spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜய் சொதப்பல்கள் DECODED! 15 நிமிட பேச்சு! VIBE பத்தல ப்ரோ! தராசு ஷ்யாம் நேர்காணல்!

விஜய் சொதப்பல்கள் DECODED! 15 நிமிட பேச்சு! VIBE பத்தல ப்ரோ! தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் நடிகர் விஜய், கட்சியின் மூன்றாம் ஆண்டு விழாவை பெரிய அளவில் கூட்டத்தை கூட்டி பிரம்மாண்டமான முறையில் நடத்தி இருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தவெக மூன்றாம் ஆண்டு விழாவில் விஜயின் பேச்சு குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- தவெகவின் மூன்றாம் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், அரசியலில் விசில் புளோயர் தவெக என்று சொல்கிறார். சினிமாவில் பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்வது என்பது ஒருங்கிணைந்த திருட்டு ஆக மாறிவிட்டது. பெரிய நட்சத்திரங்கள், திரையரங்க உரிமையாளர்கள், பெரிய முதலாளிகள் எல்லாம் இணைந்து கூட்டாக பிளாக்கில் டிக்கெட் விற்கிறார்கள். அப்போது விஜய் சினிமாவில் தான் விசில்புளோயர் ஆக இருக்க முடியும். அங்கு நடக்கும் தவறுகளை அவர் வெளிப்படுத்த வேண்டும். ஆனால் அரசியலில் விசில்புளோயர் ஆக இருக்க வேண்டும் என்றால் அவர் ஆளும்கட்சியில் இருக்க வேண்டும். எந்த அடிப்படையில் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. இது கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்துவதற்கான பேச்சு ஆகவே பார்க்கிறேன். விஜயிடம் இரண்டு பிளஸ் பாய்ண்ட்ஸ் சொல்லுவேன். முதலாவது அவருடைய தகவல் தொடர்பு திறமை மேம்பட்டிருக்கிறது. ஆரம்ப கால கட்டத்தில் இருந்ததை விட மிக எளிதாக மக்களுக்கு புரியும்படி பேசுகிறார். கூட்டத்தினர் உடன் நன்றாக கனெக்ட் ஆகிறார்.

எம்ஜிஆருக்கு என்ன தெரியும்? என்று பேசிய வாய்கள் தான், இன்றைக்கு விஜய்க்கு என்ன தெரியும்? என்று கேட்பதாக விஜய் சொல்கிறார். பாஜக மற்றும் பலர் என்று அதிமுகவை சுருக்குகிறார். இது திட்டமிட்ட தாக்குதல் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் எதார்த்தத்தில் 1952 முதல் 1970 வரை அவர் திமுகவில் இருந்துள்ளதாக எம்.ஜி.ஆரே கூறியுள்ளார். 1989ல் திமுக, அதிமுகவை இணைக்கும் முயற்சியின்போதே தீய சக்தி, தூய சக்தி என்கிற வாதம் அடிபட்டு போய்விட்டது. ஒரு திரை நட்சத்திரம் கட்சி தொடங்குவதில் யாருக்கும் ஆட்சேபனை கிடையாது. ஆனால் எம்ஜிஆரோடு உங்களை ஒப்பிட வேண்டும் என்றால் முதலில் நீங்கள் இடைத் தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். திமுக தன் மீது வைத்த விமர்சனங்களை திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றி மூலம் எம்ஜிஆர் பதிலடி கொடுத்தார். ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். அதற்கு பிறகு நடந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் அதிமுக போட்டியிட்டு, வெற்றியும் பெற்றது. அப்படி இருந்தால் தவெகவை யாரும் பேச மாட்டார்கள். இவர் முதலில் சட்டமன்றத் தேர்தலை தான் எதிர்கொள்ளப் போகிறார் என்கிறபோது, இத்தகைய விமர்சனங்கள் எல்லாம் வரத்தான் செய்யும். அதை எப்படி பழைய துருப்பிடித்த கத்தியாகும் என்று எனக்கு தெரியவில்லை

திராவிட மாடலின் குரல், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கிறது – முதல்வர் பெருமிதம்…

முதலமைச்சரை தூக்கத்தில் எழுப்பி கேட்டால், தவெகவுக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று சொல்வார். தூக்கத்தில் தான் சிலர் உண்மையை பேசுவார்கள் என்று விஜய் கூறியுள்ளார். திமுகவை விமர்சித்து குரல் ஒன்றையும் சொல்லியுள்ளார். இது தவெக நிர்வாகிகளுக்கு பிடிக்கும். அதை இணையத்தில் டிரெண்டும் செய்ய முடியும். டெக்னாலஜி, டிஜிட்டல் வேர்ல்டு என்று விஜய் சொல்வது, டிரெண்டிங் செய்யுங்கள் என்கிற மறைமுக கட்டளைதான். அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 ஆண்டுகளுக்கு முன்னதாக, தினந்தோறும் காலையில் எழுந்த உடன், நமது கட்சியினர் என்ன செய்தார்களோ, என்கிற பதைபதைப்பு உடன் நான் பார்க்கிறேன் என்று சொன்னார். இன்றைக்கு செல்போன் மூன்றாவது கண்ணாக மாறிவிட்டது. அதை உணர்ந்துகொள்ளுங்கள் என்றும் அறிவுரை வழங்கினார். இரண்டரை வருடங்களுக்கு விசில் சின்னம் இருந்ததா? எந்த ஒரு மாநிலமாக இருந்தாலும் இரு கட்சிகளும் வேண்டாம். புதியவர்களுக்கு வாக்களிக்கலாம் என்று மக்கள் நினைப்பார்கள். கமல்ஹாசனுக்கு அப்படி தான் வாக்குகள் வந்தது. கமல் கட்சியின் தொடக்க நிகழ்ச்சிக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வந்தார். ஆனால் அடுத்தக்கட்டத்திற்கு அவரால் செல்ல முடியாததற்கு காரணம் கட்டமைப்புதான்.

பூத் கமிட்டி இருந்தால் அவர்கள் பயிற்சி எடுத்திருக்க வேண்டும். தவெகவில் பயிற்சி அளிக்கக் கூடியவர்கள் மிகவும் குறைவாக உள்ளனர். புஸ்ஸி ஆனந்துக்கு தமிழ்நாடு தேர்தலில் என்ன அனுபவம் உள்ளது? அவர் புஸ்ஸியில் நின்று வென்றுள்ளார். அதை தாண்டிய அனுபவம் கிடையாது. செங்கோட்டையனை தாண்டி வேறு யாருக்கும் கள அனுபவம் கிடையாது. அரசியல் என்பது இறுதியாக சித்தாந்த அடிப்படையிலானது ஆகும். 5 சதவீதம் வாக்குகள் இருந்தாலும் வெற்றி தோல்வியை அதுதான் நிர்ணயிக்கும். தவெகவை பொருத்தவரை சித்தாந்தம் என்றால் திமுக, அதிமுக, காங்கிரசின் சித்தாந்தங்கள் தான். எம்ஜிஆரின் பெயரை தான் விஜய் சொல்கிறாரே தவிர அவருடைய படத்தை எடுத்துவிட்டார். கூடவே ஜெயலலிதாவின் சித்தாங்களையும் சேர்த்துக்கொள்கிறார். இன்றைய கூட்டத்தில் விஜய் பேசுவதை பார்க்கிறபோது தவெக, காங்கிரஸ் கூட்டணிக்கு போகாது என்று தெரிந்துவிட்டது. என்னை பொருத்தவரை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று நினைக்கிற விஜய், இந்த கூட்டத்தை மக்களை கூட்டி பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடத்தி இருக்க வேண்டும். தனது கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசுவதில் என்ன புதுமை உள்ளது என்று தெரியவில்லை.

விஜய் எதிரிகளை கூட கொள்கை எதிரி, அரசியல் எதிரி என்று பிரிக்கிறார். அரசியல் எதிரி என்றால் எப்போது ஆளுங்கட்சி தான். அப்போது அரசியல் எதிரி மாறிக் கொண்டே இருப்பார்கள். கொள்கை எதிரி மாற மாட்டார்கள். தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைக்கிறோம். அப்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் அமைச்சர்கள் தான் கோட்டையில் அமர்ந்து இருப்பார்கள். அதிமுக கூட்டணியில் பாஜக பங்கு பெற்றாலும் இதே தான். அண்ணா, ராஜாஜி கூட்டணியே சொற்ப நாட்கள் தான் இருந்தனர். தமிழ்நாட்டு அரசியலை பொருத்தவரை இங்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று தேசியக் கட்சிகளுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. நாளை யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தேசிய கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அது தமிழ்நாட்டு அரசியலுக்கு பின்னடைவு ஆகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ