spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜய்க்கு கொம்பா? வெளியே வர மாட்டாரா? என்டிடிவிக்கு அவமானம்! ஷாநவாஸ் நேர்காணல்!

விஜய்க்கு கொம்பா? வெளியே வர மாட்டாரா? என்டிடிவிக்கு அவமானம்! ஷாநவாஸ் நேர்காணல்!

-

- Advertisement -

விஜய் மீது உண்மையான அக்கறை இருந்தால், அவர் அரசியலில் வளர வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர் செய்கிற தவறுகளை ஊடகங்கள் சுட்டிக்காட்ட வேண்டும் என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

என்டிடிவிக்கு விஜய் பேட்டி அளித்துள்ளது குறித்து விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- விஜய்க்கு 30 சதவீதம் வாக்குகள் வரும் என்று செங்கோட்டையன் சொல்கிறார். எவ்வளவு வாக்கு சதவீதம் என்பது அவர் தேர்தலில் போட்டியிட்டால் தான் தெரியும். மற்ற கட்சிகள் எல்லாம் தேர்தலில் போட்டியிட்டு வாக்குகளை வாங்கினார்கள். திமுக கூட்டணி 40 சதவீதம், நாதக என்பது 8 சதவீதம் என்பது போட்டியிட்டு வாங்கியது. ஆனால் விஜய்க்கு இவ்வளவு வாக்குகள் வரும் என்பது ஒரு கருத்துருவாக்கம் தானே தவிர அது உண்மை கிடையாது.

என்டிவியின் தமிழ்நாடு கான்கிளேவை முன்னிட்டு, என்டிடிவி செய்தியாளர்கள் விஜயை அவருடைய வீட்டில் சென்று சந்தித்துள்ளனர். இப்படியான பேட்டி உலகில் எங்குமே எடுத்தது கிடையாது. நேர்காணல் என்பது ஒருவர் பேசியது தானே தவிர, அவர் அப்படி பேசினார் என்று சொல்வது கிடையாது. அது விஜயின் நேர்காணல் கிடையாது. என்டிடிவியின் நேர்காணல் தான். என்டிடிவி நிறுவனம் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என்று எல்லோரையும் வரவழைத்துவிட்டனர். ஆனால் விஜய் அவர் இடத்திற்கு செய்தியாளர்களை வரவழைத்து பேசிவார். அவர் என்ன பேசினார் என்றாவது சொல்லுங்கள்.

விஜய் குறித்து செய்தி போட்டால் ஊடகங்களுக்கு அதிக பார்வைகள் கிடைக்கிறது. அதனால் ஊடகங்கள் அவர் பின்னாலேயே ஓடுகின்றன. என்டிடிவி போய்விட்டு என்ன செய்திருக்க வேண்டும். எல்லா தலைவர்களும் வந்திருக்கிறார்கள். விஜய்க்கு என்ன கொம்பு முளைத்திருக்கிறதா? இப்படி தான் ஊடங்களை நடத்துவாரா? தேர்தல் நேரத்தில் சுற்று பயணங்களில் இருக்கும் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் வந்திருக்கிறார்கள். நிரூபிக்கப்பட்ட கட்சிகளை விட விஜய்க்கு தான் அந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டிய தேவை உள்ளது. நாம் தமிழர், விசிக போன்ற வளரும் கட்சிகள் அப்படிதான் உள்ளது.

ஆனால் இந்த மாநாட்டில் பங்கேற்பதில் தவெகவுக்கு என்ன பிரச்சினை உள்ளது? விஜய் போராடும் மக்களை  அப்படித்தான் நடத்துகிறார். அவருடைய கூட்டத்திற்கு வந்து இறந்தவர்களின் குடும்பங்களையும் அப்படிதான் நடத்துகிறார்கள். கரூரில் பலியானவர்களின் குடும்பங்கள் எப்படி பட்ட மனக்காயங்களில் இருந்தாலும், எவ்வளவு வேதனையில் இருந்தாலும் அவர்களை அங்கிருந்து பேருந்தில் அழைத்து வந்து, அவர்களிடம் கொஞ்ச நேரம் பேசி அனுப்புவது. இதெல்லாம் எவ்வளவு பெரிய கேளிக்கூத்து.

ஒரு தலைவர் என்றால் மக்களை நோக்கி செல்ல வேண்டும். மக்களை போய் பார்க்க வேண்டும். ஊடகங்களை சந்திக்க வேண்டும். அவர்கன் முன்வைக்கிற கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் எல்லோரையும் பனையூருக்கு வா… பார்த்துக் கொள்ளலாம்… என்பது புதிதாக உள்ளது. கோப்புகள் எல்லாம் வீட்டிற்கு தான் செல்லும் போல இருக்கு. கோட்டைக்கு அவர் வருவரா? வரமாட்டாரா? நாளைக்கு ஆட்சிக்கு வந்த பிறகு எவ்வளவு விஷயங்கள் நடைபெறும். அவற்றை எப்படி எதிர்கொள்வார். இது மக்களை குறைத்து மதிப்பிடுகிற வேலையாகும்.

விஜய் பேட்டி அளிக்க மறுக்கிறார் என்றால்… இப்படி ஊடகத்தை நடத்துகிறார் என்றுதான் என்டிடிவி சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவருடைய பெருமைகளை தான் பேச் கொண்டிகிறார்கள். வேறு ஒரு தலைவர் இப்படி செய்தால் பெருமை பேசுவார்களா? அப்போது ஊடகங்கள் எப்படி ஒரு சார்போடு நடக்கின்றன என்று பாருங்கள்.

த.வெ.க.வில் தொண்டரணி பலப்படுத்த திட்டம்! - விரைவில் நிர்வாகிகள் நியமனம்?

விஜய் உச்ச நடிகர். அவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இளைஞர்களிடம் வரவேற்பு உள்ளது. இதனால் ஊடகங்கள் விஜய் குறித்து செய்தி போடுகிறபோது நிறைய பேர் பார்க்கிறார்கள். அவரை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் சேர்ந்து பார்க்கிறார்கள். அதனை பயன்படுத்தி கொள்வோம் என்று தங்களுடைய நலன் சார்ந்து விஜயை அணுகுகிறார்களே தவிர, விஜயின் மீது அக்கறை இருந்தாலும் கூட இப்படி நடக்க மாட்டார்கள். விஜய் ஒரு அரசியல் கட்சியை தொடங்கி, அரசியல் தலைவராகிவிட்டார். அவர் ஒரு நல்ல தலைவராக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் கூட ஊடகங்கள் இப்படி செய்யாது.  இது போன்ற தவறுகள் செய்தால் மக்களிடம் எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தும் எனவே எங்களை இப்படி அழைக்காதீர்கள் என்று விஜயின் தவறுகளை சுட்டிக்காட்டுவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ