அல்வா பாக்கெட் வைத்து ரீல்ஸ்க்காக அரசியல் செய்யும் நிலைக்கு எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார் என அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று கூறியதோடு, ஒரு அல்வா கவரை கொடுத்துள்ளாா். அதில் ”திமுகவின் உருட்டு கடை அல்வா” என்று அச்சிடப்பட்டிருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சா் சிவசங்கா், “மக்களிடம் சென்று எடப்பாடி பழனிசாமி கேட்கட்டும்; நலத்திட்டங்கள் பற்றி மக்கள் சொல்வார்கள். தமிழ்நாடு அரசின் திட்டங்களை மற்ற மாநிலங்கள் பின்பற்றி வருகின்றனர். விடியல் பயணத் திட்டத்தை அண்டை மாநிலங்களும் அமல்படுத்தி வருகின்றன. காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்த போவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், அதிமுகவை திருட்டு கடையாக மாற்றியவா் EPS எனவும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்காக அரசியல் செய்ய வேண்டிய நிலைக்கு எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார் எனவும் கடுமையாக விமா்சித்துள்ளாா்.
நீதிமன்றத்தில் கண்ணியம் தேவை – கோட் இன்றி ஆஜரான பாஜக செலலாளருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்