இந்திய விமானத் துறையை அதானிக்கு தாரைவார்க்கும் முயற்சியில் மோடி அரசு இறங்கியுள்ளது. இந்தியாவின் முக்கியமான விமான நிலையங்ளான மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம், ஜெய்ப்பூர் விமான நிலையம், திருவனந்தபுரம் விமான நிலையம் மற்றும் இந்தியாவின் பெரும் பான்மையான விமான றிலையங்களை அதனிக்கு தாரைவாத்துக் கொடுத்துள்ளது. அந்த வரிசையில் தற்போது சென்னை விமான நிலையமும் அந்த வரிசையில் இடம் பெற்றுள்ளது.


இந்திய உள்நாட்டு விமான சேவை கடந்த 10 நாட்களாக முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இண்டிகோ நிறுவன ஊழியர்கள் பற்றாக்குறை என்று கூறினாலும். இது செயற்கையான முடக்கம் என்பதை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்திலும் கூறியுள்ளனர்.
இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்தை சர்வதேச தரத்திற்கு கொண்டுவர, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் டி.ஜி.சி.ஏ., விமானிகளின் பாதுகாப்பு மற்றும் விபத்துகளைத் தடுக்கும் வகையில் ஒரு சட்டம் கொண்டுவந்தது. அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விமான றிநுவனங்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதன்படி இந்த சட்டத்தை இரண்டு கட்டமாக அமல்படுத்த கோர்ட் உத்தரவிட்டது. முதல் கட்டமாக ஜூலை மாதம் இந்த சட்டம் அமலுக்கு வந்தது. அதில் விமானி தினமும் எவ்வளவு நேரம் பறக்கவேண்டும் என்பதற்கும், கட்டாய ஓய்வுக்கும் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. முன்பு ஒரு விமானி 14 மணி நேரம் வரை விமானத்தை இயக்குவார், ஆனால் புதிய விதிமுறையின் மூலம் அதிகபட்சம் 8 முதல் 10 மணி நேரம் மட்டுமே பறக்க அனுமதியளிக்கப்பட்டது. அதேபோல முன்பு ஒரு விமானத்தை இயக்கிய பின்பு 8 மணி நேரம் ஒய்வுக்கு பிறது மீண்டும் பறக்கலாம், ஆனால் புதிய சட்டத்தின்படி கட்டாயம் 12 மணி நேர ஓய்வு தேவை.
கடந்த ஜூலை மாதம் இந்த விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் பிரச்சனை எழுந்தது. இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக நவம்பர் 1-ஆம் தேதி முதல் விமானிகளின் இரவுநேர பணிக்கும், வாரம்தோறும் பறக்கும் நேரத்திற்குமான விதிகள் அமலுக்கு வந்தன. அதாவது முன்பு ஒரு விமானி தொடர்ந்து பல இரவுகள் விமானங்களை இயக்க முடிந்தது. ஆனால் புதிய விதிப்படி இரவு விமானம் இயக்கிய பின் குறைந்தது இரண்டு நாள் முழு ஓய்வு கட்டாயம் அதே போல முன்பு ஒரு விமானி வாரத்திற்கு 55 முதல் 60 மணி நேரம் வரை விமானத்தை இயக்குவார். ஆனால் இப்போதைய விதிகளின்படி அதிகபட்சம் 48 முதல் 50 மணி நேரம் மட்டுமே இயக்கமுடியும்.
இந்த புதிய சட்ட விதிகள் அமலுக்கு வந்ததில். இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையில் 65% இயக்கும் இண்டிகோ நிறுவனத்திற்கு, பைலட்டுகள் கேபின் குரூஸ், உதவி ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் வானிலை, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இண்டிகோ விமானப் போக்குவரத்து ரத்துக்கு காரணம் என, ஊழியர்கள் மூலம் இண்டிகோ நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்தியாவில் இண்டிகோ நிறுவனம் தினசரி 2200 உள்நாடு மற்றும் சர்வதேச விமானப் பயண சேவைகளை வழங்கிவருகிறது. கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி முதல் இண்டிகோ விமான சேவை ரத்தானதால் பயணிகள் கடும்துயரத்துக்கு தள்ளப்பட்டனர். டெல்லி, மும்பை, ஹைதராபாத், சென்னை, திருவனந்தபுரம், கொல்கட்டா, பெங்களூரு ஆகிய விமான நிலையங்களில் இண்டிகோ விமானப் பயணிகள் தங்களது விமானப் பயணம் குறித்து தகவல்தெரியாமல் பல மணி நேரம் காத்திருந்து தவித்தனர். விமான நிலையங்களில் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்களுக்கும். பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மும்பை, டெல்லி என சில விமான நிலையங்களில் கைகலப்பும் ஏற்பட்டது. இண்டிகோ விமானப் பயணிகள் தண்ணீர் உணவின்றி நிற்க, அமரக்கூட இடமில்லாமல் பலமணி நேரம் தவித்தனர். மருத்துவமனை. அலுவலக மீட்டிங், கட்சி விவகாரம், சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சி என எதற்கும் செல்ல முடியவில்லை.
சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்து வைத்திருந்த ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள் என எல்லாம் வீணானது. இது நம் இந்திய சுற்றுலாத் துறையின் வருவாயை முடக்கியது. சர்வதேச அளவில் இந்திய விமானப் பயணம் மீது ஒரு கரும்புள்ளியே விழுந்தது. அன்றைய நாளில் ரஷ்ய அதிபர் புதின் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இண்டிகோ விமானப் பயணிகளின் உடமைகளை மலைபோல குவித்து வைக்க, தேடியெடுத்துச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. சுமார் 4,000 பயணிகள் உடைமைகள் ஒரு வாரமாகியும் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டும் இந்திய விமான போக்குவரத்துத்துறை மௌனம் காத்துவந்தது.
புதிய விதிகளைப் பற்றி முன்கூட்டியே தெரியவந்தும் இண்டிகோ நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய விமானிகளை தேவையான அளவுக்கு பணி நியமனம் செய்யவில்லை.
இண்டிகோ நியமனம் செய்த விமானிகளின் எண்ணிக்கை…
2019- 2020 ஆண்டில்830 விமானிகள்.
2022- 2023 ஆண்டில் 616 விமானிகள்.
2023-2024 ஆண்டில் 631விமானிகள்.
நீதிமன்றம் உத்தரவிட்ட இந்த ஆண்டில் வெறும் 418 விமானிகளை மட்டுமே பணிநியமனம் செய்துள்ளது இண்டிகோ நிறுவனம்.
இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவனமானது. நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவு, டி.ஜி.சி.ஏ. எனப்படும் விமானப் போக்குவரத்து இயக்குனரகம், விமான போக்குவரத்து துறை அமைச்சகம், ஒன்றிய பா.ஜ.க அரசு என்று யாருக்கும் பயப்படவில்லை என்றால் என்ன காரணம்? பயணிகளின் துயரங்களைப் பற்றி இண்டிகோ நிறுவனத்திற்கு அப்படி என்ன அலட்சியம்?
இந்த விவகாரம் மீடியாக்களில் பிரதிபலிக்கவே இண்டிகோ நிறுவனத்தின் சி.இ.ஓ பயணிகளிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார் மேலும் டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் இண்டிகோ விமானப் போக்குவரத்து இயக்கம் சீராகிவிடும் என்று தெரிவித்தபோதும் அதன்பிறகும் சீராகவில்லை.
இந்த விவகாரம் நாடாளுமன்றம் வரை ஒலித்ததால் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, ” ஊழியர்கள் மற்றும் விமானிகள் பற்றாக்குறையால் இந்த குளறுபடி. இதுதொடர்பாக விமான நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம்” என தெரிவித்தாா்.
யார் இந்த இண்டிகோ? சந்தையை கைப்பற்றியது எப்படி?
2014 ஆம் ஆண்டு வரை ஆரோக்கியமாக இருந்த விமானப் போக்குவரத்து சந்தை, அதற்குப் பின் இரட்டை தனியார் விமான நிறுவனமாக உருவெடுக்கக் காரணம் என்ன? மற்ற தனியார் விமான நிறுவனங்கள் என்ன ஆனது?
இண்டிகோ நிறுவனம் 2014-க்கு முன் 30 சதவீத விமான சேவையை இயக்கியது. தற்போது 65 சதவீத விமான சேவையை இயக்கிவருகிறது.
டாட்டா நிறுவனத்தின் ஏர் இந்தியா 2014க்கு முன் 18 சதவீத விமான சேவையை இயக்கியது. தற்போது 30 சதவீத விமானப் போக்குவரத்தை எந்த பிரச்சினையும் இல்லாமல் சீராக இயக்கிவருகிறது.
21% விமான சேவையை இயக்கிவந்த ஜெட் ஏர்வேஸ் தனியார் நிறுவனம் காணவில்லை.
18% விமான சேலையை இயக்கிவந்த ஸ்பைஸ்ஜெட் (spice jet) தனி நிறுவனம் காணவில்லை.
9 சதவீத விமான சேவையை இயக்கிவந்த கோ ஏர் நிறுவனம் காணவில்லை, அதேபோல கிங்பிஷர், பாராமவுண்ட், ட்ரூ ஜெட்(true jet) விஸ்தாரா நிறுவனங்கள் விமானச் சந்தையில் தாக்குப்பிடிக்க முடியாமல் காணாமல் போயின.
தற்போது இண்டிகோ விமானம் 65% டாட்டாவின் ஏர் இந்தியா விமானம் 30% ஐந்து சதவீதம் மட்டுமே மற்ற தனியார் நிறுவனங்கள் விமானத்தை இயக்கி வருகின்றன.
இந்திய விமானத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் இண்டிகோவை விமான போக்குவரத்து ஆணையம், அமைச்சரகம் என யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் எங்கிருந்து அவ்வளவு தைரியம் அவர்களுக்கு வந்தது? ஒன்றிய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் கையாலாகாத அரசாக இருக்கவேண்டும் அல்லது கையூட்டு வாங்கிய அரசாக இருக்கவேண்டும்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்ட பின்பு, சுமார் 610 கோடி டிக்கெட் பணம் பயணிகளுக்கு திருப்பியளிக்கப்பட்டது என்றும், பாதிக்கப்பட்ட விமானப் பயணிகளுக்கு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரை இழப்பீடு வழங்கப்படும் என்றும் இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துக்ளது. இந்த நிலையில் இந்தய விமானப் போக்குவரத்து ஆணையம் புதிய விதிகளை அமல்படுத்த அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவகாசத்தை நீட்டிப்பு செய்துள்ளது.
விஜயின் ஈரோடு பயணத்தில் சிக்கல்! சிபிஐ-யால் பெரும் நெருக்கடி! தராசு ஷ்யாம் நேர்காணல்!


