Homeசெய்திகள்கட்டுரை"செ.பாலாஜியை சிறைக்கு அனுப்பாமல் விட மாட்டோம்!" – தமிழக வெற்றிக் கழக மாநில செய்தி தொடர்பாளர்...

“செ.பாலாஜியை சிறைக்கு அனுப்பாமல் விட மாட்டோம்!” – தமிழக வெற்றிக் கழக மாநில செய்தி தொடர்பாளர் முகில் அதிரடி பேட்டி!

-

- Advertisement -

‘சேனல் 5 தமிழ்’ யூடியூப் ஊடகத்தின் நேர்காணலில் பங்கேற்றுப் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செய்தி தொடர்பாளர் முகில், தமிழக அரசியல் சூழல், திமுக தலைவர்களின் ஊழல்கள் மற்றும் தவெகவின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துப் பல்வேறு அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

முகில்

we-r-hiring

செந்தில் பாலாஜி மற்றும் திமுக தலைவர்கள் மீது குற்றச்சாட்டு

நேர்காணலில் பேசிய முகில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைக் கடுமையாகச் சாடினார். செந்தில் பாலாஜிக்கு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெறவும், பல வழக்கறிஞர்களை வைத்து வாதாடவும் எப்படி இவ்வளவு பணம் வந்தது என்று கேள்வி எழுப்பினார். டாஸ்மாக் பாட்டில்களுக்குக் கூடுதல் பணம் வசூலிப்பது, உயர்ரக மதுபான விற்பனையில் முறைகேடு போன்ற பல்வேறு வழிகளில் பல நூறு கோடிகள் ஊழல் நடந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

சுற்றுச்சூழல் துறை மற்றும் பிற துறைகளில் வசூல் வேட்டை

கரூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான சாயப்பட்டறைகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அனுமதியைச் சுட்டிக்காட்டி மாதந்தோறும் பல கோடிகள் வசூலிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும், உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிற அமைச்சர்கள் மீதும் அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவரும் என்றும், வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் எந்தெந்தத் துறையில் எவ்வளவு ஊழல் நடந்துள்ளது என்பதை நிதித்துறை அமைச்சர் மூலம் அம்பலப்படுத்துவோம் என்றும் அவர் எச்சரித்தார்.

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களுக்குப் பதில்

தவெக தலைவர் விஜய்யின் குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து திமுகவினர் பரப்பி வரும் கேளி பேச்சுக்களுக்கு பதிலளித்த அவர், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அண்மையில் அளித்த பேட்டியில் தன் தந்தையைப் பெருமையுடன் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார். தலைவர் விஜய்யின் பொது வாழ்க்கையும், தனிப்பட்ட வாழ்க்கையும் எவ்விதக் களங்கமும் இல்லாதது என்றும், இதுபோன்ற அவதூறுகளுக்கு மக்கள் தகுந்த பதிலளிப்பார்கள் என்றும் அவர் கூறி உரையை முடித்தார்.

MUST READ