSTC நிறுவனத்தை வாங்கியதால் புதிய பைலட்டுகளை உருவாக்குவதில் முழுக் கட்டுபாடு அதானிக்குச் செல்கிறது என்றன. ஏற்கெனவே பல்வேறு விமான நிலையப் பராமரிப்புகள், எம்.ஆர்.ஓ. பரிமாரிப்பு அவர் வசம்தான் இருக்கின்றன.
ஆனால் அரசோ இந்த விவகாரத்தில் அதானியை தொடர்புபடுத்த ஆதாரமில்லை என குற்றச்சாட்டை மறுத்தது. இண்டிகோ விவகாரம் குறித்து நாடாளுமன்ற விசாரணை மேற்கொள்ள வேண்டுமென காங்கிரஸ் கோரியது. ஆனால் பா.ஜ.க. இந்த விஷயத்தை திசை திருப்பப் பார்க்கிறது.
விமானபோக்குவரத்து துறையை அதானிக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசு!


