spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅடித்தட்டு மக்களின் ஆதரவாளர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் - என்.கே.மூர்த்தி

அடித்தட்டு மக்களின் ஆதரவாளர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் – என்.கே.மூர்த்தி

-

- Advertisement -

“யார் நீ என்பது வெறும் அறிமுகம்;
யாருக்காக வாழ்கிறாய் என்பதே உந்தன் அடையாளம்!
பிறருக்காகத் துடிக்கும் உன் இதயத்திலிருந்தே – உன்
வரலாற்றுப் பயணம் தொடங்குகிறது!”

1953 மார்ச் 1 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பிறந்தார். அதே ஆண்டு மார்ச் 5 ஆம் தேதி சோவியத் ரஷ்யாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். உலகநாடுகள் அனைத்தும் ரஷ்யாவை திரும்பி பார்க்க வைத்த அந்த மாபெரும் தலைவரின் பெயரை கலைஞர் கருணாநிதி தனது மகனுக்கு சூட்டி மகிழ்ந்தார்.

நீங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு சோவியத் ரஷ்யாவின் சிற்பி ஜோசப் ஸ்டாலினைப் பற்றி ஓரளவிற்காவது தெரிந்துக் கொள்ள வேண்டும்.

we-r-hiring

1917 இல் சோவியத் ரஷ்யா உலகில் முதல் சோசலிச நாடாகக் உருவானது. அந்த நாட்டின் முதல் அதிபராக இருந்த புரட்சியாளர் லெனின் 1924 இல் மறைந்து விடுகிறார். அதன்பின்னர் ஜோசப் ஸ்டாலின் என்கிற மாவீரன் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், உலகின் முதல் சோசலிச அரசுக்கும் தலைமை ஏற்கிறார்.

ஜோசப் ஸ்டாலின் பொறுப்புக்கு வந்தவுடன் சோவியத் ரஷ்யாவில் ஐந்தாண்டு திட்டங்களை அறிமுகம் செய்தார். ரஷ்யாவில் புதிய சிந்தனைகளும், புதிய புதிய தொழில்நுட்பங்களும் உருவானது. மரத் தொழில் காலத்தில் இருந்து மிக வேகமாக இரும்பு, எஃகு, கான்க்ரீட் மற்றும் பீரங்கி காலத்தை நோக்கி மாறியது.

ஜோசப் ஸ்டாலின் தலைமையில் ரஷ்யா அடைந்த மாற்றங்கள் குறித்து அவரே பட்டியலிடுகிறார்.

நாட்டின் தொழில் மையத்துக்கு அடிப்படையான இரும்பு, எஃகு தொழிற்சாலை ஒன்று கூட முன்பு இல்லை. இப்போது நான்கு தொழிற்சாலை உள்ளது.

விவசாயத்திற்கு தேவையான டிராக்டர் தொழிற்சாலையை உருவாக்கி இருக்கிறோம். எந்திர தயாரிப்பு தொழிற்சாலையை கட்டமைத்து இருக்கிறோம். நவீன வேதியல் தொழிற்சாலை, மின்சார உற்பத்தி தொழிற்சாலை என்று அனைத்து விதமான வளர்ச்சிக்கும் ஜோசப் ஸ்டாலின் அடித்தளம் அமைத்தார்.

சோவியத் ரஷ்யாவின் வளர்ச்சியை கண்டு உலகமே வியந்தது. உலகத்தில் பல்வேறு தலைவர்கள் ரஷ்யாவிற்கு சென்று பார்வையிட்டு, தங்கள் நாடுகளிலும் அதுபோன்ற கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று கனவு கண்டார்கள்.

உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த 1929- 1934 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் ரஷ்யாவின் தானிய உற்பத்தி என்கிற பிரமாண்ட சாதனையை
ஜவகர்லால் நேரு, தந்தை பெரியார், சிங்கார வேலர் போன்ற தலைவர்கள் ரஷ்யாவின் வளர்ச்சியை நேரில் பார்த்து பாராட்டினார்கள்.

ஸ்டாலின் என்றால் இரும்பு என்று புரட்சியாளர் லெனின் அழைத்தார். அந்த வரலாற்று நாயகனின் பெயரை கொண்டவர்தான் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது 1976 இல் கொண்டுவரப்பட்ட நெருக்கடி கால சட்டத்தில் கைதாகி, கொடுமையான சிறை தண்டனை அனுபவித்து தியாக தழும்புகளோடு அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தவர் மு.க.ஸ்டாலின். அதற்கடுத்து 2018 இல் கலைஞர் கருணாநிதி மறைந்தபோது நெருக்கடியான நேரத்தில் திமுகவின் தலைவரானார்.

அவரை தலைவராக ஏற்றுக் கொண்டதால் திமுகவை சேர்ந்த ஒவ்வொரு தொண்டனும் பெருமை அடைந்து வருகிறான். அவரை முதலமைச்சர் நாற்காலியில் அமரவைத்ததால் தமிழ்நாடு தாய்மார்கள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். மு.க.ஸ்டாலின் பதவிக்கு வந்த குறுகிய காலத்தில் தமிழ்நாட்டையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தலைநிமிர்ந்து நிற்க வைத்துவிட்டார்.

ஆயிரம் இருந்தாலும் கலைஞரைப்போல் வர முடியாது என்றும் அவரைப்போல் பேசத் தெரியாது, எழுதத் தெரியாது என்று ஏளனமாக பார்த்தார்கள். அதைப்பற்றி அவர் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. தீய சிந்தனையாளர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காமல் அவர் தனது பயணத்தை தொடர்ந்தார். நான் அவரைப்போல் அல்ல, இவரைப்போல் அல்ல, ” நான், நான்தான், நான் மட்டும் தான்” என்று உலகுக்கு உணர்த்தினார்.

திமுகவின் தலைமை பதவிக்கு வந்த உடனே, வடக்கிலிருந்து வரும் ஆபத்தை தடுக்க துணிந்தார். மோடியை எதிர்த்து ஜனநாயக முறையில் போர் பிரகடனம் செய்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றிப் பெற்று இந்தியாவில் திமுக மூன்றாவது பெரிய கட்சி என்கிற கம்பீரத்தை கட்டமைத்தார். இந்தியாவில் எங்களை எதிர்க்க எதிரிகளே இல்லை என்கிற ஆணவ சிறுக்குடன் ஆட்டம் போட்ட மோடி கூட்டத்திற்கு எதிராக “இந்தியா” கூட்டணியை உருவாக்கி பாஜக தலைமைக்கு அச்சத்தை ஏற்படுத்தினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40/40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, மோடி தலைமையில் மைனாரிட்டி அரசு அமைக்க காரணமாக இருந்தார். இதை வெறும் தேர்தல் வெற்றியாகவோ, அரசியலாகவோ சுருக்கி பார்க்க கூடாது.

தமிழ்நாட்டில் தன் தலைமையில் அமைந்த அரசுக்கு “திராவிட மாடல் அரசு” என்று பெயரை சூட்டி, அந்த அரசு முன்னெடுக்கும் சமூகநீதி பார்வையை, செயலை உலக கல்வியாளர்கள் எல்லோரும் பாராட்டுகிறார்கள்.

வடக்கில் இருந்து வரும் “இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழ் மொழியை பாதுகாப்பது”, மாநில சுயாட்சி கொள்கையை முன்னெடுத்து செல்வது, சமூகநீதி கண்ணோட்டத்துடன் மக்களுக்கு தொண்டு செய்வது போன்ற முன்மாதிரிகள் இந்தியாவில் மற்ற மாநிலங்களும் பின்பற்ற தொடங்கி இருக்கிறது.

ஆர்எஸ்எஸ், பாஜகவை எதிர்ப்பது, தேர்தலில் வீழ்த்துவது என்பது வெறும் தேர்தல் காலத்தில் எழுப்புகின்ற கோஷங்களாக இருந்துவிடக் கூடாது. கொள்கை பூர்வமாக இருக்க வேண்டும் என்பதை மற்ற மாநில தலைவர்களுக்கு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் உணர்த்திக்கொண்டே இருக்கிறார்.

அவர் யார் என்பதை பெருமையாக பிரகடனம் செய்துகொண்டதே இல்லை. அவர் எப்போதும் சமூகத்தில் பின்தங்கி இருக்கும் மக்களுக்கு கல்வியை கொடுத்து, வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுத்து, அதன் மூலம் பொருளாதாரத்தில் மேலே உயர்த்துவதற்கு அயராமல் உழைக்கிறார். உயர்ந்து நிற்கிறார்.

மீண்டும் திமுக.. ஸ்டாலின் லக்கி! அறிவாலயத்தில் நடந்த டீலிங்! ஆர்.மணி நேர்காணல்!

MUST READ