‘பராசக்தி’ படக்குழு புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் சின்னத்திரையில் பணியாற்றிய இவர் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘அமரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்த நிலையில் இவருடைய அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. ஆனாலும் ‘மதராஸி’ திரைப்படம் வெற்றிப் படமாக அமையவில்லை. ஆதலால் அடுத்தது ரசிகர்கள் பலரும் ‘பராசக்தி’ படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படம் சிவகார்த்திகேயனின் 25 வது படமாகும். இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இதில் ரவி மோகன் வில்லனாக நடிக்க அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் படமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 20) தீபாவளி தின ஸ்பெஷலாக புதிய அப்டேட்டை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
The Start Towards our Final Destination 🚉🧨
பராசக்(தீ)பாவளி நல்வாழ்த்துக்கள்🔥✨
That’s a Wrap for #Parasakthi#ParasakthiFromPongal #ParasakthiFromJan14@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @redgiantmovies_ @Aakashbaskaran @sreeleela14… pic.twitter.com/O3A5bykL2N
— DawnPictures (@DawnPicturesOff) October 20, 2025

அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் சிவகார்த்திகேயன், ரவி, அதர்வா ஆகியோர் ஒரே ஃப்ரேமில் காட்டப்பட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள ஜி.வி. பிரகாஷின் இசை மிரட்டலாக இருப்பதை பார்க்கும்போது படத்திலும் ஜி.வி. பிரகாஷ் தரமான சம்பவம் செய்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.