அரசன் பட ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிம்பு அடுத்ததாக ‘அரசன்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். கலைப்புலி எஸ். தாணுவின் தயாரிப்பிலும், வெற்றிமாறனின் இயக்கத்திலும் இந்த படம் உருவாக இருக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படமானது வெற்றிமாறனின் ‘வடசென்னை’ பட யுனிவர்சாக உருவாக இருக்கிறது. மேலும் முதன்முறையாக இணைந்துள்ள வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தைக் கொண்டாட ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தயாராகி வருகிறார்கள். சிம்புவின் 49வது படமான இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், படப்பிடிப்பு தீபாவளிக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த ப்ரோமோவில் தனுஷ் ரெஃபரன்ஸ் இடம்பெற்றுள்ளது.

மேலும் நடிகர் சிம்பு இரண்டு விதமான லுக்கில் காட்டப்பட்டுள்ளார். அவருடைய இரண்டு தோற்றங்களுமே வேற லெவலில் இருக்கிறது. அனிருத்தின் பின்னணி இசை மிரட்டலாக வந்துள்ளது. இந்த ப்ரோமோவின் இறுதியில் இப்படம் வடசென்னை படத்தின் யுனிவர்ஸ் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நேற்றே (அக்டோபர் 16) திரையரங்குகளில் இந்த ப்ரோமோ திரையிடப்பட்டு, ரசிகர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ள இந்த ப்ரோமோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.