திமுகவை வீழ்த்தும் சக்தி படைத்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான் எனவும், திமுகவை வீழ்த்த தமிழக வெற்றி கழகத்தால் தான் முடியும் என்ற விஜயின் பேச்சை ஏற்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை எம்.ஜி.ஆ.ர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் உதயக்குமார், குறித்து பேச வேண்டிய அவசியமும், கவலைப்பட வேண்டிய தேவையும், கருத்து சொல்ல வேண்டிய உரிமையும் இல்லை என்று தெரிவித்தார்.
விஜய் அரசியல் களத்தில் இருக்கிறாரா இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும். தேர்தல் முடிவு அன்று தான் யார் யார் களத்தில் இருக்கிறார்கள், யார் காணாமல் போகிறார்கள் என்பது தெரியவரும் என்று கூறினாா்.

திமுகவை வீழ்த்தும் சக்தி யாருக்கு உள்ளது என்பதை தனிப்பட்ட ஒரு கட்சி தலைவரின் கருத்தை ஏற்க முடியாது. திமுக எப்போதெல்லாம் தவறு செய்கிறதோ அப்போதெல்லாம் அதை எதிர்த்து விழிப்புடனும் தகுதியுடனும் திறமையுடனும் செயல்பட்டு, மக்களின் செல்வாக்கைப் பெற்ற ஒரே கட்சி அதிமுக தான் என்றும் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தினார். அது தான் மக்களின் தீர்ப்பும் என்று கூறினாா்.
மேலும், எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புறக்கணித்து தமிழ்நாட்டில் யாராலும் அரசியல் செய்ய முடியாது என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் கூட எம்ஜிஆரை” பெரியப்பா ” என அழைப்பதை நினைவூட்டினார். எம்ஜிஆர் ஜெயலலிதா இருவரும் அதிமுகவின் சொத்து என தெரிவித்தார்.
அதிமுக அம்மா பேரவை செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்…


