spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைபார்ப்பன சொம்பு சீமான்! வெளுத்து வாங்கிய ஆளூர் ஷாநவாஸ்!

பார்ப்பன சொம்பு சீமான்! வெளுத்து வாங்கிய ஆளூர் ஷாநவாஸ்!

-

- Advertisement -

காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு, தமிழ்நாடு என்று பெயர் வைக்கக்கோரி சங்கரலிங்கனார் போராடி உயிர் துறந்த நிலையில், பின்னர் ஆட்சிக்கு வந்த அண்ணா நாடாளுமன்ற ஒப்புதலுடன் தமிழ்நாடு என பெயர் சூட்டினார் என ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற இசை முரசு நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழாவில், விடுதலை சிறுத்தைகள் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-  தனது 13 வயதில் இந்தித் திணிப்பை எதிர்த்து போராடி சிறை சென்றவர் நாகூர் ஹனிபா. பின்னர் அவர் திருவாரூருக்கு இடம்பெயர்ந்தார். அங்குள்ள ஓடம்போக்கி ஆற்றில் மணலை குவித்து அதன் மீது நின்று டவுசர் போட்ட ஒருவர் பாடினார். டவுசர் போட்ட மற்றொருவர் பேசினார். அப்படி பேசியவர் கலைஞர். பாடியவர் நாகூர் ஹனிபா.

கலைஞர் பேசும் முன்பாக பாடல் பாடி கூட்டத்தை திரட்டி, அதன் பிறகு கலைஞரை பேச வைத்து கண்ணியப்படுத்திய மாமேதை தான் இசை முரசு நாகூர் ஹனிபா. அண்ணாவுக்கு பிறகு யார் தலைமை? என்கிற கேள்வி எழுகிறபோது, “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே” என்று அண்ணாவுக்கு பின் கலைஞர்தான் என்ற கருத்தாக்கத்தை பொதுமக்கள் மத்தியில் விதைத்த குரல் நாகூர் ஹனிபாவுடையது. திமுக நடத்திய அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று 11 முறை சிறை சென்றவர் நாகூர் ஹனிபா. திராவிட இயக்கத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை அவர் செய்துள்ளார். இப்படிப்பட்ட ஆளுமையை நாம் நினைவு கூற வேண்டும்.

கவிதைகள் மூலம் மிகப்பெரிய அணி திரட்டல்கள் செய்தவர்கள் உண்டு. பாவேந்தர் பாரதிதாசன், அப்படிபட்ட புரட்சிகரமான கவிதைகளை எழுதி திராவிட இயக்கத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார். பாரதியார் விடுதலைப் போராட்டத்திற்கான பாடல்களை எழுதி மிகப்பெரிய பங்களிப்பை செலுத்தியிருக்கிறார். நமக்கு யார் மீதும் வெறுப்பு இல்லை. நாம் யாரையும் பிரித்துப் பார்க்கவில்லை. இங்கே பாரதியார் குறித்த படத்தை எடுத்த ஞானராஜ சேகர்தான், பெரியார் குறித்தும் படம் எடுத்துள்ளார். அவருக்கு பாரதியார் மீது வெறுப்பு இல்லை. பெரியாரை உள்வாங்கி நம்மிடம் சேர்த்த அந்த இயக்குநர்தான், பாரதி குறித்தும் நம்மிடம் கொண்டு சேர்த்துள்ளார்.

ஆனால் இன்றைக்கு இளைய தலைமுறையிடம் எப்படிபட்ட கருத்து விதைக்கப்படுகிறது? பாரதி விழாவில் போய் பங்கேற்று, பிராமண கடப்பாரையை கொண்டு திராவிட கோட்டையை தகர்ப்பேன் என்று ஒருவர் சொல்கிறார். இதற்காகவா இசை முரசு பாடுபட்டார்? அவருடைய எந்த பாடலிலும் வெறுப்பு இருக்காது. பல நூற்றுக்கணக்கான பாடல்களை பாடி இருக்கிறார். ஒரு பாடல் கூட மற்றொரு சமூகத்தை இழிவுபடுத்தும் விதத்தில் ஒரு வார்த்தை இருக்காது. ஒரு தரப்புக்கு எதிராக இன்னொரு தரப்பை தூண்டும் விதமாக ஒரு சொல் இருக்காது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - பாசிச எதிர்ப்பின் பாரம்பரியம்!

தமிழ்நாடு என்கிற பெயரை அண்ணா வைத்ததில் ஒன்றுமில்லை. அண்ணா ஸ்டிக்கர் ஒட்டிவிட்டார் என்று சொல்கிறார். ஏனென்றால் பாரதி செந்தமிழ் நாடெனும் போதினிலே… என்று எப்போதோ பாடிவிட்டார் என்கிறார். பாரதி பாடியது உண்மை. கல்வியில் சிறந்த தமிழ்நாடு.. என்று என்றைக்கோ பாடிவிட்டாராம். யாராவது மறுத்தோமா? பாரதியை யாராவது கொச்சைப்படுத்தினார்களா? பாரதிக்கு இந்த அரசு விழா நடத்தவில்லையா? இப்படி ஒரு நிலை இருக்கும்போது, ஆர்எஸ்எஸ் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாரதியை போற்றுகிறேன் என்கிற பெயரில் திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்துபவர்களுக்கு பின்னால் இருக்கக்கூடிய நோக்கம் என்ன? இந்த கேள்விக்கு விடை வேண்டும்.

சங்கரலிங்கனார், தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என உண்ணாவிரதம் இருந்து இறந்து செத்து மடிந்தாரே, அது பாரதி பாடியதற்கு முன்பாகவா? அல்லது பாரதி பாடியதற்கு பின்பாகவா? தமிழ்நாடு என்று பெயர் வந்த பிறகு எதற்கு ஒரு போராடினார்? உயிர் நீத்தார்? அப்போது சங்கரலிங்கனார் முட்டாளா? அந்த போராட்டத்திற்கு பொருள் இல்லையா? யார் பாடினாலும் அது பாட்டில் இருந்ததே தவிர, அரசாங்க ஏட்டில் இல்லை.

சங்கரலிங்கனார் போராடிய காலத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அந்த போராட்டத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் தான் அவர் போராடி மடிந்து போகிறார். அண்ணா ஆட்சிக்கு வந்த பிறகு தான் அந்த பெயருக்கு சட்ட அங்கீகாரம் கிடைத்தது. நாடாளுமன்றத்தில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு தமிழ்நாடு என்கிற பெயர் சூட்டப்பட்டது என்றால் அது ஸ்டிக்கர் ஒட்டுகிற வேலையா? ஏன் அதற்கு முன்பாக இருந்தவர்கள் அந்த வேலையை செய்யவில்லை? எவ்வளவு பெரிய பங்களிப்பை எவ்வளவு மலினப்படுத்துகிறார்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று என்று பாரதி என்றைக்கோ பாடிவிட்டார். திராவிட இயக்கம் தான் வந்து படிக்க வைத்ததா? என கேள்வி எழுப்புகிறார்கள்.

பாரதி பாடிய பிறகுதானே, காமராஜருக்கு கல்விக்கண் திறந்தவர் என்கிற பட்டத்தை கொடுத்தோம். பாரதி பாடிய பிறகு கல்வி கண்ணை திறக்க வேண்டிய தேவை ஏன் காமராஜருக்கு இருந்தது? அப்போது கல்வி நிலையங்கள் யாரோ சிலருடைய கட்டுப்பாட்டில் இருந்தன. அனைவருக்குமானதாக இல்லை. குருகுல கல்வியாக, திண்ணைப்பள்ளியாக இருந்ததை ஒரு சாராருக்கு மட்டுமே இருந்ததை, வெகுமக்கள் பள்ளியாக மாற்றியது காமராஜர் காலம். கல்வியை கொண்டு எல்லா மக்களுக்கும் சேர்த்த காலம். எனவே காமராஜரை நெஞ்சில் வைத்து போற்றுகிறோம்.

திமுக - அண்ணா அறிவாலயம்

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பிள்ளைகளும் தலை நிமிர்ந்து இருக்கிறோம் என்றால் காமராஜரின் பங்களிப்பு மகத்தானது. போற்றுகிறோம். காமராஜர் பார்த்த அந்த வேலையை தான் இன்றைக்கு அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்த வேலையை தான் 100 வருடமாக திராவிட இயக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த ஒட்டுமொத்த போராட்டத்தையும் கொச்சைப்படுத்திவிட்டு, இந்த காலத்தில் அந்த கடப்பாரையை கொண்டுவந்து இதை உடைப்பேன் என்றால் அது வரலாற்றுக்கு செய்கிற மிகப்பெரிய துரோகம். அந்த துரோகத்தை அம்பலப்படுத்த இசை முரசு நாகூர் ஹனிபா போன்ற ஆளுமைகளை நாம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.

திராவிட இயக்கத்தின் பங்களிப்பை நாம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும். திருமாவளவன், இன்றைக்கு திராவிட இயக்கத்தின் தேவையை தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். காரணம் திராவிட இயக்கம் இன்றைக்கு மிக மிக குறிவைக்கப்பட்ட இயக்கமாக உள்ளது. முன்பு நேரடியாக அந்த எதிரிகளை பார்த்தோம். இன்றைக்கு நம்மில் இருந்தே , திராவிட இயக்கத்திற்கு எதிராக சிலரை பேச வைக்கிறார்கள். இது ஆபத்தானது. அதை நம்பி நம் பிள்ளைகள் அவர்கள் பின்னால் சென்றுவிடுவார்கள். அவர்கள் நம் தலைவர்கள் இல்லை. இதற்கு பின்னால் இருக்கக்கூடிய சக்திகள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை என்கிற செய்தியை நாம் சொல்ல வேண்டி இருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ