spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஸ்டாலினின் 19 கட்சி கூட்டணி! 22+1 டெல்லிக்கு 3 நாள் கெடு! திமுக கிட்ட காங்கிரஸ்...

ஸ்டாலினின் 19 கட்சி கூட்டணி! 22+1 டெல்லிக்கு 3 நாள் கெடு! திமுக கிட்ட காங்கிரஸ் சரண்டர்! புன்னை வளவன் நேர்காணல்!

-

- Advertisement -

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 22 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா இடங்கள் வழங்குவதாக கூறப்பட்டுள்ளதாகவும், இதை ஏற்பது குறித்து நாளைக்குள் காங்கிரஸ் முடிவு செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் ஊடகவியலாளர் புன்னை வளவன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது பேசப்பட்ட  விவகாரங்கள் குறித்து ஊடகவியலாளர் புன்னை வளவன் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் கூறியிருப்பதாவது:- நீண்ட இழுபறிக்கு பின்னர் காங்கிரஸ் – திமுக முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளன. செல்வப்பெருந்தகை ஒரு ராஜ்யசபா இடத்தை தங்களுக்கு தருவதாக ஏற்கனவே முதலமைச்சர் சொல்லி விட்டதாக, ஏறத்தாழ உள்ளே பேசியதில் ஒரு விஷயத்தை மட்டும் கசிய விட்டார். ஆனால் சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக எவ்வளவு இடங்கள் கொடுப்பதாக சொன்னது என்பதை சொல்லாமல் தவிர்த்தார். அப்போது உள்ளே என்ன நடைபெற்றது? என்கிற கேள்வி எழுகிறது. காங்கிரஸ் அமைத்துள்ள கிரிஷ் ஜோடாங்கர் தலைமையிலான குழு, டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவை சந்தித்தனர். தொடக்கத்திலேயே திமுக தரப்பில் முன்கூட்டியே நாங்கள் தகவல் தெரிவித்துவிட்டோம், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர மாட்டோம். நாங்கள் தோற்ற தொகுதிகளை நீங்கள் கேட்பதற்கு வழியில்லை. உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு சங்க தேர்தலில் ஒதுக்கீடு கிடையாது. நீங்கள் எண்ணிக்கையை தொடங்கலாம் என்று சொல்லப்பட்டது.

காங்கிரஸ் தரப்பில் 41 அல்லது 40 இடங்களில் இருந்து 35 இடங்களில் இருந்து தொடங்கினார்கள். தற்போது உள்ள 25 இடங்களையே கொடுக்கிற சூழல் எங்களிடம் இல்லை. நாங்கள் 19 கட்சிகள் கூட்டணியோடு நின்று கொண்டிருக்கிறோம் என்கிற அதிர்ச்சியை திமுக தரப்பு கொடுத்திருக்கிறது. 35 இடங்கள் என்கிறபோது 30 என்கிற அளவுக்காவது வர வேண்டும் அல்லவா? என கேட்கப்படுகிறது. கடைசியாக 4 இடங்கள் அதிகரித்து, திமுக தரப்பில் 29 இடங்கள் மற்றும் 2 ராஜ்யசபா இடங்கள் தருவதாக சொல்லப்பட்டிருக்கிறது. செய்தித்தாள்களில் திமுக தரப்பில் 3 இடங்கள் குறைத்து 22 இடங்கள் தான் தர முடியும் என்றும், கூடுதலாக ஒரு ராஜ்யசபா இடம் வேண்டுமெனில் தருவதாகவும், மார்ச் 3க்குள் காங்கிரஸ் முடிவை அறிவிக்குமாறு கூறப்பட்டிருக்கிறது. இதனை ஏற்றுக்கொண்டு வந்தால் மேற்கு தொகுதிகளை அடையாளம் காண்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வருவதா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டது செய்தியாக வெளியிடப்பட்டிருக்கிறது.

டி.ஆர்.பாலு தரப்பில் காங்கிரசின் அனைத்து நிபந்தனைகளையும் கொண்டு போக முடியாது. ஏற்கனவே 19 கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளோம். இது தவிர்த்து கிருஷ்ணசாமியோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். இவ்வளவு பேரை உள்ளே கொண்டுவரும்போது அவர்களுக்கு இடங்களை ஒதுக்குவது சிரமம். எனவே 22 இடங்களை ஏற்றுக்கொண்டு தொடர்வது உங்களது முடிவு. அல்லது நண்பர்களாக பிரிவோம் என்றாலும் பார்த்துக்கொள்ளலாம் என்கிற விதமாக திமுக தரப்பில் நகர்த்தியுள்ளனர். இதனால் தான் செல்வப்பெருந்தகை ஒரு ராஜ்யசபா வழங்குவதாக தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 9 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அதில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். ஐ.யு.எம்.எல் கட்சிக்கு 2 இடங்கள், ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். தற்போது 4 தொகுதிகள் தான் கட்சிகளுக்கான எண்ணிக்கையாக முடிவாகியுள்ளது. காங்கிரஸ் 22 தொகுதிகளை எடுப்பார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், கிரிஷ் ஜோடாங்கர் தரப்பில், ஆட்சியில் பங்கு குறித்து திமுக தரப்பிடம் பேசப்பட்டதா? என்கிற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.மேலும் விஜயுடன் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தினீர்களா? என்கிற கேள்விக்கும் அவர் பதில் அளிக்காமல் புறந்தள்ளியுள்ளார். அதற்கு அர்த்தம் என்ன என்றால் விஜயுடன் பேச்சுவார்த்தை நடத்துவது நான் முடிவு செய்வது இல்லை என்பது ஒன்று, அல்லது அதில் அழுத்தம் இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டாம் என்று டெல்லியில் இருந்து வந்த தகவல் ஆக இருக்கலாம். மார்ச் 3ஆம் தேதிக்கு பிறகு காங்கிரஸ் திமுக கூட்டணியில் தொடர்வதாக உறுதி செய்தால், மார்ச் 10ல் திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களை மேடை ஏற்றுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 9க்கு முன்னதாக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை முடித்துவிட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. மார்ச் 5ஆம் தேதி ராகுல்காந்தி தமிழ்நாடு வருவதாக இருந்த நிலையில், தற்போது தள்ளிப் போய் உள்ளது. கூட்டணி முறிவை அறிவிக்கும் அளவுக்கு அதிகாரம் கிரிஷ் ஜோடாங்கருக்கோ, செல்வப்பெருந்தகைக்கோ கிடையாது. உண்மையான அதிகாரம் என்பது டெல்லி தலைமைக்கு தான் உள்ளது. மார்ச் 4, 5ஆம் தேதிகளில் அது தெரிந்துவிடும்.

இந்த சூழலில் தவெக தரப்பில், திரைமறைவில் சில வளரும் கட்சிகள், குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விஜய், சிறிய கட்சிகளுடன் பேசுவதை வெளியே சொல்லாமல் இருக்க காரணம் காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால், பெரிய கட்சி கூட்டணிக்கு வந்துவிட்டதாக வெளியே சொல்லிக்கொள்ளலாம் என்று காத்திருக்கிறார்கள். அவர்கள் இழவு காத்த கிளியா? அல்லது காங்கிரஸ் வேறு முடிவை எடுக்கப் போகிறதா? அப்படி போனால் திமுக என்ன முடிவு எடுக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அடுத்த 5 நாட்களுக்குள் முடிவுகள் தெரிந்துவிடும். அதிமுக கூட்டணியில் பிரதமர் வருகையை ஒட்டி கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அதிமுக தரப்பில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். அதேபோல், சிறிய கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவந்து, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டியது அவருக்கு உள்ள சவால் ஆகும். 2024 மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, எஸ்டிபிஐ, கிருஷ்ணசாமி போன்றவர்கள் வெளியே போய்விட்டனர். என்டிஏ தரப்பில் ஓபிஎஸ் மட்டும் வெளியே போய்விட்டார். கூட்டணி பேச்சுவார்த்தையின்போது இந்த விவகாரங்களை பாஜக எழுப்ப வாய்ப்பு உள்ளது. அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தைக்குழு அமைக்கப்படுகிற போதும், எடப்பாடி பழனிசாமியே சில விஷயங்களை கறார் ஆக பேசி முடித்துவிடுவார். அதனால் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை சுவராஸ்யம் மிகுந்ததாக  இருக்கப் போகிறது.

MUST READ