spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரை"மோதி பார்க்கலாம் வா"... ஓங்கி அடித்த ஸ்டாலின்! அலறிய அமித்ஷா, சிதறிய விஜய்!

“மோதி பார்க்கலாம் வா”… ஓங்கி அடித்த ஸ்டாலின்! அலறிய அமித்ஷா, சிதறிய விஜய்!

-

- Advertisement -

ஒன்றிய பாஜக அரசை, ஆர்எஸ்எஸ்-ஐ தீவிரமாக எதிர்த்து திமுக சண்டையிட்டு வரும் நிலையில், தவெக தனது சொந்த கட்சியினருடன் சண்டையிட்டு கொண்டிருப்பதாக ஊடகவியலாளர் செந்தில்வேல் குற்றம்சாட்டியுள்ளார்.

senthilvel new
senthilvel new

இது தொடர்பாக ஊடகவியளாளர் செந்தில் வேல் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் 1.30 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 91 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். ஓரிடத்தில் 1.30 லட்சம் பேர் திரண்ட போதும் ஒரு நாற்காலிகள் கூட உடையவில்லை. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் இளைஞர்கள். இதில் எந்த வித கூட்டநெரிசலும் ஏற்படாமல் கூட்டத்திற்கு வந்த அனைவரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பினார்கள். அனைவருக்கும் தண்ணீர், குளிர்பானம், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டன. எல்லோரும் வயிறார சாப்பிட்டார்கள். யாரும் கத்தி கூப்பாடு போடவோ, சாலையை மறிக்கவோ இல்லை.

we-r-hiring

காரணம் இது திமுகவின் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். இதை சாத்தியப்படுத்தி காட்டியவர் உதயநிதி ஸ்டாலின். குறுகலான இடத்தில் 5000 பேரை திரட்டி, அங்கு பல மணி நேரம் தாமதாமாக வந்து, கூட்டத்தினர் மூச்சுத்திணறலில் இறந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் ஓடிவந்து பனையூர் பங்களாவில் பதுங்கிக்கொள்வார்கள். இப்படித்தான் சமீப கால அரசியலை தமிழ்நாடு பார்த்தது. அந்த பார்வையில் இருந்து 1.30 லட்சம் பேர் கூடியும் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லையா? என்று பொதுமக்களிடம் கேள்வி எழுகிறது. இந்த கேள்விக்கு அவர்களே மேடையில் பதில் சொல்லியுள்ளனர்.

திமுக இளைஞரணி கூட்டத்தில் உதயநிதியும், ஸ்டாலினும் பேசிய பேச்சுக்கள் மிகவும் சிறப்பானது. இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என்று நினைக்கிறது. நான் தமிழ்நாட்டில் பாஜக காலூன்றக் கூடாது என்று நினைக்க காரணம் வெறும் தமிழ்நாட்டின் பாதுகாப்பிற்காக மட்டும் அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் நன்மைக்காகவும், ஒட்டு மொத்த மானுடத்தின் நன்மைக்காகவும் பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அமித் ஷா தனியாக வந்தாலும், ஒட்டுமொத்த சங்கி கூட்டத்தை அழைத்து வந்தாலும், நேருக்கு நேர் மோதி பார்த்துக்கொள்ளலாம் என்று சவால் விடுத்துள்ளார். அதற்கு முன்பாக பேசிய உதயநிதி ஸ்டாலின், பாஜகவை வெளுவெளு என்று வெளுத்தார். அத்துடன் நிற்காமல், இன்று மாநாடு என்றால் பல கட்சிகளில் ஆயிரக்கணக்கில் கூட இல்லை. நூற்றுக்கணக்கில் இளைஞர்களை திரட்டுவது சுலபமானது இல்லை. ஆனால் இளைஞரணி நிர்வாகிகளே 1.30 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்றால் திமுக எப்படிபட்ட இயக்கம் என்று பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்.

பொதுவாக இளைஞர்கள் அதிகளவில் கூடினால், அவர்களிடம் கட்டுப்பாடு இருக்காது என்கிற பிம்பம் தற்போது வந்துள்ளது. காட்டாற்று வெள்ளம் போன்று போய்க் கொண்டே இருப்பார்கள். யார் கட்டுப்பாட்டிலும் இருக்க மாட்டார்கள் என்கிற ஒரு பிம்பம் இன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திமுக கூட்டம் அப்படியானது அல்ல என்று உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார். மேலும் அவர் பேசுகிறபோது,  ஆதிக்கத்திற்கு அடிபணியாத, எந்த நேரத்திலும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத திமுகவை சிலர் மிரட்டி பார்ப்பதாக கூறினார்.

குஜராத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித்ஷா, நாங்கள் பீகாரில் வெற்றி பெற்றுவிட்டோம். அடுத்து எங்களுடைய இலக்கு மேற்கு வங்கமும், தமிழ்நாடும் தான். அங்கேயும் நாங்கள் காலூன்றுவோம் என்று மிரட்டி பார்க்கிறார். நீங்கள் என்ன வேண்டுமானாலும் மிரட்டுங்கள். உங்களுடைய மிரட்டல்களுக்கு தமிழ்நாடு ஒருபோதும் அஞ்சாது, அடிபணியாது என்று சொல்கிறார். இதையே தான் முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னார், டெல்லிக்கு எப்போதும் தமிழ்நாடு அவுட் ஆப் கன்ட்ரோல் என்று சொன்னார்.

திமுக இவ்வளவு உறுதியாக பாஜகவை எதிர்த்து சண்டை போட்டுக் கொண்டிருக்கும் சூழலில், விஜய் தன்னுடைய சொந்த கட்சியினரிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அதுவும் புஸ்ஸி ஆனந்தை வைத்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இதுவரை ஒரு கவுன்சிலர் பதவிக்கு கூட வராத தவெகவில் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிக்கு எதிராக, அம்மாவட்டத்தை சேர்ந்த மற்ற நிர்வாகிகள் தவெக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணத்தை வாங்கிக்கொண்டு கட்சியில் நிர்வாகிகளை நியமிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், ஆதவ் அர்ஜுனாவின் புகைப்படத்தை சுவரொட்டியில் பயன்படுத்தியதால் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள். அப்போது கட்சியில் விஜய்க்கு அடுத்தபடியாக உள்ள புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.நிர்மல் குமார் உள்ளிட்டோர் இடையே மோதல் போக்கு நிலவுவது வெளிப்படையாக தெரிகிறது. குறிப்பாக புஸ்ஸி ஆனந்த, ஆதவ் இடையே மோதல் உச்சத்தில் இருப்பது தெரிகிறது.

ஒருபுறம் திமுக, பாஜக – ஆர்எஸ்எஸ்-ஐ எதிர்த்து, ஆளுநரின் அடவாடித் தனத்தை எதிர்த்து போராடி கொண்டிருக்கிறது. மறுபுறம் தவெகவில் சொந்த கட்சியின் நிர்வாகிகளை எதிர்த்து போராடி கொண்டிருக்கிறார்கள். திமுகவில் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 91 தொகுதிகளில்  1.30 லட்சம் இளைஞர்கள் பொறுப்புகளில் மட்டும் இருக்கிறார்கள் என்றால், இளைஞர்கள் எவ்வளவு பேர் திமுகவில் இருக்கிறார்கள் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

இன்னும் மற்ற மண்டலங்களிலும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்த இருக்கிறார்கள். நிர்வாகிகள் மட்டும் 5 லட்சம் பேர் உள்ளதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொருவரின் கீழ் 10 பேர் வைத்துக்கொண்டாலும் 50 லட்சம் பேர் இருப்பார்கள். இளைஞரணி மூலமாக ஒரு கோடி வாக்குகளை திரட்டும் முயற்சியில் திமுக ஈடுபட்டிருக்கிறது. நிச்சயமாக திமுக மீண்டும் அமைக்கும். அதில் இளைஞர் அணியின் பங்கு பெருமளவில் இருக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ