spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜய் சிக்கியது எப்படி? சங்கீதாவின் துப்பறியும் ஏஜென்சி! ஜெகதீஷ்வரன் நேர்காணல்!

விஜய் சிக்கியது எப்படி? சங்கீதாவின் துப்பறியும் ஏஜென்சி! ஜெகதீஷ்வரன் நேர்காணல்!

-

- Advertisement -

விஜய் மீது சங்கீதா தாக்கல் செய்த விவாக ரத்து மனுவில், விஜய் செய்த தவறுகளில் 10 சதவீதத்தை மட்டுமே குறிப்பிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

we-r-hiring

விஜய் – சங்கீதா விவாக ரத்து விவகாரம் தொடர்பாக அரசியல் விமர்சகர் ஜெகதீஷ்வரன் பிரபல யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- விஜய்- சங்கீதா விவாகரத்து விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கலைஞரின் மகன் செல்வி உள்ளதாக தவெக தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. முரசொலி செல்வத்தின் இறப்புக்கு சங்கீதா சென்றபோது, அரசியல் எதிரியாக சொல்லப்பட்ட திமுகவினரின் துக்க நிகழ்வுக்கு மனைவியை விஜய் அனுப்பியுள்ளார். இது அவருடைய அரசியல் மாண்பு என்று பாராட்டினார்கள். தற்போது வரை விஜயும், சங்கீதாவும் ஒரே வீட்டில் தான் வசிக்கிறார்கள். ஆனால் விஜய் கீழ் தளத்திலும், சங்கீதா மேல் தளத்திலும் வசித்து வருகிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வது கிடையாது. பல ஆண்டுகளாக இப்படிதான் வசித்து வருகிறார்கள்.

சங்கீதா மிக மிக நாகரிகமாக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவர் ஒரு துப்பறியும் நிறுவனத்தை வைத்து பல ஆதாரங்களை சேகரித்துள்ளார். இந்த வழக்கை தாக்கல் செய்வதற்கான காரணம் தேர்தலுக்கு பிறகு விஜய் என்ன செய்வார் என்று தெரியாது? அதனால் இங்கிலாந்தில் குடியேறும் முடிவுக்கு சங்கீதா வந்துவிட்டார். எனவே தனக்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று கேட்டார். அதை வழங்க மறுத்த விஜய், நீதிமன்றத்தில் சென்று பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டார்.

தவெக தலைவர் விஜய்யின் மனைவி விவாகரத்துக் கோரி மனுத் தாக்கல்!!

விஜய் – சங்கீதா பிரச்சினை தொடர்பாக நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதலில் குடும்பத்தினர் பேசினார்கள். அதிலும் முடியாததால் தான் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். செல்வி குடும்பத்திற்கும், சங்கீதாவுக்கும் முன்பு இருந்தே தொடர்பு உள்ளது. வெளிநாட்டில் படிக்கும் விஜயின் மகளுக்குதான் குடும்பத்தில் எல்லோருடனும் தொடர்பு உள்ளது. அவர்களே சில நேரங்களில் நீலாங்கரை வீட்டிற்கு செல்லாமல் செல்வியின் வீட்டில் சென்றுதான் தங்குவார். இந்த விவகாரத்தில் திமுகவின் பங்கு உள்ளதாக தவெக தரப்பில் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் திமுக செய்வதாக இருந்தால் எப்போதோ செய்திருக்கும். ஆனால் இந்த தேர்தலில் விஜயை ஸ்டாலின் ஒரு எதிரியாக பார்க்கவில்லை. அவர் திமுக எதிர்ப்பு வாக்குகளை தான் பிரிக்கிறார். திமுக தரப்பில் இந்த நேரத்தில் ஏன் விஜய் இப்படி செய்கிறார் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இவை தவிர்த்து த்ரிஷா விவகாரத்தை உடைத்த நயினார் நாகேந்திரன் தான், வேறு நபர் மூலமாக சங்கீதாவை தூண்டி விடுகிறார் என்று சதிக் கோட்பாட்டை சொல்கிறார்கள். முன்பு சிபிஐ மூலம் விஜயை கூட்டணிக்கு கொண்டுவர முயற்சித்தார்கள். ஆனால் தற்போது அவரை பொருட்படுத்தவே இல்லை. கடந்த கூட்டத்தில் பாஜகவின் ஆதரவாளராகவே மாறி பேசினார். மூன்றாவது நாம் தமிழர் கட்சி இந்த விவகாரத்தில் சதி செய்வதாக சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளதால் அவர்கள் வர மாட்டார்கள். கரூர் சிபிஐ விசாரணை குறித்தும், ஜனநாயகன் படப் பிரச்சினை குறித்தும் தவெக ஆதரவாளர்கள், சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்தபோது சமூக வலைதளங்களில் சிபிஐ விசாரணை, ஜனநாயகன் பட விவகாரம் என்று எடுத்தவர்கள் கடைசியாக வீட்டிற்குள்ளே வந்து விட்டனர் என்று எழுதுகிறார்கள். மேலும் சங்கீதாவை கடுமையாக விமர்சித்து பேசினார்.

தமிழ்நாட்டிற்கு பொக்கிஷம் கிடைக்க சிறப்பு பூஜை.... எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி!

எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளர்களாக இருந்த ஜெயசீலன் உள்ளிட்ட குழுவினர், விஜய்க்கு ரசிகர் மன்றம் வைத்து நடத்தி வந்தனர். அவர்கள் விஜய் தவறு செய்கிற போது அவருக்கு அறிவுரை கூறி ஒழுங்குபடுத்தினார்கள். பின்னர் ரசிகர் மன்றத்தில் இணைந்த புஸ்ஸி ஆனந்த், விஜய் தவறு செய்வதற்கான அனைத்து வேலைகளையும் செய்து கொடுத்தார். இதனால் அந்த குழுவினரை எல்லாம் வெளியேற்றினார்கள். அதன் உச்சபட்சமாக தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரையும் காலி செய்தார்கள். தற்போது புஸ்ஸி ஆனந்தின் இடத்திற்கு மாற்றாக விஜயின் அந்தரங்க விஷயங்களை கவனிக்கும் இடத்திற்கு ஜெகதீஷ் வந்தார்.

விஜய்க்கு வேறு நடிகையுடன் பிரச்சினை ஏற்பட்டபோதும், ஜெகதீஷ்தான் அதை கையாண்டார். இந்த விஷயங்களை எல்லாம் என்னிடம் சொன்னது ஜான் ஆரோக்கியசாமி தான். செங்கோட்டையனை கட்சிக்குள் எடுக்கக்கூடாது என்று ஜான் முடிவு செய்தார். ஆதவ் அர்ஜுனா மிகவும் சிரமப்பட்டு தான் அவரை கட்சிக்குள் கொண்டுவந்தார். ஆனால் செங்கோட்டையனால் வேறு யாரையும் ஏன் கட்சிக்குள் கொண்டுவர முடியவில்லை? அவர் தயவு செய்து யாரையும் கட்சிக்குள் வர வேண்டாம் என்றும் சொல்கிறார்.

விஜய், அடுத்த கூட்டங்களில் திமுகவின் மீது குற்றச்சாட்டை முன்வைப்பார். எல்லாவற்றையும் அரசியல் லாபத்திற்கு பயன்படுத்த பார்க்கிறார்கள். மேலும், விவாக ரத்து வழக்கு ஆவணங்கள் ஆன்லைனில் வெளியானதிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தற்போது வழக்கு ஆன்லைனில் நடைபெறுகிறபோது யார் வேண்டுமானாலும் ஆவணங்களை பார்க்க முடியும். எனவே இதில் சதி என்று சொல்வது ஏற்படையது கிடையாது. விஜய் மட்டுமின்றி, அந்த கட்சிக்கு சென்ற யாராக இருந்தாலும் மனித நேயமே இருக்கக்கூடாது. விஜய் வெளியில் போடுவது எல்லாமே வெளி வேஷம். விஜயின் அப்பா – அம்மா வீடு கிரகப் பிரவேசம் செய்தார்கள். விஜய் போகவில்லை. அவர்களுடைய 60ஆம் கல்யாணத்திற்கு கூட விஜய் போகவில்லை.

தன்னுடைய பையன் ஜேசன், படம் எடுக்க விரும்பினால் குறைந்த அளவு பணம் கொடுத்து எடுக்க சொல்லலாம். அல்லது வேறு ஒரு இயக்குநரிடம் உதவியாளராக சேர்த்துவிடலாம். ஆனால் ஜேசன் லைகா புரொடக்ஷனில் படம் எடுக்கிறார் என்பதற்காக வீட்டை விட்டு வெளியே போக சொல்லிவிட்டார். திமுக, அதிமுகவுக்கு தவெக மாற்று கட்சி என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்களை விட பல மடங்கு மோசமான கட்சி தவெக என்பது நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்ததாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ