spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அதிமுக கூட்டணியில் தொடரும் சிக்கல்…2026 தேர்தலில் கைக்கொடுக்குமா?... பாஜகவின் தேர்தல் வியூகம்...

அதிமுக கூட்டணியில் தொடரும் சிக்கல்…2026 தேர்தலில் கைக்கொடுக்குமா?… பாஜகவின் தேர்தல் வியூகம்…

-

- Advertisement -

அதிமுக பாஜக கூட்டணியில் தன்னையே முன்னிலைப்படுத்த எடப்பாடி மேற்கொண்டுவரும் முயற்சியால் கூட்டணியில் சிக்கல் ஏற்பட தொடங்கியுள்ளதாகவும் பாஜகவின் திட்டங்கள் பலனளிக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் விமசகர்கள் கூறும் நிலையில் இதுகுறித்து விவரிக்கிறது இச்செய்தி தொகுப்பு.அதிமுக கூட்டணியில் தொடரும் சிக்கல்…2026 தேர்தலில் கைக்கொடுக்குமா?... பாஜகவின் தேர்தல் வியூகம்...சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் கட்சிகளின் அடுத்தடுத்த ஆட்டங்கள் தொடங்கியுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பாகவே அதிமுகவுடன் கூட்டணியை அமித்ஷா அவசர கதியில் உறுதி செய்தார். காரணம் அதிமுக தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைத்து விடலாம் என்று பரவிய தகவலாலும் திமுக கடந்த சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்த கட்சிகளுடனே வலுவாக இருந்ததோடு 2026 தேர்தலையும் திமுகவுடன் தான்  கூட்டணி என்பதை காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்பட அனைத்து கட்சிகளும் உறுதிப்படுத்திய நிலையில் தமிழகத்தில் எப்படியாவது கூட்டணி அமைத்து விட வேண்டும் என்ற முன்முனைப்பை பாஜக மேற்கொண்டது.

அந்த அடிப்படையில் அதிமுக பாஜகவிற்கு அடிபணிந்துவிட்டது என்ற விமர்சனங்களும் கூட பாஜக அதிமுக கூட்டணியில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து  ஆட்சியில் பங்கா, யார் முதலமைச்சர் வேட்பாளர் அனைத்து முடிவுகளும் பாஜக எடுக்குமா அதிமுக எடுக்குமா என்ன அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் பாஜக சில நேரம் மௌனமும் அதிமுக நாங்கள்தான் தலைமை என்றும் சொல்லிக் கொண்டிருந்தது.

we-r-hiring

இந்த நிலையில் தொடர்ந்து அதிமுக பாஜக கூட்டணி விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தது. மேலும் கடந்த 2021 சட்டசபை தேர்தலை பொருத்தவரை அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்து 20 இடங்களை போட்டியிட்டது. ஆனால் நான்கு இடங்கள் மட்டுமே வெற்றி பெற்றதோடு, அதிமுகவும் எதிர்க்கட்சியாக மட்டுமே வர முடிந்தது.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லாமல்  அதிமுக போட்டியிட்டதோடு அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அப்போதைய  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது பல்வேறு எதிர்மறையான கருத்துகளை தெரிவித்ததோடு பாஜக மீது கடும் விமர்சனங்களையும் முன்வைத்தார். அந்தத் தேர்தலில் அதிமுக படு தோல்வியையும் சந்தித்தது.

2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமையுமா அமையாதா என்ற கேள்விகள் இருந்து கொண்டிருந்த நிலையில் அதிரடியாக அமித்ஷா தமிழகம் வந்து அவசர அவசரமாக அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்தார் அதுவும் கடும் விமர்சனங்களுக்கு உண்டானது.

அதிமுக கூட்டணியில் தொடரும் சிக்கல்…2026 தேர்தலில் கைக்கொடுக்குமா?... பாஜகவின் தேர்தல் வியூகம்...

அதிமுக பாஜக கூட்டணியில் வலுவான கட்சிகள் ஏதும் கூட்டணிக்கு முன் வராத நிலையில் இதற்கு முன்பாக கூட்டணியின் இருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த டிடிவி தினகரனும் எடப்பாடியின் மீது விமர்சனங்களை முன்வைத்து கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

முன்னாள் ஓ.பன்னீர்செல்வமும் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதோடு வரலாற்றில் முக்கியத்துவமாக அறிவிப்பை வெளியிட போவதாகவும் பகிரங்கமாக தெரிவித்தார். புதிய கட்சி  தொடங்கலாம் என தகவல்கள் வெளியானதால் பாஜகவிற்கு என்ன செய்வதென்றே தெரியாத நிலை ஏற்பட்டது. செங்கோட்டையனும் தவேகவில் இணைந்து விட்டார்.

தேமுதிக, பாமக,  போன்ற கட்சிகளும் கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் அவர்களும் பிடி கொடுக்கவில்லை. இப்படியான ஒரு சூழ்நிலையில்தான் பாஜக வகுத்த திட்டங்கள் கை கொடுக்க வில்லையா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டது.

இதைத் தொடர்ந்து தான் உடனடியாக ஓ பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டு டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார். பின்னர் டிசம்பர் 15ஆம் தேதி தன்னுடைய முடிவை அறிவிப்பதாக இருந்த முடிவை ஓ.பன்னீர்செல்வம்  தள்ளி வைத்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி பொறுத்தவரையும் பாஜகவினுடைய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இடம் நெருக்கமாக இருந்தார். அப்போது கூட்டணியில் எவ்வித விரிசலும் ஏற்படவில்லை. பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்ற பின்பு எடப்பாடியுடன் நட்பு கொண்டாடிய நிலையில் தான் டிடிவி தினகரன் இந்த முடிவை எடுத்திருப்பதாக அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே அதிமுகவுடன் கூட்டணி உறுதி செய்து பின்பு தற்போது வரைக்கும் பெரிய கூட்டணி உருவாக்காத நிலை பாஜகவிற்கு ஏற்பட்டு இருக்கிறது.அதிமுக கூட்டணியில் தொடரும் சிக்கல்…2026 தேர்தலில் கைக்கொடுக்குமா?... பாஜகவின் தேர்தல் வியூகம்...இந்த நிலையில் அணிகளாக உள்ள அதிமுகவினரை எடப்பாடி இணைப்பாரா என்ற எதிர்பார்ப்பும் உருவாகிய சூழலில் அதிமுகவினுடைய பொதுக்குழு கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில் அணிகள் இணைப்பு முடிவு அறிவிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. காரணம், தென் மாவட்டத்தில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி பேசி வருவதாகவும் கூட தகவல் வெளியாகியது. ஆனால் அதிமுகவினுடைய பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக தன்னுடைய தலைமையில் தான் கூட்டணி உள்ளதாகவும் அடுத்த கட்ட கூட்டணி பேச்சு வார்த்தைகளும் தனது தலைமையில் நடைபெறும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் பாஜகவால் எடப்பாடி பகைத்துக் கொள்ளவும் முடியவில்லை. எனவே பொதுக்குழு முடிந்த அடுத்த மறுநாளே டெல்லிக்கு புறப்படுவதற்கு முன்பு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.

அப்போது எடப்பாடி பொறுத்தவரை அதிமுக அணிகள் இணைப்பு இல்லை என்பதில் உறுதியாக இருப்பதும் தன்னுடைய தலைமையில் தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தாக கூறப்படுகிறது.

தனது முடிவில் உறுதியாக இருப்பதை வெளிப்படுத்தும் விதமாக 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான விருப்பம் மனுக்களை பெறுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. தனக்கு அதிகமான தொகுதிகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.அதிமுக கூட்டணியில் தொடரும் சிக்கல்…2026 தேர்தலில் கைக்கொடுக்குமா?... பாஜகவின் தேர்தல் வியூகம்...

கடந்த முறை 20 இடங்கள் வழங்கப்பட்ட நேரத்தில் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருப்பதால் தற்போது ஒரு சில இடங்களில் மட்டுமே சேர்த்து கொடுக்கலாம் என்றும் எடப்பாடி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பாஜகவை பொறுத்தவரை இரட்டை இலக்காக 50 இடங்களுக்கு மேலாக பெறுவதற்கான முயற்சிகளை முன்னிருத்தி காய்நகர்த்த தொடங்கி இருக்கிறது பாஜக என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இன்னும் நான்கு மாதமே இருக்கக்கூடிய நிலையில் என்னென்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுவதோடு பாஜகவிற்கும் அதிமுக இல்லாவிட்டால் தனது கூட்டணி நிலை என்ன ஆகும் என்ற அச்சத்தோடு அதிமுக கூட்டணியில் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் அண்ணாமலை மற்றொருபுறம் இயங்கி வரக்கூடிய நிலையில் அது மேலும் அதிமுக பாஜக கூட்டணிக்கான சிக்கல் முடிந்து விடுமோ என்ற அச்சமும் பாஜக வட்டத்தில் நிலவுகிறது.

இந்த நிலையில் தான் அதிமுக பாஜக கூட்டணி என்பது முன்பே உறுதி செய்யப்பட்டாலும் பெரிய கட்சிகள் கூட்டணிக்கு வரவில்லை. எடப்பாடி பழனிச்சாமியும் தான் முதல்வர் வேட்பாளர் தனது தலைமையில் கூட்டணி அணிகள் இணைப்பு இல்லை என்பதில் தொடர்ந்து பிடிவாதமாக இருப்பதால்  அதிமுக பாஜக கூட்டணியில் சிக்கல் நீடித்து வருகிறது.

திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன? விளக்கும் மூத்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!

MUST READ