spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதேமுதிகவுக்கு 8+1! விஜய் - ராமதாஸ் கணக்கு! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

தேமுதிகவுக்கு 8+1! விஜய் – ராமதாஸ் கணக்கு! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

-

- Advertisement -

திமுக கூட்டணியில் தேமுதிக இணைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், அந்த கூட்டணியில் இணைவது தான் 2029 அரசியலுக்கு அவர்களுக்கு நல்லது என்றும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

திமுக, அதிமுகவில் நடைபெற்று வரும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நிலவரம் குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- திமுக – தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இரட்டை இலக்கத்தில் இடங்கள் வழங்கிட வாய்ப்புகள் உள்ளன. 8 + 1  என்று 10 நாட்களுக்கு முன்பே ஆஃபர் வழங்கப்பட்டது. ஆனால் தேமுதிக தரப்பில் இரட்டை இலக்கத்தில் இடங்களை எதிர்பார்க்கிறார்கள். ஸ்டாலினை சந்திக்கிறபோது அவர்களுக்கு இரட்டை இலக்கம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. அதிமுக கூட்டணியில், பிரேமலதா அன்புமணியை விட கூடுதலாக 2 இடங்கள் வைத்து 20 இடங்களை எதிர்பார்த்தார். 2.7 சதவீதம் வாக்குகள் உள்ளது. விஜய பிரபாகரன் மீது மக்களிடம் நல்ல எண்ணம் உள்ளது. ஊர் முழுவதும் மக்களை திரட்டுகிறோம். எனவே அதிமுக தரப்பில் 20 இடங்களை தர வேண்டும் என்று எதிர்பார்த்தார்.

ஆனால் எடப்பாடி பழனிசாமியை பொருத்தவரை அன்புமணி தான் முக்கியம் என்கிற விதமாகவே செயல்பட்டார். 2024 மக்களவை தேர்தலின்போது அதிமுக உடன் கூட்டணி வைத்தபோதும், தேமுதிகவுக்கு வாக்குகள் வரவில்லை. எனவே எடப்பாடியை நம்பி தேர்தலில் வெற்றி பெற முடியுமா? என்று பிரேமலதாவுக்கு சந்தேகம் உள்ளது. அதனால் அதிமுக கூட்டணியை காட்டி பேரம் பேசி திமுக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்பது தான் தேமுதிகவின் நோக்கமாக உள்ளது.

எடப்பாடி பழனிசாமியை பொருத்தவரை, அதிமுகவுக்கு வாக்கு பலம் உள்ள இடங்களில் அன்புமணி கூட்டணியில் இருந்தால் சீட் கன்வெர்ட் ஆகும் என்று நினைக்கிறார். அன்புமணி, தேமுதிக ஒருங்கிணைப்பு சரிவருமா? என்கிற சந்தேகமும் அவரிடம் உள்ளது. இன்றைக்கு விஜய் களத்தில் இருக்கும் சூழலில், தன்னுடைய இரண்டாம் இடத்தை உறுதிபடுத்துவதற்கு அன்புமணி பலம் என்றும் கருதுகிறார். சீமான் எதிர்ப்பு காரணமாக தெலுங்கு பேசும் மக்கள் திமுகவை நோக்கி நகரும் சூழலில், பிரேமலதா விஜயகாந்த் வருகிறபோது அது இன்னும் அதிகரிக்கும் என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார்.

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இடங்கள் மட்டும்தான் முடிவாக வேண்டும். என்னை பொருத்தவரை பிரேமலதா திமுக கூட்டணியில் இணைவதற்கு தான் அதிக வாய்ப்புகள் உள்ளன. அதுதான் 2029 அரசியலுக்கு அவர்களுக்கு நல்லது. அதையும் தாண்டி அதிமுகவில் 20 இடங்கள் கொடுப்பதற்கு வாய்ப்புகள் குறைவாகும்.

மருத்துவர் ராமதாசை பொருத்தவரை, அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு விஜய் தான். இருவருக்கும் அந்த கூட்டணி அவசியமாக உள்ளது. விஜயை பொருத்தவரை வன்னியர்கள் இடத்தில் வேட்பாளர்கள் இல்லை. அந்த பெல்ட்டில் 60 தொகுதிகளில் தாக்குப்பிடிக்க விஜய்க்கு, ராமதாஸ் தேவையாகும். அதேவேளையில் திருமாவளவன் போதும். ராமதாஸ் தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் புரோ வன்னியர் நிலைப்பாடு எடுத்தார் என்றால், வன்னியர வேட்பாளர்களை அதிகரிக்கலாம். வேல்முருகனை வைத்து குறுக்குசால் ஓட்டலாம். மு.க.ஸ்டாலினை பொருத்தவரை தங்கள் கட்சியில் உள்ள வன்னியர்களுக்கு முக்கியத்துவம் தரும் எண்ணத்தில் உள்ளார். எனவே விஜய்க்கும், ராமதாசுக்கும் வேறு வாய்ப்பு கிடையாது. மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவரான கனிமொழி, திமுக சார்பில் டெல்லியில் காங்கிரஸ் தலைமையிடம் பேசி இரு கட்சிகள் இடையிலான பிரச்சினையை சரி செய்துள்ளார். கனிமொழி பேசியதால் காங்கிரசுக்கு இடங்கள் கூடியுள்ளது. காங்கிரசுக்கு வெகு சிலருக்கு மட்டுமே வாக்கு வங்கி உள்ளது. ஆனால் விஜய் கொடுத்த அழுத்தம் காரணமாக ஸ்டாலின், காங்கிரசுக்கு இடங்களை அதிகரித்து கொடுத்துவிடுவார் என்றே தோன்றுகிறது.

விஜயால் காங்கிரசுக்கு பேர வலிமை கூடிவிட்டது. அதன் காரணமாகவே சசிகலா ட்ரீட்மெண்ட் விஜய்க்கு வழங்க வேண்டும் என்று சொன்னோம். அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே மோடியை கெட்டவராகவும், ராகுல்காந்தியை ஹீரோ போன்றும் காட்ட விஜய் முயற்சித்தார். அதன் காரணமாக மோடி அடிக்கிறார். சசிகலா, நடராஜன் ராகுல்காந்தியை அழைத்துவந்து மோடியிடம் பவர் பாலிடிக்ஸ் செய்தனர். டீமானிடைசேஷனுக்கு எதிராக நடராஜன் இருந்தார்.

மோடியின் நன்மைக்காக இதை நாம் பிஎம்ஓவிடம் ரிப்போர்ட் செய்தோம். அதற்கு பிறகு நடந்தது தெரிந்த விஷயம்தான். அதேபோன்று விஜயும் காங்கிரசுக்கு பேர வலிமையை கொடுத்துவிட்டார். எனவே சசிகலா ட்ரீட்மெண்ட் விஜய்க்கு கொடுத்தே ஆக வேண்டும். ஜனநாயகனை அடித்தாகிவிட்டது. விஜய் அடிபட்ட பாம்பு. இனிமேல் விஜயையும், அவரை சார்ந்தவர்களையும் கிராக் டவுன் செய்ய வேண்டும் என்பது தான் நம் விருப்பம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ