அரசன் படத்தின் மாஸான போஸ்டர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிம்பு அடுத்தது ‘அரசன்’ எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சிம்புவின் 49 ஆவது படமான இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படமானது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வடசென்னை’ படத்தின் யுனிவர்சாக உருவாக இருக்கிறது. மேலும் முதல் முறையாக இணைந்துள்ள வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. அதே சமயம் இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ இன்று (அக்டோபர் 16) மாலை திரையரங்குகளில் வெளியாகும் எனவும், நாளை (அக்டோபர் 17) காலை சமூக வலைதளங்களில் வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இதனை கொண்டாடி தீர்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது எக்ஸ் தள பக்கத்தில், “அரங்கம் அதிர.. ஆர்ப்பாட்டம் தொடர.. இனிதே கொண்டாடுவோம்” என்று குறிப்பிட்டு ‘அரசன்’ படம் தொடர்பான செம மாஸான போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் சிம்புவின் முகம் முழுக்க ரத்தம் வடிகின்றன. இந்த போஸ்டர் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் படு வைரலாகி வருகிறது.