spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜயை சந்தித்த என்டிடிவி குழு! வெளிவராத பகீர் பின்னணி! இதெல்லாம் என்ன அரசியல்? ஆர்.மணி நேர்காணல்!

விஜயை சந்தித்த என்டிடிவி குழு! வெளிவராத பகீர் பின்னணி! இதெல்லாம் என்ன அரசியல்? ஆர்.மணி நேர்காணல்!

-

- Advertisement -

அதானிக்கு சொந்தமான என்டிடிவிக்கு விஜய் முதன் முறையாக பேட்டி அளிக்கிறார் என்றால்? அதில் உள்ள அரசியல் முக்கியத்துவத்தை எல்லோரும் அறிவார்கள் என்று  மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு நடிகர் விஜய் பேட்டி அளித்துள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- என்டிடிவி தொலைக்காட்சிக்கு விஜய் ஆஃப் த ரெக்கார்டு ஆக பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் நான் கிங் மேக்கர் அல்ல. நான் தான் கிங் என்று விஜய் சொல்கிறார். இதன் மூலம் தமிழ்நாட்டில் நான்கு முனைப் போட்டி உறுதியாகி உள்ளது. அதேவேளையில் கேமரா முன்பாக அவரை பேசுவதற்கு எது தடுக்கிறது? அவர் தனக்கு மீடியா வேண்டாம் என்று சொல்கிறார். ஊடகங்களுக்கு இதுவரை பேட்டி அளிக்காத விஜய், ஆங்கில ஊடகத்தை அழைத்து ஆஃப் தி ரெக்கார்டு ஆக பேசுகிறார். அவர்கள் பிரசுரிக்க வேண்டும் என்று தான் பேசியுள்ளார். எந்த அளவுக்கு விஜய் அரசியலுக்கு பொருத்தமானவர் என்கிற கேள்வி தான் தினம் தினம் எழுந்து கொண்டிருக்கிறது. எதிர்வரும் தேர்தலில் விஜய் ஓரளவு வெற்றி பெறுவார் என்று நினைக்கிறோம். புதிய அரசு அமைகிறபோது ஆட்சியாளர்களின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக தெருவில் இறங்கி போராடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அதுதான் அளவுகோல். அதை வைத்து தான் நாம் முடிவு செய்ய வேண்டும்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு விஜய் தொகுதி தொகுதியாக பிரச்சாரத்துக்கு செல்லவில்லை. அதற்கு மாற்றாக  ஒரு மாநாடு மற்றும் மூன்று பொதுக்கூட்டம். அல்லது 5  மண்டலங்களுக்கு பொதுக்கூட்டம் என்று திட்டமிட்டு 10 நாட்களுக்கு ஒரு முறை நடத்திவிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அதீத நம்பிக்கையாகும். இதன் மூலம் அவர் பிரச்சாரத்துக்கு போக மாட்டார். பனையூரில் உட்கார்ந்து கொண்டு வெற்றி பெற்றுவிடலாம் என்று விஜய் பார்க்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், எந்த பிரச்சினை குறித்தும் கருத்து கூறாமல் கடந்து சென்றுவிடலாம் என நினைக்கிறார். திமுகவை அட்டாக் செய்வார். அதிமுக – பாஜகவை தொட்டும் தொடாமல் பேசுவார். மற்ற விஷயங்களை எல்லாம் பேச மாட்டார். தொலைக்காட்சி செய்தியாளரிடம் ஆப் தி ரெக்கார்டில் யார் பேசலாம் என்றால்? ஏற்கனவே பல பேட்டிகளை அளித்தவர்கள் பேசலாம். ஆனால் முதன் முறையாக பேசுகிற விஜய், ஆப் தி ரெக்கார்டில் பேசுவது புத்திசாலித்தனம் கிடையாது. தேசிய ஊடகங்கள், விஜயை பார்த்ததையே பெரிய விஷயமாக புலங்காகிதம் அடைகிறார்கள். விஜயை பேட்டி எடுக்காமல், அவரை சந்தித்து பேசுவது என்பது வெற்றி அல்ல.

ஏஐ மூலம் கேப்டன்.... எங்க வீட்டுப்பிள்ளை விஜய்..... பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி!

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என்று எந்த கூட்டணியிலும் இல்லாத ராமதாஸ், பிரேமலதா, ஓபிஎஸ் போன்றவர்களின் விருப்பமாக விஜய் இல்லை. காரணம் அரசியல் கட்சிகள் எதிர்பார்ப்பது விஜயிடம் கிடைக்காது. விஜய் போன்ற நபர்களால், இவ்வளவு பேருக்கு இடங்களை வழங்கி சரிகட்ட முடியாது. என்டிவி அதானிக்கு சொந்தமான நிறுவனமாகும். அதானியின் நிறுவனத்திற்கு விஜய் முதல் பேட்டியை அளிக்கிறார் என்றால், இதில் அரசியல் ஏதேனும் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியினர் அனைவரும் உழைக்க வேண்டும் என்று சொல்கிறார். விஜய்க்கு அரசியல் என்றால் என்ன? என்று தெரியவில்லை. தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வது, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, பிரச்சாரம் போன்றவை எல்லாம் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளுக்கே தெரியும். விஜய்க்கு எப்போது தெரிய போகிறது என்று தெரியவில்லை. விஜய் களத்திற்கே செல்லாமல் 3  பொதுக்கூட்டங்களில் மட்டும் பேசிவிட்டு சென்றுவிடுவார் என்றால் தவெகவின் வாக்கு வங்கிகள் அடிவாங்கி விடும்.அதானி நிறுவனத்திற்கு விஜய் முதன் முதலில் பேட்டி அளிக்கிறார் என்றால் இதன் பின்னால் இருக்கும் அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜய் 4 தொகுதிகள் வரை போட்டியிடலாம் என்று சொல்கிறார். அது தவறானது. அதிகபட்சமாக 2 தொகுதிகளில் போட்டியிடலாம். 4 தொகுதிகளில் போட்டியிட்டால் வேட்புமனுக்கள் தள்ளுபடியாகும். தேர்தலில் போட்டியிட தடையும் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணியில் இடம் கிடைக்காமல் இருப்பவர்கள் விஜயுடன் செல்வதற்கு வாய்ப்புகள் இல்லை. தவெக தனியாக தான் செல்லும். அவர்களுடன் யாரும் கூட்டணிக்கு செல்ல மாட்டார்கள். திமுக, அதிமுக கூட்டணியிடம் பேச்சுவார்த்தை நடத்துகிற கட்சிகள். ஒரு கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டது போன்று பேசுகிற கட்சிகளுக்கு எதிர்பார்ப்புகள் அதிகம். விஜயால் நிறைவேற்ற முடியாத எதிர்பார்ப்புகள் ஆகும். அவர்களின் எதிர்பார்ப்புகள் திமுக, அதிமுகவிடம் மட்டும் தான் கிடைக்கும். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்கிற விஜயின் திட்டம் பயனளிக்காமல் போய்விட்டது என்பது தான் உண்மை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ