Homeசெய்திகள்கட்டுரை"கரூர் சம்பவத்தில் தவெக-வை அம்பலப்படுத்தியவர் செந்தில் பாலாஜி!" – அய்யநாதன் பரபரப்பு பேட்டி!

“கரூர் சம்பவத்தில் தவெக-வை அம்பலப்படுத்தியவர் செந்தில் பாலாஜி!” – அய்யநாதன் பரபரப்பு பேட்டி!

-

- Advertisement -

“கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்குப் பிறகு அனைத்து உண்மைகளையும் உடைத்து தவெக தரப்பை அம்பலப்படுத்தியவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிதான். இதன் காரணமாகவே முதலமைச்சர் விஜய் தரப்பிற்கு அவர் மீது தனிப்பட்ட கோபம் இருக்கிறது” என்று மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான அய்யநாதன் தெரிவித்துள்ளார்.

அய்யநாதன்

we-r-hiring

‘அறம்நாடு’ (aramnaadu) இணைய ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கரூர் சம்பவத்தின் பின்னணி, சிபிஐ விசாரணை மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய்யின் தற்போதைய அரசியல் அணுகுமுறை குறித்துப் பல்வேறு அதிரடி விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

​”ஷூட்டிங் நடத்தவே டிஎஸ்பி பேச்சைக் கேட்கவில்லை”

​கரூர் சம்பவத்தன்று அங்கு நடந்தது குறித்துப் பேசிய அய்யநாதன்: “அன்றைய தினம் கரூரில் மக்கள் நெரிசல் அதிகமாகிவிட்டது என்றும், வாகனத்தை உள்ளே கொண்டு சென்றால் அசம்பாவிதம் நடக்கும் என்றும் அங்கிருந்த டிஎஸ்பி தவெக தரப்பிடம் எச்சரித்துள்ளார். ஆனால், முன்கூட்டியே திட்டமிட்டபடி கேமராக்களை அமைத்து ‘ஷூட்டிங்’ நடத்துவதற்காக, காவல்துறையின் எச்சரிக்கையையும் மீறி மாலை 7:10 மணிக்கு பஸ்ஸை அங்கே கொண்டு போய் நிறுத்தியுள்ளனர். 7:10 வரை அங்கு யாரும் உயிரிழக்கவில்லை.

7:11-க்கு பேசத் தொடங்கி 7:37-க்கு விஜய் கிளம்புவதற்குள், இருபுறமும் மக்கள் தள்ளப்பட்டு நெரிசலில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்குப் பஸ்ஸை அங்கே கொண்டு நிறுத்தியதுதான் காரணம் என்று அன்றே பத்திரிகைகள் எழுதின. ஆனால், இன்று முதலமைச்சராக இருக்கும் விஜய், ‘போலீசார் தவறாக வழிகாட்டிவிட்டனர்’ என மாற்றிப் பேசுகிறார்.”

​செந்தில் பாலாஜி மீது கோபம் ஏன்?

​”இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியை சிபிஐ மிகவும் குறுகிய நேரமே விசாரித்தது. அவர் விசாரணை முடிந்து வந்த பிறகுதான், கரூர் சம்பவ இடத்திற்கு வெளியிலிருந்து ஆட்களைக் கூட்டிவந்து ஷூட்டிங் கேமராக்கள் அமைக்கப்பட்ட விவரங்கள் ஊடகங்களில் வெளியாகி தவெக-வை அம்பலப்படுத்தின. ‘நம்மை மாட்டிவிட்டவர் செந்தில் பாலாஜி’ என்ற கோபத்தில்தான் தவெகவினர் பேசுகின்றனர். இதேபோல், ‘உதயநிதி ஸ்டாலினின் அரசியலுக்காக முந்தைய திமுக அரசு காவல்துறையை ஏவி எங்கள் மக்களைக் கொன்றுவிட்டது’ என்று ஆதவ் அர்ஜுனாவும் பழி முழுவதையும் போலீஸ் மீது போடுகிறார்.

விக்ரவாண்டி மாநாட்டில் அசம்பாவிதம் நடக்காமல் தடுத்தது அன்றைய ஸ்டாலின் அரசின் 8,000 போலீசார்தான் என்பதை இவர்கள் மறக்கக் கூடாது. திருச்சி சந்திப்பில் அனுமதியின்றி ரோட் ஷோ நடத்தியபோதே அன்றைய முதல்வர் ஸ்டாலின் ஜனநாயக முறையில் அணுகி விசாரணை ஆணையத்திற்கு உத்தரவிட்டார். ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் தடை உத்தரவே போட்டிருப்பார்” என்றும் அய்யநாதன் சுட்டிக்காட்டினார்.

​விஜய்யைக் காப்பாற்றப் பார்க்கிறதா சிபிஐ?

​சிபிஐ விசாரணையின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய அவர்: “இந்த வழக்கில் சிபிஐ ஏன் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை? ஏனெனில், ‘போலீஸின் அட்வைஸை விஜய் தரப்பு கேட்கவில்லை, அலட்சியப்படுத்தியது’ என்றுதான் அதில் உள்ளது. இப்போது விஜய்யைக் காப்பாற்றுவதற்காக, ‘கூட்டமும் அதிகம், போலீஸ் பாதுகாப்பும் குறைவு’ என அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, வழக்கை நீர்த்துப்போகச் செய்யப் பார்க்கிறார்கள். சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததற்கும், தற்போது விஜய் பேசுவதற்கும் நேரடித் தொடர்பு உள்ளது.”

​”வெறுப்பு அரசியல் செய்யாதீர்கள்”

​”தற்போது கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற இடத்தையும் இடைத்தேர்தல் பிரச்சாரமாக மாற்றிவிட்டு வந்துவிட்டார் விஜய். அரசுப் பணி வழங்கியதிலும் அங்கு கடுமையான எதிர்ப்புகள் வருகின்றன. விஜய் வெறும் தவெக தலைவராக மட்டும் செயல்படாமல், முதலமைச்சராகப் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். எதற்கெடுத்தாலும் திமுக மீது பழியைப் போட்டு வெறுப்பு அரசியல் செய்வதைத் தவிர்க்க வேண்டும்” என்று அய்யநாதன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ